தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் சிலுவைகளை உடைத்தெறிந்த வாலிபர்

மும்பை, ஜனவரி 9,

தினத்தந்தி

மும்பை மாகிமில் செயின்ட் மைக்கேல் தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லறை மேலே இருந்த 18 சிலுவைகளை உடைத்து மர்மஆசாமி சேதப்படுத்தினார்.

இதனால் சிலுவைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இச்சம்பவம் பற்றி அறிந்த கத்தோலிக்க மக்கள் பெரும் வேதனையை தெரிவித்து இருந்தனர். குற்றவாளியை விரைவில் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதன் காரணமாக தேவாலய நிர்வாகிகள் சம்பவம் குறித்து மாகிம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. நேற்று கலம்பொலிைய சேர்ந்த முகமது யாக்கூப் அன்சாரி (வயது22) என்பவரை கைது செய்தனர்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இருந்தாலும் அவரிடம் கல்லறைகளில் இருந்த சிலுவைகள் உடைக்கப்பட்ட காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்

நாராயன்பூர், 2 ஜனவரி 2023,

சத்தீஸ்கர் தேவாலயத்தில் பயங்கர தாக்குதல் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த காயம்.

சத்தீஸ்கர் நாராயன்பூர் தேவாலயத்தில் நடந்த தாக்குதல் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயன்பூர் என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து அங்குள்ள பொருட்களை உடைத்தெறிந்தது. இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பொழுது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதானகுமார் உட்பட அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

(நாராயண்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதானகுமார்)

மேலும் தேவாலயத்தில் உள்ள ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றது அந்த கும்பல். இந்த சம்பவம் குறித்து காவல்துறை மிக வேகமாக செயல்பட்டு இதுவரை அந்த கும்பலிலிருந்து 11 பேரை கைது செய்திருக்கின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் இது போன்ற சம்பவம் ஏராளமான இடங்களில் சபைகள் பாதிக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

மதசார்பற்ற இந்திய தேசத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜாகங்களை இந்திய அரசு விரைவில் தடுத்து நிறுத்த ஜெபம் பண்ணுவோம். ஜெபத்திற்காக உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் இச்செய்தியை பகிருங்கள்.


சத்தீஸ்கர் மாநிலம் நாராயன்புர் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து வீடியோ தொகுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்து காணவும்

https://tcnmedia.in/to-live-as-christians/
https://tcnmedia.in/these-are-the-witnesses-that-jesus-is-sinless/

ஜெப வீட்டிற்க்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்

திருப்பூர் 27 டிசம்பர் 2022

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சபைக்கு சொந்தமான பட்டா நிலத்திலே ஜெப வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு போராடிய போதகர் அமல்ராஜ் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது அரசு அதிகாரிகளால் ஒரு மாத காலத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நாட்கள் சென்ற பின்பும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து நேற்று காலை போதகர் அமல்ராஜ் மற்றும் சபை மக்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தை துவங்கினர் நேற்று இரவு வரைக்கும் தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் அனைவரும் அடைக்கப்பட்டனர் இதில் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் அடைக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ முன்னணி இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

விரைவில் இவர்களுக்கு நல்ல தேர்வு கிடைக்க நம் ஜெபத்தை விரைவுப்படுத்துவோம். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி.

கைது செய்யப்பட்ட போதகர் அமல்ராஜ் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்து பேசிய வீடியோ தொகுப்பினை கீழே உள்ள லின்க் ஐ கிளிக் செய்து காணவும்

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைத்து மத தலைவர்களுக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.https://tcnmedia.in/the-chief-minister-of-tamil-nadu-cut-the-christmas-cake-and-distributed-sweets-to-all-the-religious-leaders-and-shared-christmas-greetings/