• Sunday 22 December, 2024 12:35 PM
  • Advertize
  • Aarudhal FM

கர்த்தர் தந்த கருவிகளை . . . . . .

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

இறைவனுடன் இடைப்படும் நேரத்தில்

இனிய ஒலியெழுப்பி

இடையூறு செய்கிறது

இரக்கமற்ற கைப்பேசி

அன்பான மனைவியுடன்

அளவளாவிடும் நேரத்தை

அளவில்லாமல் அபகரிக்கிறது

ஆபத்தான அலைபேசி

களைத்து வரும் கணவருக்கு

களைப்பு தீரும் நேரத்தை

கருணையே இல்லாமல்

களவாடுகிறது கைப்பேசி

குழந்தைகளுடன் கொஞ்சும் நேரத்தில்

குறுக்கே வந்து

குழப்பம் தருகிறது

கொலைகார தொலைபேசி

பள்ளிச் சென்றிடும் பிள்ளைகளை

பாழும்கிணற்றில் தள்ளிவிட

பாதைக் காட்டி வருகிறது

பாழாய்போன தொலைபேசி

பெற்றோர் பிள்ளை உறவுகளை

பிரித்து வைத்து 

பதம் பார்த்து

பேதம்பண்ணுது தொலைபேசி

மெய்தகவலை பொய்யென்றும்

பொய்தகவலை மெய்யென்றும்

புளுகிவருகுது புரட்டி வருகுது

புண்ணாக்கு தொலைபேசி

உழைப்பை கெடுத்து

உணவை தடுத்து

உயிரை வாங்குது

உதவாக்கரை தொலைபேசி

காதல் வலையில் தள்ளுகிறது

காமப்பசிக்கு அழைக்கிறது

கயவர்கள் கையிலுள்ள

 களவாடிய கைப்பேசி

கர்த்தர் தந்த கருவிகளை

கருத்தாய் பயன்படுத்தி

கர்த்தருக்கு மகிமையை

கருத்தாய் செலுத்திடுவோம்

ஆசீர்வாதங்கள்

ஆதி-26:1-35.இதில் ஈசாக்கு பெற்றமூன்று ஆசீர்வாதங்கள்உள்ளது.நாமும் அவைகளைப் பெற்றுக்கொள்ளதேவன் கிருபை செய்வாராக!

1-நூறு மடங்கு ஆசீர்வாதம்-ஆதி-26:12,1-13.இங்கே ஈசாக்கு நூறுமடங்கு பலன் அடைந்ததாக வேதம் கூறுகிறது.இதற்குக் காரணம்கர்த்தர் சொன்ன தேசத்தில் அவன் குடியிருந்தான்.ஆதி-26:1-6.இன்று நாமும் கர்த்தர்சொல்லுகிற இடத்தில்குடியிருக்கும்போதுநிச்சயம் நூறு மடங்குபலன் அடையலாம்.பஞ்சம் வந்தவுடன் வேறு இடங்களுக்குச்சென்றுவிட வேண்டாம்.

2-விட்டுக்கொடுத்தான்.ஆதி-26:14-22.இங்கே ஈசாக்கு பலதுன்பங்களை அனுபவிக்கிறான்.ஆனாலும்அவன் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குசென்றுவிடுகிறான்.மேலும் அவன் வேலைக்காரர்கள் தோண்டிய பலதுரவுகளை பிறர் வந்துசொந்தம் கொண்டாடியபோது அப்படியே விட்டுவிடுகிறான்.கடைசியில்தேவன் அவனுக்கு ஒருரெகொபோத்தைக்கொடுத்தார்.அங்கே அவன் பலுகிப் பெருகினான்.அங்கே கர்த்தர்அவனோடு பேசினார்.ஆதி-26:24,25.நாமும் பிறருக்கு விட்டுக்கொடுப்போம்.அப்பொழுது தேவன்நம்மை ஆசீர்வதிப்பார்.

3-சத்துருக்களோடும்சமாதானம் செய்தான்.ஆதி-26:26-31.இங்கே அபிமெலேக்கும்அவன் மனிதர்களும்ஈராக்கிடம் வந்து உடன்படிக்கை செய்கின்றனர்.இவன் ஈசாக்கைத் துரத்திவிட்டவன்.ஆதி-26:13-18.ஆனாலும் ஈசாக்கு அவர்களை ஏற்றுக்கொண்டுஅவர்களுடன் சமாதானமாக இருந்தான்.அன்றேஈசாக்கின் வேலைக்காரர்கள் புதிய துரவுகளைவெட்டினார்கள்.இதுவேபெயெர்சபாவின் ஆசீர்வாதமாகும்.ஆமென்.மத்-5:44-48-ன்படி நாமும்சத்துருக்களை சிநேகிப்போம்.பரமபிதாவின்ஆசீர்வாதங்களைப்பெற்றுக் கொள்வோம்.அல்லேலூயா!

மோகன்ராஜ் -உடன்குடி9965253726

நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?

மனிதர்கள் வாழுகின்ற இந்த சமுதாயத்தில் போட்டியும், பொறாமையும், சண்டைகளும், வன்கண்களும் நிறைந்து இருக்கிறது. இதன் நடுவில் ஒரு தேவ பிள்ளை எங்கே இருந்தாலும் (பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம்) பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பது எப்படி? (1 பேதுரு 3:8,9)

செய்ய வேண்டியவைகள்:

1. ஒரு மனமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
2. இரக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
3. சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
4. மன உருக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
5. இணக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)

செய்யக்கூடாதவைகள்:

1. தீமைக்கு தீமை செய்யாதீர்கள். (1 பேதுரு 3:9)
2. உதாசீனத்திற்கு பதிலாக உதாசீனப்படுத்தாதீர்கள். (1 பேதுரு 3:9)

இவ்விதம் வாழ்வோம் என்றால், “எந்த சூழ்நிலையிலும் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.”

கே. விவேகானந்த்