• Wednesday 16 April, 2025 10:41 AM
  • Advertize
  • Aarudhal FM

குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பவர்களே உஷார்

அழும் குழந்தைகளை மகிழ்விக்கசெல்போன் கொடுக்கும் பெற்றோர்களே உங்களுக்குத்தான் இந்த செய்தி. தேனி தேவாரம் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் என்பவர் ரூ.24 லட்சத்தை சைபர் மோசடி | கும்பலிடம் பறிகொடுத்துள்ளார். போலீஸ் விசாரணையில், அவரது செல்போனை கேம் விளையாட மகளிடம் கொடுத்தபோது, சைபர் மோசடி கும்பல் கைவரிசைகாட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அர்ஜூன் குமார் என்பவரை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்து கொடுமை

உலகம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியவில்லை. 13 வயது சிறுவன் ஒருவன், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அடிகொப்பகா என்ற இடத்தில் நடந்துள்ளது. வீட்டுக்கு அருகில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த கொடுமையை செய்திருக்கிறான். அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்துவிட்டு, இந்த குற்றத்தை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்றோரே கவனிங்க.