• Monday 10 March, 2025 05:50 AM
  • Advertize
  • Aarudhal FM

­­­­­தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில்வே துறையில் உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சியின் கீழ் 2,438 பணியிடங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பணி விவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அந்தமான், நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளுக்கு இந்த பயிற்சி அறிவிப்பு பொருந்தும். 

பணி அனுபவம் இல்லாதவர்கள், கோவை பணிமனை, பெரம்பலூர், பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு, அரக்கோணம், தாம்பரம், ராயபுரம், பொன்மலை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே பணிமனை, மருத்துவமனை ஆகிய அலுவலகங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஃபிட்டர், வெல்டர், ஆய்வக டெக்னீசியன், ப்ளமர், கார்பெண்டர், பெயிண்டர், எலக்ட்ரிசியன், மெக்கானிக், வையர்மென் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மொத்த பணியிடங்கள் – 2,438

கல்வித் தகுதி விவரம்:

ஃபிட்டர், வெல்டர், ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஐ.டி.ஐ. பிரிவில் ஃபிட்டர், மெக்கானிஸ்ட், மோட்டர் வாகன மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 பூர்த்தியடைந்தவராகவும் 22 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மெடிக்கல் டெஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மெரிட் லிஸ்ட் தயாரித்து அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஊக்கத்தொகை:

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தொழில்பழகுநர் பயிற்சிக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். 

ஃபிட்டர் பிரிவில் இரண்டாடு காலம் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படும். மற்ற பிரிவுகளில் ஓராண்டு முதல் ஓராண்டு மூன்று மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்:

தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது?

தெற்கு ரயில்வேயின் தொழில் பழகுநர் பயிற்சிக்கு  விண்ணப்பிக்க https://sronline.iroams.com/rrc_sr_apprenticev1/recruitmentIndex – என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

பயிற்சி வழங்கப்படும் பிரிவுகள், அதற்கான தகுதிகள், ஊக்கத்தொகை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://sronline.iroams.com/rrc_sr_apprenticev1/notifications/Act%20Apprentices%20Notification%202024-25%20with%20enclosures.pdf – என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2024

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் 1,000 கூடுதல் காலியிடங்கள்

சென்னை: இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2023-24-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்.9-ம் தேதி அறிவிப்புவெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வரும் 21-ம் தேதி (ஞாயிறு) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 26,510 பேர் எழுதஉள்ளனர். தற்போது புதிதாக 1,000 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் டிஆர்பி மூலம் நிரப்பப்படும் மொத்த காலி ணியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக அதிகரித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்கவேண்டும்?

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2438 பயிற்சிப் பணியிடங்களுக்கான (Apprentice) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிப் பணியிடங்களில் சேர தேர்வு எழுதத் தேவையில்லை. ஐடிஐ, 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: கோவை போத்தனூர், சென்னை பெரம்பூர், ராயபுரம், ஆவடி, தாம்பரம், சேலம், அரக்கோணம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட தெற்கு ரயில்வேயின் பல்வேறு பணிமனைகளில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக் காலம்: பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐடிஐ படிப்பு அல்லது 10, 12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப பணியின் தன்மை மாறுபடும் எனத் தெற்கு ரயில்வேயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு போன்ற இடங்களைச் சேர்ந்தவராகவும், ஆந்திரப் பிரதேசத்தின் எஸ்பிஎஸ்ஆர் நெல்லூர், சித்தூர் அல்லது கர்நாடகத்தின் தட்சிண கர்நாடகம் பகுதியைச் சேர்ந்தவராக மட்டும் இருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் பணி அனுபவம் இல்லாதவராக இருந்தால், 15 வயது நிரம்பியவராகவும், 22 அல்லது 24 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்குத் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,1618,1905 என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.100 பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கியத் தேதி: ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, மதிப்பெண், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,1618,1905 என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

Thanks to hindu news

அரசு வேலைக்கு செல்ல வேண்டுமா? டிஎன்பிஎஸ்சியில் தேர்வாவது ரொம்ப ஈஸி! நிறைய படிக்க வேண்டாம்!

Sunday, July 28, 2024, 10:15

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கட் ஆப் வாங்குவது மிகவும் எளிதானது. இந்த பயிற்சியை பெற்றிருந்தால் போதுமானது. அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள். இதனால் ஏராளமான மாணவர்கள் தற்போது பழைய முறைக்கு திரும்புவது போல் இந்த பயிற்சியை பெறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு தேர்வாணையம் என்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்களை பணியமர்த்தி வருகிறது. விஏஓ முதல் உயர் பதவி வரை அனைத்துக்கும் இந்த ஆணையம் தேர்வு நடத்துகிறது. மத்திய அரசில் செம ஜாப்.. 2006 பணியிடங்கள்.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க அரசு பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் டைப் ரைட்டிங் எனப்படும் தட்டச்சு பயிற்சி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது தட்டச்சு பயிற்சியில் சேர்க்கை சதவீதம் 10 சதவீதம் ஆகும் என பயிற்சி நிறுவனத்தினர் தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்துகிறது. Advertisement இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளை முடித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி வருகிறார்கள். அப்போது அவர்கள் இந்த தொழில்நுட்பச் சான்றிதழை பெற்றிருப்பதன் மூலம் எளிதில் கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்று அரசு வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

Thanks to  one india news

கோவையில் ஐடி வேலை.. Accenture நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. சீக்கிரம் தேதி முடியப்போகிறது

July 28, 2024, 10:59

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான Accenture ஐடி நிறுவனத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

ஆக்சென்ச்சர் (Accenture).. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மெபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளைவ்ட் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த ஆக்சென்ச்சர் நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை மற்றும் கோவையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கோவையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பின் படி Application Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 15 ஆண்டு கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது பிளஸ் 2 படித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளஸ் 2விற்கு பிறகு சாப்ட்வேர் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி Regulatory Compliance and Software Development பிரிவில் ஏழரை ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

டெக்னிக்கல் ஸ்கில்ஸை பொறுத்தவரை regulatory compliance requirements பற்றி புரிந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் compliance strategies for software applications என்பதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர சாப்ட்வேர் டெவலப்மென்ட் மெத்தடலாஜிஸ்களான Agile அல்லது Waterfall அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் திறமை, சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் ஏற்படும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் தன்மையை பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் என்ன? என்பது தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் பணி குறித்த விண்ணப்பம் செய்யும் நாள் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் பணி தொடர்பான விபரங்களை பெங்களூரில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்துக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.

Thanks to One India News

நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. இதைவிட பெரிய சான்ஸ் கிடைக்காது.. லட்டு மாதிரி.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

July 28, 2024, 9:45

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் நெருங்கி உள்ளன. ஏற்கனவே இலவச பயிற்சி வகுப்புகளில் பெறாதவர்கள் இந்த வாரம் முதல் இந்த வகுப்புகளில் சேர்ந்து கொள்ள முடியும். இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பம் செய்யும் கால் அவகாசம் நேற்றோடு முடிந்துவிட்டது. அதோடு  இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.

இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.

முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

15.12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

விதிகள் மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

நாளை வகுப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

ஆட்சியர் அலுவலகம் வாயிலாக இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

குரூப் 2 தேர்வு: இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 2 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.

அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

Thanks to Oneindia news