- 6
- 20250108
Ph.D படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,00,000 கல்வி ஊக்கத்தொகை
Ph.D Scholars Scholarship 2025 : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த முழு நேர முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மூலம் கல்வி ஊக்கத்தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு கல்வி ஊக்கத்தொகைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் 2024-25 கல்வி ஆண்டு புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு நேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு கல்வி ஊக்கத்தொகை திட்டங்கள் மத்திய, மாநில அரசு வழங்கி வருகிறது. அதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.அந்த வகையில், தற்போது 2024-25 கல்வி ஆண்டிற்கு கல்வி ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் புதுபித்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பங்கள் நிரப்பி தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் புதுப்பித்தல் (Renewal) மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.