கடலூரில் கிறிஸ்தவ போதகரை சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர்

கடலூர் முதுநகரில் கிறிஸ்தவ போதகரை தாக்கிய கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டாா்.

( கடலூர் முதுநகர், ஜனவரி 11 )

கடலூர் முதுநகர் வெலிங்டன் தெருவில் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பிலிப் ரிச்சர்ட்(வயது 43) என்பவர் போதகராக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை அந்த ஆலயத்தின் வாசலில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிலிப் ரிச்சர்ட், இங்கு ஏன் குப்பைகளை கொட்டுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு துப்புரவு பணியாளர்கள் 42-வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில்(52) தான், இங்கு குப்பையை கொட்ட சொன்னதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து மதபோதகர் பிலிப் ரிச்சர்ட் செல்போனில் செந்திலை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில், அந்த ஆலயத்துக்கு சென்று போதகர் பிலிப் ரிச்சர்டை ஆபாசமாக திட்டி, தாக்கினார். மேலும் ஆலயத்தை மூடி வழிபாடு நடத்த முடியாமல் செய்து விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

நன்றி.
டெய்லிதந்தி நியூஸ்

https://tcnmedia.in/to-live-as-christians/

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்

நாராயன்பூர், 2 ஜனவரி 2023,

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்.

சத்தீஸ்கர் நாராயன்பூர் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயன்பூர் என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து அங்குள்ள பொருட்களை உடைத்தெறிந்தது. இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பொழுது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதானகுமார் உட்பட அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

(நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதானகுமார்)

மேலும் தேவாலயத்தில் உள்ள ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது அந்த கும்பல். இந்த சம்பவம் குறித்து காவல்துறை மிக வேகமாக செயல்பட்டு இதுவரை அந்த கும்பலிலிருந்து 11 பேரை கைது செய்திருக்கின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் இது போன்ற சம்பவம் ஏராளமான இடங்களில் சபைகள் பாதிக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

மதசார்பற்ற இந்திய தேசத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜாகங்களை இந்திய அரசு விரைவில் தடுத்து நிறுத்த ஜெபம் பண்ணுவோம். ஜெபத்திற்காக உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் இச்செய்தியை பகிருங்கள்.


சத்தீஸ்கர் மாநிலம் நாராயன்புர் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து வீடியோ தொகுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்து காணவும்

https://tcnmedia.in/to-live-as-christians/
https://tcnmedia.in/these-are-the-witnesses-that-jesus-is-sinless/

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் பயங்கர பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் CSI திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் திருச்சபை குடியிருப்பு பகுதியில் பிஜேபி அலுவலகம் கட்ட முயற்சிப்பதால் ஊருக்குள் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது திருச்சபையால் கூடி அதை தடுத்து நிறுத்தும் வண்ணமாக ஆலயமணி தொடர்ந்து அடிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் அமைதி பூங்காவாக இருந்த ஆலய வளாகத்திற்குள் உள்நோக்கத்துடன் பிரச்சனை உருவாக்கப்படுவதாக அங்குள்ள கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அந்த ஆலயத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் அங்கு நடந்த சம்பவத்தை குறித்து விரிவாக விளக்குகிறார். நடந்த முழு சம்பவத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து வீடியோவில் பார்க்கவும்