கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு; மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கிறிந்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை புதன்கிழமை கொண்டுவந்தார்.

இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் மக்களையும் பட்டியலில் சேர்த்து, அந்த பட்டியலின மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டுவர விரும்புகிறேன்.

ஆதி திராவிடர்களாக் இருந்து மதம் மாறிய பின்னரும், தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே, இதனை நாம் கனிவோடு கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி, இந்து, சீக்கியர், பௌத்த மதத்தைத் தவிர்த்து, பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின் வகுப்பில் சேர்ந்தவராகக் கருத முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர்கள் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்பினருக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக, சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக ரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த உரிமைகள் தர வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு.

மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால், சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டதல்ல. இத்தகைய சாதி என்பது நீ வேறு, நான் வேறு என்பதாக இல்லாமல். நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கை கோடாக இல்லாமல் செங்குத்து கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. சாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்து இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைத்த தத்துவம்தான் சமூகநீதி தத்துவம். இந்த சமூகநீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த வகையில், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் அரசியல் சட்டம் சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011, ஆகிய கால கட்டங்களில் இதே கோரிக்கையை நிறைவேற்ற, பிரதமருக்கு நேர்முகக் கடிதம் எழுதி ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து, வலியுறுத்தி இருக்கிறார். இதே பேரவையில் இந்த கோரிக்கை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று 06.01.2011-ல் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க சார்பில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெள்யிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தியிருந்தோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் இன மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் தரும் வகையில், அரசாணைகள் வெளியிடப்பட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இடஒதுக்கீடு நீங்களாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகை திட்டங்களும் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முழு நேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுபவர்களுக்கான ஊக்கத் தொகை, உயர் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை என அனைத்தும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இட ஒதுக்கீட்டை வழங்குவது சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். அரசியலமைப்பு பட்டியல் இன சாதிகள் திருத்த ஆணை 1950-ன் படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும், அட்டவணை சாதிகளில் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956-ம் ஆண்டு, சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும் 1990-ம் ஆண்டு பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பட்டியல் சாதியினராக சேர்க்க திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத் தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.

ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, அவர்கள் தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்பு, அவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால், அது செல்லாது என்றும் மத்ம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்று சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என்றும் தேசிய பட்டியல் இன ஆணையத் துணை தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.

அப்போது, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில், ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் பெற்ற பிறகு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

இந்திய அரசிலமைப்பு சட்டத்தில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள, சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள், மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை, கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக ரீதியில் பயன்களைப் பெற அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். சமூக ரீதியானது சமநீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமன கேட்டு அமைகிறேன்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

கிறிந்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் வரவேற்றுப் பேசினார்கள். இதையடுத்து, இந்த தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற https://tcnmedia.in/

கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் இன்று தொடக்கம்!

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும்.

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும்.

திருநீற்றுப் புதனிலிருந்து 46ம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.

கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இந்தத் தவக்காலத்தின் தொடக்க நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதன் எனப்படுகிறது. சாம்பல் புதன் நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் இறைமக்களின் நெற்றியில் அருள்பணியாளர்கள் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து, தவக்கால நாள்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து ஜெபம், தவம், தர்மம் போன்றவைகளை கடைப்பிடிக்கின்றனர்.

தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை

தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களே, எச்சரிக்கை

சென்னை – கீழ்பாக்கம் – பிஷப் மாணிக்கம் ஹாலில் ‘காஸ்பல் சொசைடி நடந்தும்வேதாகம புகைப்பட கண்காட்சி என்று சொல்லி உங்களை வஞ்சிக்க வரும் பைபிள் ஸ்டூடன்ஸ் என்ற கள்ள உபதேசத்தாரை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்….மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளேயே …. (அப்போஸ்தலர் 20:29) இவர்கள் நடத்தவிருக்கும் இரண்டு நாட்கள் 28.01.2023 & 29.01.2023 (சனிக்கிழமை & ஞாயிறு) புகைப்பட கண்காட்சி & கூட்டத்திற்கு செல்ல வேண்டாம்… ஏன்? யார் இவர்கள்? இந்த ‘காஸ்பல் சொசைட்டி’ என்பவர்கள் நமக்கு காலம்காலமாக பைபிளை கொடுத்து வரும் இந்திய வேதாகம சங்கம் (Bible Society of India) அல்ல.

