வாலிபர்களே கண்டுபிடியுங்கள் உங்கள் அன்பு உண்மையானதா? எப்படி?

Share this page with friends

A. உண்மையான அன்பில் அவசரமில்லை

ஏனெனில் அது நீடிய சாந்தம் மற்றும் பொறுமை உள்ளது, அது பிடிவாதம் கொள்ளாது. விட்டு கொடுக்கும். பிறர் சொல்வதை நிதானித்து கொள்ளும். பொறுமை காத்து கொள்ளும்.

(அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. 1 கொரி 13:4 a)

B. உண்மையான அன்பில் எருசசல் பொறாமை இல்லை

ஏனெனில் நாம் நேசிக்கிறவர்களை free யான நிலையில் பிறரோடு நட்பு பாராட்ட விடுவோம். பிறரோடு சிரித்து பேசினால் அதை ஏற்று கொள்வோம்.

(அன்புக்கு பொறாமையில்லை. 13:4 b)

C. உண்மையான அன்பில் வீணான புரம்பான புகழ்ச்சி இராது. தற்புகழ்ச்சி இராது.

ஏனெனில் உண்மையான அன்பு வீம்பு கொள்ளாது. எப்போதும் பாராட்டி கொண்டே இருக்க வேண்டும், மெச்சி, கொஞ்சி கொண்டே இருக்க வேண்டும் என்று கருதாது. பித்து பிடிக்காது. தன் காலத்தில் செய்ய/ கவனிக்க வேண்டிய வேலையில் கருத்தாக இருக்கும். அடம்/ முரண்டு பிடிக்காது. பிடிவாதம் கொள்ளாது. செத்து போவேன் என்று மிரட்டாது. சுய நலமாக இராது.

(அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
1 கொரிந்தியர் 13:4b)

D. உண்மையான அன்பு யோக்கியமான நிலையில் நடந்து கொள்ளும். தேவையில்லாமல் உணர்ச்சியை தூண்டி அறுவருப்பானதை செய்யாது.

இருவர் காலத்திற்கு முன்பே தனிமையில் ஊர் சுற்ற, அந்தரங்க வெட்கக்கேடான செயல்களில் ஈடுபடாது. எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருக்காது, சும்மா சிடு முஞ்சியாக இருந்து கொண்டே இருக்காது. சாப்பிட முடியாமல், நகம் கடித்து கொண்டே ஏதோ தேவை இல்லாமல் தனிமையில் கற்பனை உலகில் மிதந்து கொண்டே இருக்காது. உறவுகள், சபை, மற்றும் பெற்றaருக்கு தீங்கு நினையாது. தன் சரீரத்தை தீட்டுப் படுத்த விட்டு கொடுக்காது.
(அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.
1 கொரிந்தியர் 13:5)

E. உண்மையான அன்பு நேர்த்தியாக நீதியாக நடக்கும். ஒழுங்குகளை மதிக்கும்.

பொய் சொல்லாது, திருட்டுத்தனமாக கள்ளத்தனமாக ஓடி போகாது. சபையை மதிக்கும், சபை, கிறிஸ்து மற்றும் உறவுகளுக்கு அவப்பெயர் உண்டு பண்ணாது. உறவுகளை இல்லை என்று மறுதலியாது. உறவுகள் மற்றும் சபையை தவிக்க விடாது. யதாற்த்தத்தை புரிந்து கொள்ளும். வேசம் போடாது. தன்னலம் கொள்ளாது.

(அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
1 கொரிந்தியர் 13:6)

F. உண்மையான அன்பு சுபாவத்தை விரும்பும். பாடுகள், வேதனைகள் எல்லாவற்றையும் தாங்கும்.

பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நம்பும். காலம் சரியாக வரும் வரை, தேவ சித்தம் என்று எல்லாரும் ஏற்று கொள்ளும் வரை சகலத்தை சகிக்கும். கூடலை விட பிரிதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வர். அந்நிய நுகத்தில் பினையாது. யாரையும் நிர்பந்திக்காது. தனக்காக பிறரை தூண்டி விடாது. கர்த்தர் பார்த்து கொள்வார் என்று கர்த்தரை நம்ப செய்யும். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்கிற நம்பிக்கை விசுவாசம் வர்த்திக்க செய்யும். பாடுகள், இயலாமைகல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் உறுதியாக நிற்கும். எதையும் எதிர்பார்த்து பழகாது. ஏனெனில் இது புறம்பான அழகு பார்த்து வருவதில்லை.

(சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
1 கொரிந்தியர் 13:7)

G. கடைசியாக உண்மையான அன்பு ஒருக்காலும் மாறது.

நேரத்துக்கு நேரம் ஒருவிதமான நிலையில் நடக்காது. அக்கரைக்கு இக்கறை பச்சை என்று இருக்காது. அம்மோன் தாமார் போன்று மாம்ச இன்பத்தில் முடிவது கிடையாது. இதில் வெறுமை இல்லை, வெறுப்பு இல்லை, பாடுகளின் மத்தியில் துணை நிற்கும், பாதியில் விட்டு விட்டு ஓடாது, இதை விட அது நல்லது என்று இன்னொன்றை நாடாது. மரணம் வரை அதையும் தாண்டி நித்தியம் வரை கொண்டு செல்லும்.

(அன்பு ஒருக்காலும் ஒழியாது.
1 கொரிந்தியர் 13:8)

இந்த ஒழிந்து, அழிந்து, மறைந்து போகாத அன்பையே கிறிஸ்து சிலுவையில் வெளிப்படுத்தி நாம் பாவிகளால் இருக்கையில் அன்பு கூர்ந்தார். இந்த அன்பே பெரியது.

செலின்


Share this page with friends