ஆபிரகாமின் வீடு
மனித வாழ்க்கையை / குடும்பத்தை வேத புத்தகம் வீட்டோடு ஒப்பிடுகிறது (சங் 119:54; 127:1). ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று வேதத்தில் வாசித்தாலும் ( எபி 11:9; ஆதி 12:8), அவருடைய வீட்டையும் (குடும்பத்தையும்), வீட்டாரையும் குறித்தும் வேதத்தில் வாசிக்கிறோம் (ஆதி 14:14; 18:19;). அந்த வசனங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது ஆபிரகாமின் வீடு அல்லது அவரின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாம் அறிய முடியும்.
- அகற்றிவிட்ட வீடு. ஆதி 12:1
“கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு.”
தன் வாழ்க்கையில் கர்த்தர் அகற்றிவிட சொன்னவைகளை அவர் அகற்றிவிட்டார்.
- ஆயத்தமான வீடு. ஆதி 14:14
“தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து.”
தன் வீட்டில் உள்ளவர்களை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.
- இசைகின்ற வீடு. ஆதி 17:27
“வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.”
வீட்டார் யாவரும் எந்த காரியத்தையும் ஒன்றாய் செய்கின்றார்கள்.
- ஈகையின் வீடு. ஆதி 18:1-4
“ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.”
அந்நியரை / தேவதூதர்கள் உபசரித்தார்.
- உபதேசிக்கும் வீடு. ஆதி 18:19
“ கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான்.”
கர்த்தரை தன் வீட்டாருக்கு கற்றுக்கொடுத்தார் / யேகோவாயீரே
- ஊன்ற கட்டப்பட்ட வீடு. ஆதி 24:2
“ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்”
ஆபிரகாம் அவர் அறிந்த சத்தியத்தில் / விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்.
- எச்சரிப்பின் வீடு. ஆதி 12:8-10
“அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று.”
பலிபீடத்தை விட்டு தூரம் போன வாழ்க்கை, பஞ்சத்தை கொண்டுவந்தது. இது நமக்கு ஓர் எச்சரிப்பு.
கே. விவேகானந்த்