அமெரிக்காவில் உருவான ‘யெகோவா விட்னஸ்’ என்ற கள்ள உபதேச குழுவிலிருந்து பிரிந்து ‘பைபிள் ஸ்டூடன்ஸ்’ “வேதாகம மாணவர்கள்(BIBLE STUDENTS)” என்ற குழுவாக உலகமெங்கும் கிறிஸ்தவர்களை வஞ்சித்து வருகின்றனர்.

இப்பொழுது தமிழகத்தில்…. சென்னையில்…..? இவர்கள் சென்னையில் சபைக்கு ஒழுங்காக செல்லும் கிறிஸ்தவர்களை குறிவைத்து மிக தீவிரமாக செயல்படுகின்றனர். 50 மகத்துவமான வேதபாடங்களை சொல்லி தருகிறோம் என்று சொல்லி வசனங்களை புரட்டுவார்கள் இவர்களின் துர்உபதேசங்கள் எவைகள்?

  1. இவர்கள் நமது தேவனின் திரித்துவ தன்மையை (TRINITY/TRIUNITY) மறுதலிப்பவர்கள். பிதா மட்டும் தேவன் (GOD)என்பார்கள், இயேசு சின்ன தேவன்(god) என்று ஆரம்பத்தில் போதிப்பார்கள்.என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.1 யோவா 2 : 1- 2
  2. இயேசு கிறிஸ்து தேவகுமாரன் என்று சொல்லுவார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர் அல்ல, இயேசு தேவன் அல்ல என்பார்கள்.சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.1 யோவா 2 : 20
  3. பிறகு இயேசு கிறிஸ்து வெறும் தூதன் (angel)என்று அவரின் தெய்வீகத்தை உங்களை மறுதலிக்க வைப்பார்கள்.இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.1யோவா 2 : 22 – 23வருமென்று கேள்விபட்ட அநேக அந்தி கிறித்தவர்கள் இவர்களே இவர்களை விட்டு விலகியோடவும்
  4. பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவமுடையவர் அல்ல என்றும், கடவுள் அல்ல என்றும், பரிசுத்த ஆவி என்பது வெறும் சக்தி (power) என்று தரகுறைவாக போதிக்கிறவர்கள்.நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவா 16 : 7 – 8 ,13 வரை வாசிக்கவும் பரிசுத்த ஆவி யார் என்று உங்களுக்கு புரியும் ஆனால் அந்திகிறித்து வாகிய இவர்கள் அது ஒரு சக்தி என கூறவார்கள் எனவே எமதன்பான கிறித்தவ பிள்ளையே எச்சரிக்கையாக இருங்கள்
  5. நரகம் என்று ஒன்று இல்லை என்று போதிப்பார்கள். இவர்களை கண்டு பிடிப்பது எப்படி? இவர்கள் “யொகோவா சாட்சிகளை” (JW-Jehovah Witness) காட்டிலும் மோசமான வஞ்சக கூட்டம். இவர்கள் பல கிறிஸ்தவ ஊழிய பெயர்களை (உ.தா. நித்திய சுவிசேஷ ஊழியங்கள், பெரேயா வேத ஆராய்ச்சி மையம், எக்ளிஷியா, காஸ்பல் சொசைட்டி …) வைத்துக்கொண்டு வருவார்கள். இவர்களின் ஊழிய பெயர்கள் கிறிஸ்தவ பெயர்கள் போல இருக்கிறதே என்று நம்பி, ஏமாந்து போகவேண்டாம்.

கீழ்க்கண்ட 5 கேள்விகளை நீங்களாகவே கேட்டு பாருங்கள். இவர்களின் போலி முகத்திரை கிழியும்

1) தேவனின் திரித்துவ தன்மையை (TRINITY/TRIUNITY) விசுவாசிக்கிறீர்களா? பதில் ‘ஆம்’ என்றால்பிதா மட்டும் தேவனா? (GOD) அல்லது இயேசுவும் தேவனா(god) ?

2) இயேசு கிறிஸ்து தேவகுமாரனா? பதில் ‘ஆம்’ என்றால் இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சமமானவரா?

3) இயேசு கிறிஸ்து மிகாவேல் தூதனா(angel)?

