நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.

Share this page with friends

நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசு விற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.

திருநெல்வேலி; 16.02.2021

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள இளங்கோ நகரில் கீழக்கு கீழத்தெருவில் இருந்த ஒரு குடிசை வீட்டில் மண்ணெண்ணை வாங்கி விளக்கு எரிக்க வசதியில்லாத தெருக்கூத்து கலைஞர் தங்கராசு இல்லத்தில் சென்று சந்தித்தோம்.

(தங்கராசு அவர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பரியின் அப்பாவாக நடித்திருப்பவர்)

அவருடன் அவர் மனைவி பேச்சிக் கனி உடன் இருந்தார் இருண்ட குடிசையில் மழையில் இடிந்து போன விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து வரவேற்றார்

40 வருடங்களாக தெருக்கூத்து கலைஞனாக பெண் வேடமிட்டு ஆடி வருவதாகவும் தற்போது வயது ஆகி விட்ட காரணத்தால் தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை எனவும் தனது விட்டின் மேற்கூரை மாற்ற அருகில் உள்ள பனை மரத்தில் இருந்து ஓலையை வெட்டி மேற்கூரை அமைக்க வசதி இல்லை என கனத்த குரலில் தெரிவித்தார்.

தற்போது சாத்தூரில் இருந்து வெள்ளரிக்காய் வாங்கி வந்து பாளையங்கோட்டை மார்க்கட் பின்புற வாசலில் வைத்து வியாபாரம் செய்வதாகவும் தற்போது பெய்த மழையால் வெள்ளரி விளைச்சல் அலுகி போனதால் அந்த வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தழுதழுத்த குரலில் தெரிவித்தது நெஞ்சை கரைய வைத்தது.

அவரது மனைவி பேச்சிக் கனி தனது ஒரே பெண் குழந்தை எம்.ஏ கரஸ்ல் படித்து முடித்து விட்டு டீச்சர் ட்ரெயினிக் முடித்து உள்ளதாக தெரிவித்தார்

தங்கராசுவின் குடும்ப சூழ்நிலை நெல்லை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு அவர்கள் உடனடியாக தங்கராசுவை நேரில் அழைத்து குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடு ஒன்று ஓதுக்கி தர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும். மேலும் தங்கராசுவின் மகளுக்கு ஆட்சியர் அலுவலகத்திலேயே 10000 ரூபாய் மாத ஊதியத்தில் தற்காலிக வேலை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும் தங்கராசு தெரிவித்தார்.

நலிவடைந்த நாட்டு புறக் கலைஞர் என்ற அடிப்படையில் மாதம் 3000 ரூபாய் ஓய்வுதியம் வழங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

தங்கராசு குடும்பத்தின் வாழ்வாதாரம் சிதைந்த சூழலில் அவருக்கு உதவிட உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் மூலம் நிதி திரட்டி உதவி செய்யப்படும் என தெரிவித்தேன். தங்கராசு கண்ணீர் மல்க இரண்டு கைகளையும் பிடித்து நன்றி கூறியது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும், நலிந்த நாட்டு புறக் கலைஞர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யும்படி உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends