• Friday 27 December, 2024 12:00 AM
  • Advertize
  • Aarudhal FM

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.. கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.. கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கைஅணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் எந்நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிக்கக்கூடும்மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படாலம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இன்று பகல் 12 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியுள்ளது. அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 62,870 கன அடியாக உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டிள்ளது
மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் எந்நேரத்திலும் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு 6 மாவட்ட ஆட்சியர் உட்பட 15 துறைகளுக்கு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் சரபங்கா திட்டத்தை முடிக்காததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் போது, அணையில் இருந்து திறக்கப்படும் உபர்நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க,
கடந்த அதிமுக ஆட்சியில் சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், நீரேற்று நிலையங்கள் மூலம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை எடுத்து, அதை குழாய் மூலம் கொண்டு சென்று, சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளில் நிரம்பும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், முதற்கட்டமாக திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலைய பணிகள் முடிவடைந்ததால், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சரபங்கா திட்டத்தின் முதற்கட்ட பணிகளை தொடங்கிவைத்ததாக, எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்