4) பரிசுத்த ஆவியானவரை ஆவியானவர் என்ற நபராக சொல்வீர்களா? அல்லது ஆவி என்று சொல்வீர்களா?ஆவியானவர் என்பது ஆவி மட்டுமே என்றால் அவர் கடவுளா? அல்லது வெறும் சக்தி (power) தானா?.

5)நரகம் என்று ஒன்று இருக்கிறதா?நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் நேரடியாக ஆம் அல்லது இல்லை என்று பதிலை மட்டுமே சொல்ல சொல்லுங்கள்.

இவர்கள் பல விதமாக பதில்களை கூறி மழுப்புவார்கள், தங்களது கூட்டத்திற்கு வந்து பதிலை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி அழைப்பார்கள்… இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்…. நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் என்ன நடக்கும்…? இவர்களை குறித்து கவனமாக இல்லாவிடில் கிறிஸ்தவர்கள் வேத விசுவாசத்தை விட்டு, இரட்சிப்பை இழந்து, நரகம் செல்வது நிச்சயம். நீங்கள் செய்யவேண்டியது என்ன?

(இதை அதிகமாக எல்லா கிறிஸ்தவ குழுவில் அறியப்பட பகிரவும். இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வழிவிலகி போகாமல் காப்போம்.) அன்பான ஊழியர்கள் , முதிர்ந்த கிறிஸ்தவ விசுவாசிகள் இவர்களின் வஞ்சகங்களை குறித்து எல்லா கிறிஸ்தவர்களுக்கு எச்சரியுங்கள்.

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம்

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக கிறிஸ்தவம் இஸ்லாமுக்கு எதிராக தீர்மானம்

TamilNadu, 23 January 2023,

இந்தியா முழுவதும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று முண்ணப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் அதைவிட கொடூரமான ஒரு செயல் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கும் இச்சம்பவம் எங்கே பதிவு செய்யப்பட்டது என்கிற விவரங்கள் நமக்கு தெரியவில்லை என்றாலும் இந்த காணொளியில் வரும் காட்சிகளின் அடிப்படையில் இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது சிறுவர்களின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து நேரடியாக வாக்குறுதி கொடுக்க வைக்கும் இச்செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதே ஆகும்.
அரசியல் அமைப்பு சட்ட விதிகளின்படி தமிழக அரசு சம்பந்த பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை வலைதளங்களில் பகிர்ந்தவண்ணம் உள்ளனர் காணொளியை பாருங்கள் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் வரைக்கும் உங்கள் தெரிந்த நண்பர்களுக்கு இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
தீவிரமாக ஜெபியுங்கள்
நன்றி

Thank you for TCNMEDIA

பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி ஜனவரி 13,

திருச்சி,

சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூரில் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மறைமாவட்ட முதன்மைக்குரு அந்துவான், பொதுநிலையினர் பேரவை தலைவர் வேளாங்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மறை மாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குனர் அல்போன்ஸ், துறவியர் பேரவை தலைவர் ஜான்பிரிட்டோ, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். அப்போது, நாராயண்பூரில் தேவாலயங்கள் இடிக்கப்பட்டது, புனித சொரூபங்கள் உடைக்கப்பட்டது உள்ளிட்டவற்றை கண்டித்தும், அங்கு தாக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடியினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மறைமாவட்ட பொருளாளர் பெர்ஜித்ராஜன் நன்றி கூறினார்.

கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்

கடலூர் முதுநகரில் கிறிஸ்தவ போதகரை தாக்கிய கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டாா்.

( கடலூர் முதுநகர், ஜனவரி 11 )

கடலூர் முதுநகர் வெலிங்டன் தெருவில் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பிலிப் ரிச்சர்ட்(வயது 43) என்பவர் போதகராக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை அந்த ஆலயத்தின் வாசலில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிலிப் ரிச்சர்ட், இங்கு ஏன் குப்பைகளை கொட்டுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு துப்புரவு பணியாளர்கள் 42-வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில்(52) தான், இங்கு குப்பையை கொட்ட சொன்னதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து மதபோதகர் பிலிப் ரிச்சர்ட் செல்போனில் செந்திலை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில், அந்த ஆலயத்துக்கு சென்று போதகர் பிலிப் ரிச்சர்டை ஆபாசமாக திட்டி, தாக்கினார். மேலும் ஆலயத்தை மூடி வழிபாடு நடத்த முடியாமல் செய்து விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

நன்றி.
டெய்லிதந்தி நியூஸ்

https://tcnmedia.in/to-live-as-christians/

தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சிலுவைகளை உடைத்தெறிந்த வாலிபர்

மும்பை, ஜனவரி 9,

தினத்தந்தி

மும்பை மாகிமில் செயின்ட் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லறை மேலே இருந்த 18 சிலுவைகளை உடைத்து மர்மஆசாமி சேதப்படுத்தினார்.

