கூண்டுக்குள்ளே இருந்தாலும்! வித்யா’வின் விண் பார்வை!
கூண்டுக்குள்ளே இருந்தாலும் கூவிக்கொண்டேதான் இருப்பேன் எனக்கு விரோதமாக இந்தக் கோழிக் கடைக்காரன் திட்டங்களைத் தீட்டி என்னை வெட்டி என்னால் ஏதாகிலும் லாபம் கிடைக்கும் என்று எண்ணினாலும் நான் கட்டப்பட்டிருந்தாலும் எனது உரிமைகள் அத்தனையும் இங்கே மறுக்கப்பட்டிருந்தாலும் ஊருக்குள்ளே இருந்து நான் கூவிக் கூவி ஊர் சனத்தை எழுப்பிவிட்டு அதிகாலைதோறும் செய்துவந்த எழுப்புதல் ஊழியங்களை செய்யக் கூடாதபடி என்னைத் தடுத்து வைத்திருந்தாலும் கூண்டுக்குள்ளே இருந்தாலும் கூவிக்கொண்டேதான் இருப்பேன் இப்படிக்கு, கிராமத்துச் சேவல்! வித்யா’வின் விண் பார்வை! நல்லாசான் – இஸ்ரேல் வித்ய பிரகாஷ்போதகர் / எழுத்தாளர்