- 6
- 20250108
கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் பயங்கரவாதம்
இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி , சுமார் 400 கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் 30 தேவாலயக் குழுக்களின் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தையொட்டி, நாடு முழுவதும் நடைபெற்ற கூட்டங்களில், சுமார் 14 இடங்களில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து இந்த முறையீடு செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
2024 ஜனவரி மற்றும் நவம்பருக்கு இடைப்பட்டக் காலத்தில் கிறிஸ்தவ மக்களைக் குறிவைத்து நடைபெற்ற 720 தாக்குதல் சம்பவங்களை “எவன்ஜெலிக்கல் ஃபெல்லோஷிப் ஆப் இந்தியா” (Evangelical Fellowship of India) எனும் நிறுவனம் பதிவு செய்துள்ளது . அதேபோன்று “யுனைட்டெட் கிறிஸ்டியன் ஃபோரம்” (United Christian Forum) சார்பில் 760 தாக்குதல் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.
மதமாற்றத் தடைச் சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்துவது, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்துவருவது, மதச் சுதந்திரத்திற்கு எதிராக பெருகிவரும் அச்சுறுத்தல்கள், தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்க மறுக்கும் கொள்கை ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே 2023 முதல் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மணிப்பூர் கலவரத்திற்கு முடிவுக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மோடியை வலியுறுத்தியுள்ளனர்.
இறுதியாக, மதச்சிறுபான்மையினர் மீது ஏவப்படும் வன்முறைகளை விசாரிப்பது, மதச்சுதந்திரம் தொடர்பான அரசமைப்புச் சட்டங்களை பாதுகாத்திட மாநில அரசுகளுக்கு தெளிவான வழிக்காட்டுதல்களை வகுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகிய இருவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசிச மோடி ஆட்சி காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அதன் உச்சமாக, மணிப்பூரில் குக்கி இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களாகிய இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊரின் நடுவே வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது; மேலும் கட்டாய மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி கடந்த செப்டம்பர் மாதம் ஒடிசாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது போன்றவற்றை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகிய இந்துத்துவ மதவெறிக் கும்பல் அரங்கேற்றியது.
மேலும், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை காரணம் காட்டி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இந்துமதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்துவதும் மதக்கலவரத்தை உண்டாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.
சாதி, மத, இன ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றை முன்வைத்து பாசிச எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமாக மட்டுமே சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்படும்.