• Saturday 19 April, 2025 12:28 PM
  • Advertize
  • Aarudhal FM

இவரே தேவனுடைய குமாரன்

“யோவான் சுவிசேஷம்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த ஒரு சாட்சி புத்தகம் (யோ21:24). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் உண்மையை சாட்சி கொடுத்து நிலைநிறுத்துவது அவசியமாக இருந்தது (யோ 8:17,18). யோவான் சுவிசேஷத்தில் மட்டுமே “சாட்சி” என்ற வார்த்தை சுமார் 45க்கும் அதிகமான முறை வருகிறது. மட்டுமல்ல, யோவான் சுவிசேஷத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த 7 வித சாட்சிகளை காண முடியும். அவ்விதம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து சாட்சியாக அறிவிக்கும்படி வந்தவர்தான் யோவன் ஸ்நானகன் (யோ 1:7, 3:26, 5:33). இயேசு கிறிஸ்துவை குறித்து பலவிதங்களிலே அவர் சாட்சி கொடுத்தார் (யோ1:7, 29, 34). அதிலே ஒன்றுதான் “இவரே தேவனுடைய குமாரன்” என்பதாகும் (யோ 1:34).

இவரே தேவனுடைய குமாரன் ஏனென்றால்…

1. முன்னிருந்தவர். 1:15 நித்தியர்

2. மேன்மையுள்ளவர். 1:15 உன்னத்திலிருந்து வருகிறவர் (3:31)

3. பரிபூரணர். 1:16 தேவத்துவத்தின் பூரணமெல்லாம் அவருக்குள் வாசமாயிருக்கிறது (கொலோ 2:9, 1:9)

4. கிருபையையும் சத்தியத்தையும் அருளினவர். 1:17 நியாயப்பிரமாணம் பாவத்தை சுடிகாட்டும், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையாய் நமது பாவத்தை மன்னித்து, சத்தியத்தின்படி நமக்காக சிலுவையில் மரிக்கும்படி வந்தார் (1:14).

5. தேவனை வெளிப்படுத்தின ஒரேபேறான குமாரன். 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.

6. நாம்  அறியாதிருக்கிற ஒருவர். 1:26 இன்றைக்கும் உலகம் அவர் யாரென்று அறியாது அவரை புறக்கணிக்கிறது. அவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும்படி வெளிப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி (1:29, 36).

7. ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர். 1:33 தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை தந்து (யோ7:39), தம்மை விசுவாசியாதவர்களை நித்திய நரக அக்கினியினால் நியாயந்தீர்ப்பார் (யோ 3:36).

Thanks to Vivekananth

வனாந்திர வாழ்வை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை

அன்றைய  ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் தலைவர்களும், யூத மதத் தலைவர்களும் அக்கால மக்களின் வாழ்வை வனாந்திரமாக்கியிருந்தனர்.  இந்நிலையில்தான், வனாந்திரத்தில் தேவனுடைய வார்த்தை யோவானுக்கு உண்டாயிற்று (லூக் 3:2), இவ்வாறு வனாந்திரத்தில் உண்டான வல்லமையுள்ள தேவ வார்த்தையை, யோவான் ஸ்நானகனிடத்தில் கேட்டறிந்த  திரள் கூட்ட ஜனங்கள்,  வறட்சியாக்கப்பட்ட வனாந்திர வாழ்க்கையை வளமாக்கினர்.

இதோ, வனாந்திர வாழ்வை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை

“லூக்கா எழுதின சுவிசேஷம்  மூன்றாம் அதிகாரம் “

1. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தினர். – 3:3 

( தேவன் தங்கள் அருகில் வர )

2. அவருக்கு பாதைகளை செவ்வை பண்ணினர். – 3:3 

( தேவனிடம் நெருங்கி செல்ல )

3. மனந்திரும்புதலுக்கேற்றக் கனிகளைக்  கொடுத்தனர். – 3:8 

( தமது தோட்டத்தில், பராமரித்து பாதுகாத்த தேவனுக்கு )

4. குலப்பெருமையை விட்டு விட்டனர். – 3:8 

( தேவனுக்கு பிள்ளைகளானதால் )

5. ஆடை ஆகாரத்தை, பகிர்ந்துகொண்டனர். – 3:12 

( ஆகாய பறவைகளை அன்றாடம் போஷிக்கும் ஆண்டவரை அறிந்துகொண்டதால் )

