• Friday 9 May, 2025 05:17 AM
  • Advertize
  • Aarudhal FM

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்!

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்! கொலை செய்யப்பட்ட இவரின் மார்க்தான் அனைவரின் மனதையும் கணக்க வைத்துள்ளது. கரூர் குளித்தலையில், தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்த ஷியாம் சுந்தர் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், +2 தேர்வில் ஷியாம் 351 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இன்று மார்க்கை பார்த்த பெற்றோரும், நண்பர்களும் கண்ணீரில் மூழ்கி இருக்கின்றனர்.

தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12ம் வகுப்புதேர்வு எழுதிய மாணவன் – எவ்வளவு மார்க் தெரியுமா?

தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகள் சதவிகிதமும், தனியார் பள்ளிகள் சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பாண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநராக பணிபுரிந்த அப்பா

சிவகங்கை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் செந்தில்வேலன் சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு உயிரி கணிதம் பயின்று வந்த நிலையில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று முடிந்த நிலையில் செந்தில்வேலனும் அதற்கு தன்னை தயார் படுத்தி தேர்வெழுத காத்திருந்தபோது முதல் நாளான 3 ஆம் தேதி தமிழ் தேர்வெழுத காலையில் தயாரானபோது நிலையில் திடிரென செந்தில்வேலனின் தந்தை தர்மலிங்கம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்ற மாணவன்

இருந்தபோதிலும் அந்த துக்கத்தையும் மறந்து செந்தில்வேலன் தேர்வு மையம் சென்று தமிழ் தேர்வை எழுதியதுடன் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தந்தை தர்மலிங்கத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் செந்தில்வேலன் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றியடைந்துள்ளார். இதனை தனது தாயிடம் மாணவன் தெரிவித்த நிலையில் கனவரின் புகைப்படம் முன்பு கதறி அழுத தாய் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் மாணவனுக்கு ஆசீர்வாதம் செய்தார். மாணவன் செந்தில்வேலன் தனது தந்தையின் கனவான மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதே தனது லட்சியமென சூளுரைத்தார். தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் மதிப்பெண்கள் 413

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி வீட்டின் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று ரிசல்ட் வெளியான நிலையில் மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவி 600 மதிப்பெண்களுக்கு மொத்தம் 413 மார்க் எடுத்துள்ளார்.

அதன்படி தமிழ் பாடத்தில் 72 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 42 மதிப்பெண்களும், பிசிக்ஸ் பாடத்தில் 65 மதிப்பெண்களும், கெமிஸ்ட்ரியில் 78 மதிப்பெண்களும், பாட்டனியில் 70 மதிப்பெண்களும், ஸ்வாலஜியில் 80 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.

மேலும் மாணவி அவசரப்பட்டு தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று அதிகமாக மார்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

TN 12th Result 2025: சாலை விபத்தில் உயிரிழந்த மாணவன் +2 தேர்வில் தேர்ச்சி.. சோகத்தில் குடும்பத்தினர்

வேடசந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் பொது தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் 20,725அதில் மாணவர்கள் 9,716 பேர், மாணவிகள் 11,009. இத்தேர்வில் 19,668 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் மொத்தம் 94.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களும், 92.70% பேரும், மாணவிகளும் 96.84% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 94.90% தேர்ச்சி பெற்று தமிழக அளவில்  20வது திண்டுக்கல் மாவட்டம் இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன் அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஆர்கனைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சுகுமார்(18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுதேர்வு எழுதி முடித்திருந்தார். இந்தநிலையில் கடந்த 6-ம் தேதி சுகுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 433 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றிருந்தார். சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN 12th Result 2025 Live : 95.03% பேர் தேர்ச்சி.. முதலிடத்தைப் பிடித்த அரியலூர்.. சாதித்து காட்டிய மாணவர்கள்!

TN Board 12th Result 2025 Live : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியாகியது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். முடிவுகள் குறித்த உடனுகுடன் செய்தி இதில் நேரலையில் இந்த பதிவில் மூலம் வழங்கப்படுகிறது.

TN 12th Result 2025 at tnresults.nic.in : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.

இந்தாண்டு மாணவர்கள் – 3,47,670, மாணவியர்கள் – 4,05,472 என மொத்தம் 7,53,14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மொத்தம் 95.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி 0.47% அதிகம் ஆகும். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் பட்டியல் வரும் மே 12-ம் முதல் விநியோகிக்கப்படும்.

வேதாகமும் அறிவியலும் 02 – மழை எப்படி பெய்கிறது?

