- 119
- 20250223
ஒரேதரம் செய்துமுடித்தார்

“ஒரேதரம் செய்துமுடித்தார்.” (எபிரெயர் 7:27)
லேவி கோத்திர ஆசாரியர்களுக்கும், நமது மகா பிரதான ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கும் எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.
கிறிஸ்து எதை ஒரேதரம் செய்து முடித்தார்?
1. ஒரேதரம்… பாடுபடும்படி இந்த பூமியில் வெளிப்பட்டார். (எபி 9:26, 25)
2. ஒரேதரம்… எல்லாருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்தார். (எபி 9:28)
3. ஒரேதரம்… தம்மை தாமே பலியிட்டார். (எபி 7:27)
4. ஒரேதரம்… நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். (எபி 10:10)
5. ஒரேதரம்… மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, நம்மையும் அந்த சிலாக்கியத்திற்கு உட்படுத்தினார். (எபி 9:12)
6. ஒரேதரம்… நித்திய மீட்பை நமக்கு உண்டு பண்ணினார். (எபி 9:12)
7. இனி இரண்டாந்தரம்… தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார். (எபி 9:28)
Thanks to கே. விவேகானந்த்