வழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி
வருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் சிறிய அளவில் செயல்படும் வழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
செய்தி வெளியீடு எண் 451. (29.06.2020) அன்றைய தமிழக அரசு செய்தி வெளியீட்டின் படி ஏழாவது பக்கம் இரண்டாவது குறிப்பின் முதலாவது துணை குறிப்பை உங்களுக்கு தருகிறோம்.
கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள் அதாவது ஆண்டு வருமானம் 10 ஆயிரத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்காக்கள், சிறிய தேவாலயங்கள் மட்டும் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும்.
இத்தகு வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதி தவிர மற்றும் தமிழ்நாட்டில் நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் வருகிற ஜூலை ஆறாம் தேதி முதல் சிறிய அளவில் திறக்க தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகளை கொண்டு இந்த அனுமதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டு வருமானம் ரூபாய் பத்தாயிரத்துக்கும் குறைவாக உள்ள வழிபாட்டுத் தலங்களை மட்டுமே திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் திறக்கப்படும் வழிபாட்டுத்தலங்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
அதாவது சென்சார் மூலம் காய்ச்சல் கண்டுபிடிக்கும் கருவி கொண்டு அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். மேலும் சானிடேசர் கொண்டு வழிபாட்டுக்கு முன்னும் பின்னும் வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்திருக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களுக்கு வருகிறவர்கள், வெளியே சென்றவர்கள் தங்கள் கை கால்களை சுத்தம் செய்ய ஆயத்த வசதிகள் செய்து இருக்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். இதுபோன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். இவைகளை மீறும் பட்சத்தில் அது நமக்கே ஆபத்தாக மாறும்.
உங்கள் ஆலயத்தை திறக்கலாமா? வேண்டாமா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அரசு வெளியீட்டில் தேவாலயம் என்று குறிப்பிட்டிருப்பதால் சற்று கவனமாக இருங்கள். வீட்டுகுழுக்கள் அல்ல, தேவாலயம் என்று பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த ஊரடங்கு காலத்தில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் இந்த ஊடகத்தில் அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த செய்தியை வீடியோவாக பாருங்கள்