கண்ணீர் விடும் தாய்மார்களே!
சீரியலைக் கண்டு
கண்ணீர் விடும் தாய்மார்களே!
சிலுவைக் காட்சியைக் கண்டு
கண்ணீர் விட மாட்டீர்களா?
பட்டப்படிப்பு படிக்க
பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களே!
பாடுகளை அனுபவித்தவரை அறிவிக்க
பிள்ளைகளை அனுப்ப மாட்டீர்களா?
இங்கிலீஷில் பிள்ளைகள்
பேச வேண்டுமென ஆசைப்படும் பெற்றோர்களே!
இயேசுவுக்காய் என் பிள்ளைகள்
பேச வேண்டுமென ஆசைப்பட மாட்டீர்களா?
உலகில் எதையாகிலும்
சாதிக்கத்துடிக்கும் இளைஞர் கூட்டமே!
இயேசுவே ! உமக்காய்
என்ன செய்ய வேண்டுமெனக் கேட்க மாட்டீர்களா?
கிறிஸ்துமஸை விமர்சையாய்க்
கொண்டாக் ஆசைப்படும் ஜனக்கூட்டமே!கிறிஸ்து என்னில்
பிறக்க வேண்டுமென ஆசைப்பட மாட்டீர்களா?
ஆண்டவரிடமிருந்து
ஆசீர்வாதத்தை பெறத் துடிக்கும் விசுவாசிகளே!
ஆண்டவருக்காய்
காரியங்களை செய்ய மாட்டீர்களா?
பண்டிகைகளிலே புதுவஸ்திரத்தால்
சரீரத்தை அழகுபடுத்தும் கிறிஸ்தவர்களே!
இரட்சிப்பின் வஸ்திரம் தரித்து
ஆத்துமாவை அழகுபடுத்த மாட்டீர்களா?