சீகன் பால்க் ஐயா இந்தியாவில் செய்த 24 சாதனைகளை பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க…

Share this page with friends

சீகன் பால்க் ஐயர் தங்கம்பாடியில் தனது தடம் பதித்து இத்துடன் 315 ஆண்டுகள் ஆகிறது. அவர் பாதம் பட்ட நாள் முதல் அவரது தியாகங்கள், பாடுகள், சாதனைகள் என அனைத்தையும் தாங்கி நிற்கிறது தரங்கம்பாடி. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் அதிக சாதனை படைத்தவர் எனற பெருமை இவருக்கே உரியது.

இன்றும் அவரது 315 வது ஆண்டு விழா காணும் நாம், அவரது வழிகாட்டுதலை பின்பற்றி, அவரது எண்ணத்தை நிறைவேற்றி, அவரது இந்திய வருகையை அர்த்தமுள்ளதாக மாற்ற அழைக்கப்படுகிறோம்.

நம் நாட்டு மக்களை, குறிப்பாக தமிழக மக்களை, புது படைப்பாக்கிடவே ஜெர்மானிய மிஷனரியான சீன்பால்க் ஐயர் அவர்கள், டென்மார்க் அரசரான நான்காம் பிரெட்ரிக் அவர்களின் ஆசியோடு இங்கு வந்தார். இவருடைய வருகை, இந்திய ப்ராடெஸ்டன்ட் திருச்சபைகளின் துவக்கமாக இந்திய வரலாற்று ஆசிரியர்களால் கவனிக்கப்படுகிறது. எத்தனை தடைகள், காயங்கள், வெறுப்புகள், இறப்புகள், உடல் பாதிப்புகள், உறவுகளையும் உடைமைகளையும் இழந்த நேரங்கள் என இவை அத்தனையையும் தாண்டி இயேசுவோடு இணைந்திருந்ததால் பல புதுமைகளை படைத்துள்ளார்.

1. முதன் முதல் இந்தியா வந்த புரோட்டஸ்டன்ட் அருள்தொண்டர். 2. முதன் முதல் அரசின் உரிமை பெற்ற அருள்தொண்டர்.

3. முதன் முதல் இந்தியாவில் புரோட்டஸ்டன்ட் பக்தியை பரப்பினவர். 4. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர்.

5. முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர்.

6. முதன் முதல் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்தவர்.

7. முதன் முதல் புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டவர்.

8. முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர்.

9. முதன் முதல் ஜெர்மன் ஞானப்பாடல்களை தமிழில் அச்சிட்டவர்.

10. முதன் முதல் தமிழ் நூல்களை ஜெர்மன் மொழியில் வெளியிட்டவர்.

11. முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர்.

12. முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.

13. முதன் முதல் ஏழைப்பிள்ளைகளுக்குக் காப்பகத்தை துவங்கியவர்.

14. முதன் முதல் பெண்களுக்குத் தையற்கூடம் ஆரம்பித்தவர்.

15. முதன் முதல் இலவச மதிய உணவு வழங்குவதைத் துவங்கினவர். 16. முதன் முதல் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடநூலை அச்சிட்டவர்.

17. முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தைக் கட்டினவர்.

18. முதன் முதல் தமிழ் மொழியில் அருளுரை ஆற்றினவர்.

19. முதன் முதல் இறையியல் கல்லூரியை உருவாக்கினவர். 20. முதன் முதல் பல் சமய உரையாடலை துவக்கினவர்.

21. முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர்.

22. முதன் முதல் தென்னிந்தியக் கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.

23. முதன் முதல் அருள்தொண்டில் பன்னாட்டு உறவை உருவாக்கினவர்.

24. முதன் முதல் ஜெர்மனியில் தமிழைக் கற்றுக்கொடுக்க பரிந்துரைத்தவர்.

இந்தியா வந்து, இங்கு வாழ்ந்து, இம்மண்ணிலே தனது இன்னுயிரைத் துறந்த சீகன்பால்க் ஐயர் தான் வாழ்ந்த 13 ஆண்டுகளில் இத்தனை காரியங்களை சாதித்துள்ளார்.

நாம் இன்னொரு சீகன்பால்க்காக மாறுவது எப்போது?

வாருங்கள் புது படைப்பாக மாறுவோம் ! மற்றவர்களை புது படைப்பாக மாற்றுவோம்!

இந்தியாவிற்கு கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள் என கேட்போருக்கு இப்பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி


Share this page with friends