அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி!!

Share this page with friends

சென்னை: சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழக அரசு கலாச்சார, மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இதர கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியது. அதனை தற்போது ரத்து செய்துள்ளது. கொரோனா நோய் பரவல் பல நாடுகளில் இரண்டாம் அலை தொடங்கி வருவதால் அரசு இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் மக்களின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் அக்டோபர் மாத இறுதியில் தமிழக அரசு நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 16.11.2020 முதல் அனுமதி வழங்கப்பட்டது. 100 பேருக்கு மிகாமல் கூட்டங்கள் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா நோய் பரவல் காரணமாக தற்போது இந்த அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தடை உத்தரவு:

இது குறித்து அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், “வெளிநாடுகளில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலையாக பரவி வருகின்றது. அதே போல் தமிழகத்தில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை என அரசுக்கு தற்போது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அரசு சார்பில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது”

“அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தடை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் அதிகம் வாசித்தவை:

தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்
ஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் ...
நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார்! - டி.டி.வி தினகரன்
அப்படித்தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்.. பஜ்ரங்தள் கோஷ்டியை வெலவெலக்க வைத்த கர்நாடகா பெண் நந்தினி!
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை நாய் என்று கூறினாரா திருமாவளவன்? செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சி..!
வாக்களித்த எங்களுக்கு ஏமாற்றம் தந்து விடாதீர்கள் !
தேவாலயம் திறக்க வேண்டும் ஸ்டேஷன் முன் போராட்டம்
அஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை
தேவாலயங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை:
போப்பை கட்டித்தழுவி அன்பை பகிர்ந்த பிரதமர் மோடி - வைரலாகும் புகைப்படங்கள்

Share this page with friends