• Sunday 22 December, 2024 12:05 PM
  • Advertize
  • Aarudhal FM

ஆதார் அடையாள அட்டையை (Aadhar Card) அந்திக்கிறிஸ்துவின் செயலாக கருதலாமா? விசுவாசிகள் நாம் அதை எடுக்கவேண்டுமா?

அந்திக்கிறிஸ்துவின் காலம் இன்னும் வரவில்லை. இன்னும் நிறைவேறவேண்டிய தீர்க்கதரிசன சம்பவங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் அந்திக்கிறிஸ்துவின் செயல் அவனுக்காக உள்ள ஆயத்த ஏற்பாடுகள் இப்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றன. ஆகவே இப்போதுள்ள சூழ்நிலையில் முதலாவது அவர் வருகைக்கு அல்லது நம் மரணத்துக்கு நம்மை ஆயத்தப்படுத்தி நம் சாட்சியுள்ள வாழ்க்கை மூலமாக கிறிஸ்துவை மக்களுக்கு காட்டி மற்ற ஆத்துமாக்களுக்காக நாம் ஜெபிப்பதும், சுவிசேஷம் அறிவிப்பதும், சுவிசேஷம் அறிவிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் இரண்டாம் வருகையைப்பற்றி அறிவிப்பதும் மிக முக்கியமாகிறது. கடைகளில் காணப்படும் கம்ப்யூட்டர் கோடுகள், கம்யூட்டர் அடையாளங்கள் லேசர் மூலம் அறியப்படுதல், சிப் (Chip) நம் கைகளில் பொருத்தப்படுதல் இவைகள் எல்லாம் பொருளாதார நவீன மயமாகக்கப்படுதலின் ஆரம்பம் ஆகும். இவைகளோடு நம் ஒத்துப்போக வேண்டியது இப்போதையகாலத்தின் கட்டாயம் ஆகும். இவைகளுக்கொல்லாம் நீங்கள் ஒத்துப்போகவில்லையானால் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளும் வாங்கமுடியாது. துணிகள், ரெடிமேட் உடுப்புகள் இவைகளில் விலைப்பட்டியலில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கம்யூட்டர் குறியீடு இவைகளையும் நீங்கள் தவிர்க்கவேமுடியாது.

அதுபோல ஆதார் அடையாள அட்டையையும் தவிர்க்க முடியாது. அதைக்குறித்து யாரும் இப்போதைக்கு பயப்படவேண்டாம். எத்தனையோ வருடங்களுக்கு முன்பே வெளிநாடுகள் முழுவதும் அந்த அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். ID-கார்டு முதல் டிரைவிங் லைசன்ஸ் வரை எல்லாவற்றிலும் உங்கள் அனைத்து பேங்க் கணக்குகளின் விவரம் உங்கள் குடும்ப விவரம், நீங்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் அதன் விவரம் அதோடு எத்தனை முறை நீங்கள் ஜெயில் போய் வந்தீர்கள், எத்தனைமுறை போலீஸில் தொடர்புக்கொண்டீர்கள் போன்ற அத்தனை விவரங்களும் அந்த ID-யிலும் டிரைவிங் லைசென்ஸ்ஸிலும் காணப்படும். உங்கள் பூர்வீகம் முதல் இப்போதுள்ள உங்கள் வாழ்க்கை விவரம் அத்தனையும் அந்த அடையாள கார்டுகள் மூலம் கண்டறியலாம்.

நம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள ஆதார் அடையாள அட்டை வெறும் ஆரம்பம்தான். இந்த அடையாள அட்டை இல்லாமல் நீங்கள் வெளியே போய்வரமுடியாது என்ற நிலை நிச்சயம் வரும். இன்னும் சிலகாலம் கடந்தால் உங்களைப்பற்றிய அனைத்து விவரங்களையும் நம் அரசாங்கம் தானாக அதில் பதியவைத்து வெளிநாடுகளில் இப்போது காணப்படும் ID-போல நம் நாட்டிலும் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். இது மிகவும் அவசியமாகும். இதற்காக யாரும் பயப்படவேண்டாம். நாங்கள் எங்கள் குடும்பமாக ஆதார் அடையாள அட்டைக்கு முகத்தையும், கைரேகைகளையும்பதியவைத்து அரசாங்க கட்டளைக்கு கீழ்ப்படிந்துள்ளோம். இது அந்திக்கிறிஸ்துவின் கட்டளையல்ல. பயம் வேண்டாம்.

thanks to தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்