- 4
- 20250122
கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் உள்ள பழமையான புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நான்கு கிலோமீட்டர் தூரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை கையில் ஏந்தி பவனியாக ஊர்வலம் வந்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் .
வண்ணாரப்பேட்டை ஆரோக்கியநதர் ஆலயம் பங்குத்தந்தை வர்கீஸ் ரோசாரியோ தலைமையில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு ஆராதனையில் ஈடுபட்டனர். குருத்தோலை முக்கிய பிரார்த்தனையின் போது வருகின்ற 19 ஆம் தேதி நடக்கக்கூடிய தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும் என பங்குத் தந்தை கிறிஸ்தவ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கோவையிலும், பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில், ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ரவி இன்பசிங்,உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர்,சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.