• Monday 10 March, 2025 08:55 AM
  • Advertize
  • Aarudhal FM

கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் வெட்டி படுகொலை

Aug 2, 2024, 6:57 PM

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கோவையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்யாவள்ளி கோவில்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனிடையே பொள்ளாச்சி செல்வதற்காக இன்று காலை தனது காரில் புறப்பட்ட உதயகுமாரின் உடல் மைலேரிபாளையம் அருகே கோழிப்பண்ணை முன்பாக கிடந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஓடும் காரில் இருந்து உதயகுமார் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்தவுடன் மர்ம நபர்கள் அவரை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வழக்கறிஞரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது காரிலேயே தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த உதயகுமாரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

thanks to asianet news tamil

சென்னையில் பயங்கரம்! 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

Aug 2, 2024, 12:07 PM

சென்னையில் 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டு உடல் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே, நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அடையாறு ஆற்றின் கரையோரம் வெட்டுக்காயங்களுடன் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) வெள்ளை சஞ்சய் (17) என்பதும் இவன் மீது பல்வேறு வழக்குகள் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

thanks to asianet news tamil

பிஞ்சு குழந்தைகள் சாமரம் வீச, பள்ளியிலேயே ஒய்யாரமாக படுத்து உறங்கிய ஆசிரியை

உத்தரபிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டத்தில் தானிபூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்துவதற்கு பதிலாக தரையில் படுத்துக் கொண்டு குழந்தைகளை தமக்கு காற்று வீசுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிஞ்சு குழந்தைகளும் ஆசிரியைக்கு காற்று வீசி உள்ளன.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

thanks to asianet news tamil

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி! 18 வயது மகனும் உடந்தை! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

Aug 1, 2024, 12:01 PM

மதுரை மாவட்டம்  திருமங்கலம் அசோக்நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). ராணுவவீரர். இவரது மனைவி ஜோதி(36). இந்த தம்பதிக்கு 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கம் கடந்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தர்மலிங்கம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி பால்பாண்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலுக்கு ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தர்மலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் பால்பாண்டியை மறக்க முடியாததால் ஜோதி அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் தர்மலிங்கத்துக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி விடுமுறைக்கு ஊருக்கு வந்த தர்மலிங்கம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திட்டமிட்டு வேனை ஏற்றி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனைவி ஜோதி, கொலைக்கு உதவியாக இருந்த 18 வயது மகன், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள பால்பாண்டியை தேடிவருகின்றனர்.

thanks to asianet news tamil

பள்ளி மாணவனை கரெக்ட் செய்து டியூசன் ஆசிரியை உல்லாசம்! விஷயம் தெரிந்த பெற்றோர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Jul 26, 2024, 10:49 AM

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூசன் எடுத்து வருகிறார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்துள்ளான். 

இந்நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்துள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாளடைவில் மாணவனின் பெற்றோருக்கு தெரிவயவந்ததை அடுத்து  டியூசன் அனுப்புவதை நிறுத்தி உள்ளனர். ஆனாலும் டியூசன் ஆசிரியை மாணவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

பொறுமை இழந்த மாணவனின் பெற்றோர் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியை கைது செய்யப்பட்டார். 

thanks to asianet news tamill

வேலூர் அரசு மருத்துவமனையில் கட்டை பையில் கடத்தப்பட்ட பிஞ்சு குழந்தை

Aug 1, 2024, 3:01 PM

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 25). கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி சின்னியை பிரசவத்திற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி அனுமதித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட தினமே இரவில் சின்னிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் பிரசவ வார்டுக்கு தாயும், சேயும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காலை 9 மணி அளவில் சின்னியின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சாப்பிட்டு முடிக்கும் வரை குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறும், தான் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி சின்னியும் தனது குழந்தையை அப்பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அப்பெண் பிஞ்சு குழந்தையுடன் திடீரென மாயமானார். இது தொடர்பாக கோவிந்தன், சின்னி தம்பதியர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சின்னி அடையாளம் காட்டிய பெண், கையில் கட்டை பையில் குழந்தையை வைத்து கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது. இது மேலும் கடத்திச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Thanks to asianet news tamil

2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி

Jul 28, 2024, 5:24 PM

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயா (வயது 78). இவர் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 17ம் தேதி வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற மூதாட்டி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது மகள் லோகநாயகி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் விஜயா குறிந்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் விஜயா குறித்து விசாரிக்க அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பார்த்திபன் என்பரை நேரில் வருமாறு காவல் துறையினர் கடந்த 23ம் தேதி அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பார்த்திபன் தனது மனைவி சங்கீதாவுடன் திடீரென மாயமானார்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் பார்த்திபனை தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில் விருதுநகரில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விஜயா குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தம்பதி இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 2 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டி அடையாற்றில் வீசியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

thanks to asainet news tamil

சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் சில்மிஷம்; பல் மருத்துவர் போக்சோவில் கைது – புதுக்கோட்டையில் பரபரப்பு

Jul 29, 2024, 11:49 PM

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 37), பல் மரு்துவரான இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கிய நிலையில், சிறுமியிடம் மருத்துவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக சிறுமியின் மீது சபலம் ஏற்பட்டு சிறுமியின் பெற்றோரிடம் குறிப்பிட்ட மருந்தை எழுதி கொடுத்து அதனை வெளியில் வாங்கி வருமாறு அனுப்பி உள்ளார்.

மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட மருந்தை வாங்குவதற்காக சிறுமியின் பெற்றோர் சிறுமியை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மருத்துவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி மருத்துவரிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்துள்ளார்.

அதே நேரத்தில் மருந்து வாங்கச் சென்ற சிறுமியின் பெற்றோரும் மருத்துவமனைக்கு வரவே சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி மருத்துவர் அப்துல் மஜீத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

thanks to asianet news tamil