• Monday 10 March, 2025 04:58 AM
  • Advertize
  • Aarudhal FM

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண்

சிறுவனை வன்கொடுமை செய்த 2 குழந்தைகளின் தாய்

திருவள்ளூரில் 16 வயது சிறுவனை 2 குழந்தைகளுக்கு தாயான பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி, வெளியூருக்கு கூட்டிச் சென்ற வினோதினி (24) வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் அப்பெண்ணை கைது செய்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்புத் தந்தை கைது

மேட்டுப்பாளையம்,; சிறுமுகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிறுமுகையை சேர்ந்த 15 வயது சிறுமி சற்று மனநலம் குன்றியவர். இவரது வளர்ப்புத் தந்தை கடந்த தீபாவளி பண்டிகையின் போது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பக்கத்து வீட்டு பாட்டி ஒருவரிடம், சிறுமி சொல்லியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த பாட்டி, சைல்ட் ஹெல்ப் லைன் மூலமாக தொடர்பு கொண்டு குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில், வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வளர்ப்புத் தந்தையை பிடித்து, மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.—-

15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் இவரது மனைவி இன்பத்தாய் இருவருக்கும் திருமணம் முடிந்து ஆண், ஒன்றும் பெண் ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், தனது மகளான 15 வயது சிறுமிக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தந்தை சார்லஸ் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்..

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கோகிலா பாலியல் தொல்லை அளித்த சார்லஸ் என்பவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தை தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 62 பேர்

இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.

அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரம் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.இந்த அதிர்ச்சி தகவலை அந்த மாணவி, தான் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட கவுன்சிலிங்கில் தெரிவித்தார். அவர் 13 வயதில் இருந்து, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார்.

பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். யார் யாரெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்? என்று வீராங்கனையிடம் விசாரணை நடத்தப்பட்டது.அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். மேலும் தன்னை சீரழித்தவர்களில் பலரது பெயர் விவரங்களையும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 62 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.வீராங்கனையை சீரழித்தவர்களில் அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், உடன் படிக்கும் மாணவர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் வீராங்கனையின் காதலன் உள்பட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.பள்ளி படிக்கும் வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையிடம் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தார்.இந்நிலையில் அடூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் பற்றிய விவரங்களை விளையாட்டு வீராங்கனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பத்தினம் திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் டி.ஐ.ஜி. அஜீதா பேகம் தெரிவித்துள்ளார்.

நாகையில் அரசு காப்பகத்தில் ஒரே நாளில் 8 சிறுமிகள் மாயம்; கடத்தல் கும்பல் கைவரிசை?

Aug 3, 2024, 3:05 PM

நாகப்பட்டினம் மாவட்டம் நாகை அடுத்த சாமந்தான்பேட்டை பகுதியில் தமிழக அரசின் சத்யா அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு மாணவிகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 11ம் வகுப்பு படிக்கக் கூடிய 8 மாணவிகள் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து காப்பகத்திற்கு வரவேண்டிய குழந்தைகள் வரவில்லை.

சிறிது நேரம் காத்திருந்த விடுதி காப்பாளர் சக மாணவிகளிடம் இது குறித்து விசாரித்துள்ளார். ஆனால், அதில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளி, விடுதியில் தங்கி படிக்கும் சக மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே மாயமான மாணவிகள் சென்னையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அன் அடிப்படையில் சென்னை சென்று மாணவிகளிடம் விசாரித்தபோது,  விடுதி காப்பாளர் திட்டியதால் சென்னைக்கு சென்றதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மீட்கப்பட்ட மாணவிகள் அனைவரும் இன்று மாலை மீண்டும் நாகைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

thakns to asianet news tamil

ஆபாச வீடியோ பார்த்து தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்! தாயின் கண்முன்னே கொடூரக் கொலை!

Jul 28, 2024, 3:59 PM

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் ஒன்பது வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டீன் ஏஜை கூடத் தாண்டாத சிறுமியின் அண்ணன் செல்போனில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெறித்துக் கொன்றதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஏப்ரல் 24 அன்று இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மகன் செய்த குற்றத்தை மூடி மறைக்க தாயும் இரண்டு மூத்த சகோதரிகளும் உடந்தையாக இருந்தனர் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 24 அன்று ஜாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் அவரது வீட்டின் முற்றத்திலேயே கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் அண்ணனான 13 வயது சிறுவன், 17, 18 வயதான இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் அவர்களின் தாய் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மகன் செய்த குற்றத்தை மறைக்க முயன்றதாக ஒப்புக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் நடந்த அன்று இரவு வீட்டு முற்றத்தில் தூங்கியிருக்கிறார். அவருக்கும் அருகில் சிறுவனும் தூங்கியுள்ளார். தனது கைப்பேசியில் ஆபாசப் படத்தைப் பார்த்த சிறுவன் அருகில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமி தந்தையிடம் புகார் செய்யப்போவதாக மிரட்டியதால், சிறுவன் தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

பின்னர் தனது தாயை எழுப்பி நடந்த சம்பவத்தை தெரிவித்துவிட்டு வந்த சிறுவன், சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டு, மீண்டும் கழுத்தை நெரித்துச் சாகடித்துள்ளார். அதற்குள் அவர்களின் இரண்டு சகோதரிகளும், படுக்கை இருந்த இடத்தை மாற்றி சம்பவத்தை மூடி மறைக்க முயன்றுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவனும், அவனது குடும்பத்தினரும் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

விசாரணையை திசைதிருப்ப சிறுமியை விஷ பூச்சி கடித்ததாக கூறி நாடகமாடியுள்ளனர். சிறுமியின் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதனை செய்தபோது, அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான எந்த அறிகுறியையும் இல்லை என்றும் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்றும் குடும்பத்தினர்  மழுப்பலாகவே பதில் கூறியுள்ளனர். தொழில்நுட்ப உதவியுடன் ஆதாரங்களை சேகரித்து, 50 பேரிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தினர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என போலீசார் கூறுகின்றனர்.

Thanks to Asianet news tamil