பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் மேடை பேச்சு

பயத்தினால் சிறுபான்மை என்று கூறுகிறீர்கள் நம்மில் யாரும் சிறுபான்மையினர் இல்லை நாம் அனைவரும் பெரும்பான்மையினர் தான். நாம் அனைவரும் தமிழர்கள் தமிழ் மொழியே பேசுகிறோம் ஆகவே நாம் அனைவரும் ஒன்றுதான் நாம் ஏன் பெரும்பான்மையினர் என்று சொல்ல பயப்பட வேண்டும். எந்தவிதமான பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது.

அரசியல் என்பது நம்மை பாதுகாப்பது ஆன்மீகம் என்பது சமூகத் தன்மையை உணர்த்துவது.
இந்த வழிபாடுகளில் தனித்தனி வேற்றுமையில் இருக்கும் ஆனால் அது ஒருபோதும் சண்டையாகி விடக்கூடாது நமக்கு எதிரி தேவை எதிரி இருந்தால் தான் நாம் வளர்ந்து கொண்டு இருக்க முடியும் விமர்சனங்கள் நமக்கு தேவை இருந்தால் தான் அதை தாண்டி வளர்ந்து செல்ல முடியும். மதமாற்ற யாரும் எங்கும் செல்ல வேண்டாம் அவரவர் வழிபாடுகளை நேர்மையாக செய்தால் போதும் மக்கள் எங்கு செல்ல ஆசைப்படுகிறார்களோ அவர்கள் தானாகவே அவர்களுக்குப் பிரியமான சமயத்திற்கு வருவார்கள். எந்தவிதமான பாசிச சக்திகள் நம்மை வீழ்த்த முடியாது என ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் தனது உரையாடல் போது பேசி இருக்கிறார்.
ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் பேசிய உரையாடல் தொகுப்பு கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறத
லிங்க் ஐ கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்