இதனால் சிலுவைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இச்சம்பவம் பற்றி அறிந்த கத்தோலிக்க மக்கள் பெரும் வேதனையை தெரிவித்து இருந்தனர். குற்றவாளியை விரைவில் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதன் காரணமாக தேவாலய நிர்வாகிகள் சம்பவம் குறித்து மாகிம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. நேற்று கலம்பொலிைய சேர்ந்த முகமது யாக்கூப் அன்சாரி (வயது22) என்பவரை கைது செய்தனர்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இருந்தாலும் அவரிடம் கல்லறைகளில் இருந்த சிலுவைகள் உடைக்கப்பட்ட காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்

நாராயன்பூர், 2 ஜனவரி 2023,

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்.

சத்தீஸ்கர் நாராயன்பூர் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயன்பூர் என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து அங்குள்ள பொருட்களை உடைத்தெறிந்தது. இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பொழுது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதானகுமார் உட்பட அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

(நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதானகுமார்)

மேலும் தேவாலயத்தில் உள்ள ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது அந்த கும்பல். இந்த சம்பவம் குறித்து காவல்துறை மிக வேகமாக செயல்பட்டு இதுவரை அந்த கும்பலிலிருந்து 11 பேரை கைது செய்திருக்கின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் இது போன்ற சம்பவம் ஏராளமான இடங்களில் சபைகள் பாதிக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

மதசார்பற்ற இந்திய தேசத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜாகங்களை இந்திய அரசு விரைவில் தடுத்து நிறுத்த ஜெபம் பண்ணுவோம். ஜெபத்திற்காக உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் இச்செய்தியை பகிருங்கள்.


சத்தீஸ்கர் மாநிலம் நாராயன்புர் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து வீடியோ தொகுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்து காணவும்

https://tcnmedia.in/to-live-as-christians/
https://tcnmedia.in/these-are-the-witnesses-that-jesus-is-sinless/

ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்

திருப்பூர் 27 டிசம்பர் 2022

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சபைக்கு சொந்தமான பட்டா நிலத்திலே ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது அரசு அதிகாரிகளால் ஒரு மாத காலத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நாட்கள் சென்ற பின்பும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து நேற்று காலை போதகர் அமல்ராஜ் மற்றும் சபை மக்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தை துவங்கினர் நேற்று இரவு வரைக்கும் தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் அனைவரும் அடைக்கப்பட்டனர் இதில் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் அடைக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ முன்னணி இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

விரைவில் இவர்களுக்கு நல்ல தேர்வு கிடைக்க நம் ஜெபத்தை விரைவுப்படுத்துவோம். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி.

கைது செய்யப்பட்ட போதகர் அமல்ராஜ் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்து பேசிய வீடியோ தொகுப்பினை கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்து காணவும்

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.https://tcnmedia.in/the-chief-minister-of-tamil-nadu-cut-the-christmas-cake-and-distributed-sweets-to-all-the-religious-leaders-and-shared-christmas-greetings/

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

சென்னை 20-12-2022

சென்னை நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்தவ இயக்கம் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெரிய விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்று பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஒவ்வொரு தனி மனிதன் சமூகம் தேசம் மற்றும் அரசுகள் பின்பற்ற வேண்டும் இன்று கருத்தை முன்வைத்து தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் கத்தோலிக்க சபையினர் ப்ரோட்டெஸ்ட் சபைனர் பெந்தகோஸ்தே சபையினர் உட்பட சபை பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மதங்கள் பாகுபாடின்றி மத தலைவர்களும் பங்கு பெற்றிருந்தனர். கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் பண்டிகை அல்ல இது அனைவரும் கொண்டாட கூடிய பண்டிகை என்ற கருத்து இந்நிகழ்வின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி சமத்துவ கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தமிழக முதல்வர் பேசிய வீடியோ தொகுப்பு கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது லின்க் ஐ கிளிக் செய்து வீடியோவில் காணவும்