அறிவியலுடன் வேதாகமத்தின் அரிய முத்துக்களை இணைத்து நோக்கும் இணையில்லா ஓர் தொகுப்பு இது..!

மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் புவியீர்ப்பு விசை மூலம் மழையாக பொழிகிறது என அறிவியல் சொல்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வேதாகாமத்தில் சொல்லப்பட்டுள்ளது

(பிரசங்கி :11:3)

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும் (பிரசங்கி 11:3)

வேதாகமும், அறிவியலும்!! 01

நாம் விண்வெளியில் காணும் ஒவ்வொரு நட்சத்திரமும் வேறுபட்டது, அவைகள் தனித்துவமிக்கது என அறிவியல் இன்றளவும் சொல்லி வருகிறது. இதை நம் கைகளில் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் பல ஆண்டு முன்னதாகவே சொல்லப்பட்டிருக்கிறது

சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.(1 கொரிந்தியர் 15:41)

நம் திருச்சபையில் அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்காக

✅TNPSC Group 1 Recruitment 2025
✅காலி இடங்கள்: 70 Deputy Collector, Deputy Superintendent of Police, District Employment Officer, Assistant Director of Rural Development, District Employment Officer, Assistant Commissioner of Labour Posts
✅உடனே விண்ணப்பிக்க Link: https://tamilanguide.in/tnpsc-recruitment-2025-70-group-1-posts-apply-now/
✅கல்வி தகுதி: Any Degree
✅இறுதி நாள்: 30.04.2025
💒 நமது திருச்சபையைச் சார்ந்த, பட்டப்படிப்பு படித்துள்ள அனைத்து பிள்ளைகளையும் இந்தத் தேர்வை எழுத ஊக்குவிக்கும்படி / வழிகாட்டும்படி அன்போடு வேண்டுகிறேன். 🙏

மியான்மார் நிலநடுக்கம் 1000க்கும் மேல் பலி இந்தியாவும் காரணம் என அறிக்கை

மியான்மர்: மியான்மரில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மியான்மர் உருக்குலைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும், இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லைகளை பகிர்ந்துள்ள மியான்மரில் நேற்று பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தாய்லாந்தும் குலுங்கியது. மியான்மர் நாட்டின் நிலநடுக்க நகரமாக கருதப்படும் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

பலி எண்ணிக்கை 1,000

அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. கடுமையான இந்த நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்தது. அண்டை நாடான தாய்லாந்தும் தப்பவில்லை. தாய்லாந்து தலைநகர் பாங்காக் பகுதியில் வானுயர்ந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். அதே கட்டிடத்தில் பணியில் இருந்த 90 பேர் மாயமானார்கள். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கத்தினால் கடிடங்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கத்தால் மியான்மரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும் இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட தரவுளின் விவரம் வருமாறு:-

மியான்மர் நாடு இரண்டு டெக்டானிக் பிளேட்டுகளுக்கு இடையே உள்ளது. அதாவது, இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்டுகளுக்கு இடையில் அமைந்து இருக்கிறது. இதனால், இந்த நாடு நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் அபாயம் மிக்க பகுதிகளில் இருக்கிறது. இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்கள் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் நேற்றைய தினம் ஏற்பட்ட அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரனமாக சொல்லப்படுகிறது.

மியான்மரில் தொடர்ந்து நடக்கும் மீட்பு பணிமியான்மருக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவும் மியான்மருக்கு உதவ முன்வந்துள்ளது. ஆபரேஷன் பர்மா என்ற பெயரில் மியான்மருக்கான உதவி நிவாரண பணிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. மியான்மருக்கு முதன் முதலில் ஆதரவுக்கரம் நீட்டிய நாடு இந்தியாதான் என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் குழுவினர் போர் விமானத்தில் மியான்மருக்கு சென்றுள்ளது.

சீனாவும், ரஷ்யாவும் மியான்மருக்கு மீட்புக் குழுவினரையும் உதவிகளையும் அளித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அளித்து வந்த நிதியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ள போதிலும், மியான்மர் பாதிப்புக்கு உதவிகள் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்

நாம் வாழும் இந்த பூமியானது மூன்று முக்கிய அடுக்குகளை கொண்டது. மேலோடு, மேன்டில், மற்றும் கோர் என மூன்று அடுக்குகள் உள்ளன. மேலோடு பூமியின் வெளிப்புறப் பகுதி, மேன்டில் நடுப்பகுதி, மற்றும் கோர் பூமியின் மையப் பகுதியாக உள்ளது. மேலோடு எனப்படும் பூமியின் மேற்பரப்பு பல பெரிய தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் நகரும்போது ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக, பாறைகள் உடைந்து ஆற்றல் வெளியிடுகிறது. இவை நிலநடுக்கங்களை உருவாக்குகிறது.

10ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்காக

தேர்வு எழுத அமர்ந்திருக்கும் எந்தவொரு மாணவருக்கும், தேர்வு தொடங்குவதற்கு முந்தைய கடைசி சில நிமிடங்கள் நம்பமுடியாத அளவிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும்.

நான் உண்மையில் போதுமான அளவு படித்தேனா?

நான் நினைப்பது போல் எனக்குப் பொருள் நன்றாகத் தெரியுமா?

நான் சரியான கேள்விகளுக்குத் தயாரானேனா?

மிகவும் புத்திசாலி மற்றும் திறமையான மாணவர்களின் மனதிலும் கூட சுய சந்தேகமும் பதட்டமும் ஊடுருவுகின்றன, குறிப்பாக எதிர்கால வெற்றி இந்த ஒற்றைத் தேர்வின் முடிவைப் பொறுத்தது என்று உணருவதால்.

அதிர்ஷ்டவசமாக, மன அழுத்த காலங்களில் கடவுள் நமக்கு அமைதியைத் தருகிறார், மேலும் தேர்வுக்கு முன் ஜெபத்தில் நேரத்தைச் செலவிடுவது ஒரு பெரிய யதார்த்தத்தை நமக்கு நினைவூட்ட உதவும்: கடவுள் நம்மை நேசிக்கிறார், அவரை நேசிப்பதும் அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் நாம் எந்தப் பள்ளியில் சேருகிறோம் அல்லது நமக்கு என்ன வேலை இருக்கிறது என்பதை விட மிக முக்கியமானது.

நாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நம்மை நேசிக்கும் நம் கடவுளிடமிருந்து அமைதி, பாதுகாப்பு மற்றும் அன்பை உணர உதவும் தேர்வுகளுக்கு முன் ஜெபிக்க சில பிரார்த்தனைகள் இங்கே.

நீங்கள் ஒரு தேர்வு அல்லது தேர்வுக்கு அமரும் முன் எந்த நேரத்திலும் இந்த எளிய பிரார்த்தனைகளில் ஒன்றைச் சொல்லுங்கள்:

எல்லாம் அறிந்தவரும், எப்போதும் இருப்பவருமான பரலோகத் தகப்பனே, என் மனதை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து, ஒரு சிறிய கணம் நின்று உமது பிரசன்னத்தை உணர அனுமதித்தருளும். உமது சித்தத்தைச் செய்ய என்னைப் பலப்படுத்துங்கள், நீர் என்னை வழிநடத்தும் வழிகளில் பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்த அனுமதித்தருளும். உமது சித்தம் இன்றும் எப்போதும் நிறைவேறட்டும். ஆமென்.

அன்புள்ள கடவுளே, எல்லா சத்தியங்களுக்கும் மூலகாரணரே, இன்று இந்தத் தேர்வுக்கு முன் என்னைப் பலப்படுத்தி, உம்மிடமிருந்து வந்த பரிசுகளான என் திறமைகளை பிரகாசிக்க அனுமதிக்கும்படி நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உமக்கு மரியாதை செலுத்த என் திறமைகளை எப்போதும் தைரியமாகப் பயன்படுத்த நான் பாடுபடுவேன். பூமியில் எந்தப் பாடமோ அல்லது தேர்வோ மிக முக்கியமானவற்றில் என்னை மதிப்பிட முடியாது என்பதை நான் அறிந்திருந்தாலும், இன்று என்னால் முடிந்ததைச் செய்ய உமது ஆசீர்வாதத்தை நான் இன்னும் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

ஆண்டவரே, இன்று என் தேர்வு நெருங்கி வருவதால், அமைதியையும் சமாதானத்தையும் தரும்படி நான் வேண்டுகிறேன். என் மனதை அமைதிப்படுத்தி, என் பதட்டத்தைத் தணித்தருளும். நான் என் தேர்வை எழுதும்போது என்னுடன் இருப்பீராக. என் கல்வி முயற்சிகள் அனைத்திலும், என் வாழ்க்கையிலும், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் உம்மை முழுமையாக நம்ப எனக்கு அருள் புரிவீராக. ஆமென்.