1) கிறிஸ்தவ வட்டார நடப்பு செய்திகளை அறிந்து, கள நிலவரத்துடன் கிறிஸ்தவ செய்திகளாக்கி உடனுக்குடன் கொடுத்து வருகிறோம்.
2) வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதனை நிருபிக்கும் ஆதாரங்களை சரித்திரத்திலிருந்தும் விஞ்ஞான ஆய்வுகளிலிருந்தும் குறிப்புகள் எடுத்து தொகுத்து வெளியிட்டு வருகிறோம்.
3) வாழ்வில் தேவ சித்தம் அறிந்து சாதித்த, சாதித்துக்கொண்டிருக்கிற பல்வேறு தேவ ஊழியர்களை நேர்காணல் செய்து வெளியிட்டு வருகிறோம்.
4) பக்திவிருத்தியை உண்டு பண்ணும் மெய்சாட்சிகளை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறோம்
5) கிறிஸ்தவத்திற்கு எதிராக தாக்குதல், மோதல்கள், உட்பூசல்கள் ஏற்படும் போது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோறுதல்
6) விஷேசித்த நாட்களில் அந்த நாளை குறித்த தகவல்கள், வரலாறுகள் இவைகளுடன் வேதாகம கண்டோட்டத்தில் தேவச்செய்திகள் வழங்கப்படுகிறது.
6) பலருக்கு பக்திவிருத்தியையும், தெளிவையும் கொடுக்கும்படி மின்னஞ்சல் வாயிலாக கேட்கப்படும் கேள்விகளை பகுத்து ஆராய்ந்து தக்க பதிலை வழங்கி வருகிறோம்.
7) இசை / பாடல் / குறு நாடகங்கள் / கிறிஸ்தவ சினிமா ஆர்வம் உடையவர்கள் தங்களது படைப்புகளை குறைந்த கட்டணத்தில் நமது ஊடகத்தின் மூலம் வெளியிட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது
8) வேத பாடங்கள், வேதாகம தேர்வுகள் இணையதளம் மூலமாக ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
9) புத்தக எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு புத்தக வெளியீடு செய்யவும், புத்தக மதிப்பாய்வு செய்யவும், புத்தக இணைய விளம்பரம் செய்யவும் TCN Media உதவுகிறோம்.
10) ஆண்டுக்கு ஒரு முறை சமூக ஊடகங்கள் மூலம் ஊழியம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் செய்து கொண்டிருப்பவர்களுக்காக Christian Creater Camp நடத்தி வல்லுனர்களை கொண்டு பயிற்சி வழங்கி வருகிறோம்.