6. அநியாயமான  வருமானத்தை மறுத்துவிட்டனர். – 3:13 

( தேவன் நியாயமாய் தீர்ப்பு செய்பவராகையால் )

7. குற்றஞ்சாட்டுவதை நிறுத்தினர். – 3:14 

( தேவனுக்கு முன் தாங்களும் குற்றவாளிகள் எனும் உண்மையை அறிந்ததினால்  )

8. போதும் என்ற மன திருப்தி அடைந்தனர். – 3:14 

( தேவனே  எல்லாவற்றிற்கும் போதுமானவரானதால் )

9. தவறான யோசனையை தவிர்த்தனர். – 3:15-16 

( வரப்போகும் வல்ல தேவனின் வருகையின் உண்மையை  அறிந்துகொண்டதால் )

தேவ வார்த்தையை வாஞ்சையுடன் கேட்போரின் வனாந்திர வாழ்க்கையை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை இன்றும் மாறாமலிருக்கிறது. 

“கர்த்தர் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்.” ஏசா 51:3

Thanks to K. ராம்குமார் ஓசூர்

யார் தேவ ஜனங்கள் ? அவர்களின் அடையாளங்கள்

தேவனுடைய ஜனங்கள் என்பது நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள மாபெரும் சிலாக்கியம். அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தின் இரண்டாம் அதிகாரத்தில் நாம் யார் என்பதை பல கோணங்களில் அழகாக விளக்குகிறார்.

1 பேதுரு 2ஆம் அதிகாரத்திலிருந்து

1. மறுபடி பிறந்த குழந்தைகள். – 2:3

2. ஜீவனுள்ள கற்கள். – 2:5

3. தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி. – 2:9

4. பரிசுத்த இராஜரீக ஆசாரிய கூட்டம். – 2:5,9

5. தேவனுடைய ஜனங்கள். – 2:10

6. தேவனுக்கு அடிமைகள். – 2:16

7. திருப்பப்பட்ட மந்தை. – 2:25

இவைகளில் தேவனுடைய ஜனங்கள் என்பது நம்மை அடையாளப்படுத்தும் வார்த்தை. நாம் யார்? நமது மேன்மை என்ன? நாம் யாருடையவர்கள்? நமது உரிமை என்ன? நமது பொறுப்பு என்ன? நம்மை குறித்ததான நோக்கம் என்ன? போன்றதான ஏராளமான காரியங்களை இந்த வார்த்தை வலியுறுத்துகிறது.

நம்முடைய பழைய நிலை, நாம் தேவ ஜனங்களாக இருக்கவில்லை என்பதாகும். ஆனால் தேவனுடைய ஜனங்கள் என்கிற இந்த சிலாக்கியம் அவருடைய இரக்கத்தினால் நமக்கு கிடைத்திருக்கிறது (2:10, 1:4).

தேவ ஜனங்கள் என்பது நமது சிலாக்கியத்தை மட்டுமல்ல, நம்முடைய பொறுப்பையும் வலியுறுத்துகிறது.

தேவனுடைய ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாக வாழவேண்டும் என்பதை பேதுரு கீழேயுள்ள வசனங்களில் கூறுகின்றார்

1. அந்நியரும் பரதேசிகளும் என்ற மனநிலையோடு வாழுங்கள். – 2:11

2. மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள். – 2:11

3. மற்றவர்களுக்கு முன் நல் நடக்கை உள்ளவர்களாய் இருங்கள். – 2:12

4. மனிதக் கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள். – 2:13

5. தேவனுக்கு அடிமைகளாய் இருங்கள். – 2:16

6. எல்லாரையும் கனம் பண்ணுங்கள். – 2:17

7. பாடுகளை பொறுமையோடு சகித்திருங்கள். – 2:20, 21

தேவனுடைய ஜனங்கள் நாம் என்ற மேன்மையை உணர்ந்தவர்களாய், அதற்கேற்ற வாழ்க்கை வாழ தேவன் நமக்கு கிருபை செய்வாராக.

Thanks to கே. விவேகானந்த் 

நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?

