• Wednesday 22 January, 2025 04:18 AM
  • Advertize
  • Aarudhal FM

“உள்ளதைக் கொடுத்த உள்ளங்கள்”

1) அடையைக் கொடுத்த விதவை:

1 இராஜாக்கள் 17:13(8-16)

[13]அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.

2) அப்பத்தைக் கொடுத்த சிறுவன்:

யோவான் 6:9(1-13)

[9]இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு

3) காணிக்கைக் கொடுத்த விதவை:

லூக்கா 21:4(1-4)

[4]அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

4) பொருட்களைக் கொடுத்த தாவீது:

1 நாளாகமம் 29:3(1-15)

[3]இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

5) மகனைக் கொடுத்த ஆபிரகாம்:

ஆதியாகமம் 22:2(1-18)

[2]அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

6) மகளைக் கொடுத்த யெப்தா:

============================

நியாயாதிபதிகள் 11:31(1-40)

[31]நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

7) ஜீவனைக் கொடுத்த இயேசு:

1 யோவான் 3:16

[16]அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

யோவான் 3:16; யோவான் 10:11.

Thanks to  elolam mission

இவரே தேவனுடைய குமாரன்

“யோவான் சுவிசேஷம்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த ஒரு சாட்சி புத்தகம் (யோ21:24). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் உண்மையை சாட்சி கொடுத்து நிலைநிறுத்துவது அவசியமாக இருந்தது (யோ 8:17,18). யோவான் சுவிசேஷத்தில் மட்டுமே “சாட்சி” என்ற வார்த்தை சுமார் 45க்கும் அதிகமான முறை வருகிறது. மட்டுமல்ல, யோவான் சுவிசேஷத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த 7 வித சாட்சிகளை காண முடியும். அவ்விதம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து சாட்சியாக அறிவிக்கும்படி வந்தவர்தான் யோவன் ஸ்நானகன் (யோ 1:7, 3:26, 5:33). இயேசு கிறிஸ்துவை குறித்து பலவிதங்களிலே அவர் சாட்சி கொடுத்தார் (யோ1:7, 29, 34). அதிலே ஒன்றுதான் “இவரே தேவனுடைய குமாரன்” என்பதாகும் (யோ 1:34).

இவரே தேவனுடைய குமாரன் ஏனென்றால்…

1. முன்னிருந்தவர். 1:15 நித்தியர்

2. மேன்மையுள்ளவர். 1:15 உன்னத்திலிருந்து வருகிறவர் (3:31)

3. பரிபூரணர். 1:16 தேவத்துவத்தின் பூரணமெல்லாம் அவருக்குள் வாசமாயிருக்கிறது (கொலோ 2:9, 1:9)

4. கிருபையையும் சத்தியத்தையும் அருளினவர். 1:17 நியாயப்பிரமாணம் பாவத்தை சுடிகாட்டும், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையாய் நமது பாவத்தை மன்னித்து, சத்தியத்தின்படி நமக்காக சிலுவையில் மரிக்கும்படி வந்தார் (1:14).

5. தேவனை வெளிப்படுத்தின ஒரேபேறான குமாரன். 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.

6. நாம்  அறியாதிருக்கிற ஒருவர். 1:26 இன்றைக்கும் உலகம் அவர் யாரென்று அறியாது அவரை புறக்கணிக்கிறது. அவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும்படி வெளிப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி (1:29, 36).

7. ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர். 1:33 தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை தந்து (யோ7:39), தம்மை விசுவாசியாதவர்களை நித்திய நரக அக்கினியினால் நியாயந்தீர்ப்பார் (யோ 3:36).

Thanks to Vivekananth

இயேசு கிறிஸ்து பிறந்தார் ஏன்? எப்படி? எங்கு?

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்தவர்களே. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஆகவேதான் அவருடைய பிறப்பு உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது. மத்தேயு 1:16

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து வேதம் கூறும் சத்தியம்.

  1. தாவீதின் சந்ததியில் பிறந்தார். (ரோமர் 1:5, 2 தீமோ 2:8)

    வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலாய் பிறந்தார் (லூக் 1:69, 75)

    1. கன்னிகையின் குமாரனாய் பிறந்தார். (கலா 4:5)

    “ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்” (கலா 4:5). ஸ்திரீயினிடத்திற்தான் பிள்ளைகள் பிறக்கிறார்கள் என்றாலும், இயேசு கிறிஸ்து கன்னிகையின் குமாரனாய் பிறந்தார் (ஏசா 7:14). அதாவது, அவர் பரிசுத்தமுள்ளவராய் பிறந்தார்.

    1. பாலகனாய் பிறந்தார். (ஏசா 9:6)

    தேவன் மனிதனானார். “பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” எபி 2:14

    1. இயேசு என்ற நாமத்திலே பிறந்தார். (மத் 1:16)

    “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத் 1:21).

    1. இரட்சகராக பிறந்தார். (லூக் 2:11)

     “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோ 1:15). மனுகுலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்க சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.

    1. இராஜாவாகப் பிறந்தார் (மத் 2:2)

    அவரை உள்ளத்தில் ஆண்டவரும் (ஆளுகை செய்கிறவர்) இரட்சகருமாக ஏற்றுக் கொள்கிறவர்களின் வாழ்வில் இராஜாவாய் வீற்றிருந்து பராமரித்து, பாதுகாத்து, வழிநடத்துவார்.

    1. மரித்தோரிலிருந்து முதற் “பிறந்தவர்” வெளி 1:5)

    மரித்தோரிலிருந்து முதற் “பிறந்தவர்” என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து சொல்லப்படவில்லை என்றாலும், மரித்தவர்களின் நடுவிலிருந்து உயிரோடு எழுந்தவராய் இருக்கின்றார் என்பதை காட்டுகிறது. அவர் இன்றும் ஜீவிக்கின்றார். இனி இந்த பூமியை நியாயம் தீர்க்கவராக வரப்போகின்றார்

    அவர் பிறந்ததை நினைவு கூறும் சந்தர்ப்பத்தில் அவர் மரித்தார், அவர் உயிர்தெழுந்தார், அவர் மறுபடியும் வருவார் என்பதையும் நாம் நினைவு கூற வேண்டியது அவசியம்.

    இயேசு கிறிஸ்து “உங்களுக்காக பிறந்தார்” என்பதை மறக்க வேண்டாம் (லூக் 2:10,11).

    Thanks to – கே. விவேகானந்த்