மனிதர்கள் வாழுகின்ற இந்த சமுதாயத்தில் போட்டியும், பொறாமையும், சண்டைகளும், வன்கண்களும் நிறைந்து இருக்கிறது. இதன் நடுவில் ஒரு தேவ பிள்ளை எங்கே இருந்தாலும் (பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம்) பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பது எப்படி? (1 பேதுரு 3:8,9)

செய்ய வேண்டியவைகள்:

1. ஒரு மனமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
2. இரக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
3. சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
4. மன உருக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
5. இணக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)

செய்யக்கூடாதவைகள்:

1. தீமைக்கு தீமை செய்யாதீர்கள். (1 பேதுரு 3:9)
2. உதாசீனத்திற்கு பதிலாக உதாசீனப்படுத்தாதீர்கள். (1 பேதுரு 3:9)

இவ்விதம் வாழ்வோம் என்றால், “எந்த சூழ்நிலையிலும் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.”

கே. விவேகானந்த்

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று

(1 பேதுரு 4:7-11)

ஆகையால்…

1. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். 7 வச.

2. ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 7 வச.

3. ஊக்கமான அன்புகூறுங்கள். 8 வச.

4. முறுமுறுப்பில்லாமல் உபசரியுங்கள். 9 வச.

5. நல்ல உக்கிராணக்காரர் போல உதவி செய்யுங்கள். 10 வச.

6. தேவனுடைய வசனத்தின்படி போதியுங்கள். 11 வச.

7. தேவனை மகிமைப்படுத்துவதையே செய்யுங்கள். 11 வச.

தேவனால் பிறந்தவனின் அடையாளம்

( 1 யோவான் நிருபத்திலிருந்து ) தேவனால் பிறந்தவர்களை நாம் எப்படி அடையாளம் காண முடியும் ?
அப்.யோவான் தனது முதலாவது நிருபத்தில் “தேவனால் பிறந்தவனின் 7 அடையாளங்களை” குறிப்பிடுகிறார்.

1. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பான். 5:1

2. நீதி செய்கிறவனாயிருப்பான். 2:29, 3:10

 3. பாவம் செய்யமாட்டான். 3:8, 5:18

4. தேவ வார்த்தைக்கு செவிகொடுப்பான். 4:6

 5. அன்புள்ளவனாயிருப்பான். 4:7

 6. உலகத்தை ஜெயிக்கிறவனாயிருப்பான். 5:4, 4:4

 7. தன்னை காக்கிறவனாயிருப்பான். 5:18

Thanks to Bro. Vivek

பரத்திலிருந்து வருகிற ஞானம்

தேவனுடைய பிள்ளைகள் இந்த உலகத்தில் தேவஞானமுள்ளவர்களாய் வாழ வேண்டியது அவசியம். தேவஞானமென்பது லெளகிகமானதல்ல, அது பரத்திலிருந்து இறங்கிவருவதாகும். அந்த பரமஞானத்தின் 7 தன்மைகளை யாக்கோபு தனது புத்தகத்தில் விளக்குகிறார்.

பரத்திலிருந்து வருகிற ஞானம். யாக் 3:17

1. சுத்தமுள்ளது
2. சமாதானமுள்ளது
3. சாந்தமுள்ளது
4. இணக்கமுள்ளது
5. இரக்கமும், நற்கனிகளும் நிறைந்தது
6. பட்சபாதமில்லாதது
7. மாயமற்றது.

Thanks to Bro. vivekananth

ஒரேதரம் செய்துமுடித்தார்

ஒரேதரம் செய்துமுடித்தார்.” (எபிரெயர் 7:27)
லேவி கோத்திர ஆசாரியர்களுக்கும், நமது மகா பிரதான ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கும் எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.

கிறிஸ்து எதை ஒரேதரம் செய்து முடித்தார்?

1. ஒரேதரம்… பாடுபடும்படி இந்த பூமியில் வெளிப்பட்டார். (எபி 9:26, 25)
2. ஒரேதரம்… எல்லாருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்தார். (எபி 9:28)
3. ஒரேதரம்…  தம்மை தாமே பலியிட்டார்.  (எபி 7:27)
4. ஒரேதரம்… நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். (எபி 10:10)
5. ஒரேதரம்… மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, நம்மையும் அந்த சிலாக்கியத்திற்கு உட்படுத்தினார். (எபி 9:12)
6. ஒரேதரம்… நித்திய மீட்பை நமக்கு உண்டு பண்ணினார். (எபி 9:12)
7. இனி இரண்டாந்தரம்… தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார். (எபி 9:28)

Thanks to கே. விவேகானந்த்