தொலைக்காட்சிப் பெட்டி என்பது! வித்யா’வின் விண் பார்வை

Share this page with friends

சிந்தனைக்கு ஓர் சிறிய தகவல்

தொலைக்காட்சிப் பெட்டி என்பது
ஓயாமல் 24 மணி நேரமும்
ஓடிக்கொண்டிருக்கும்
உன் இதயம் அல்ல.

தொல்லை கொடுக்கும்
தொலைக்காட்சிப் பெட்டிக்கு
ஒய்வு கொடுத்து
உன் இதயத்தை இதமாக்கு

உன் மனதை அமர்ந்திருக்கப்பண்ணு

உன் கண்களுக்கு கலிக்கம் போடு
(வெளி.3:18 )
இரைச்சலின் சத்தத்திற்கு உன்
செவிகளை விலக்கிவிடு
சத்தியத்திற்கு உன்
செவியைச் சாய்த்துவிடு

(2 தீமோத்தேயு 4:4)

இந்த நாள் கர்த்தருடைய நாள்
இதிலே களிகூர்ந்து மகிழ்ந்துவிடு

விசனம் நிறைந்த இதயத்தை
வசனம் என்னும்
மன்னாவினால் நிரப்பிவிடு

காலத்தை ஆதாயமாக்கி
காலத்தை வென்றுவிடு

இனியொரு முறை
இந்த உலகத்தில்
பிறக்கப்போவதில்லை

ஒரே ஒரு வாழ்க்கை
அதை அர்த்தமுள்ளதாக்கிவிடு

நான் எழுதியது
உனக்குப் பிடித்திருந்தால்
ஒரு வரி எழுதிப் போடு

அந்த ‘ஒரு வரி’யையும்
‘உன் முகவரி’யையும்
காண காத்திருக்கிறேன்.

நான் போதகன் மட்டுமல்ல
நானும் ஒரு விசுவாசிதான்

விவரம் தெரிந்த நாள் முதல்
விசுவாசிக்கிறேன்

1998 முதல்
போதகனாயிருக்கிறேன்
அவ்வளவுதான்

வா,
தேவனுடைய ராஜ்யத்தைத்
தேடுவோம்
நம் தேவனுடைய நாமத்தினால்
கொடியேற்றுவோம்

இப்படிக்கு,

எழுதி எழுதி
எழும்பிப் பிரகாசிக்க
அழைக்கப்பட்டவன்

பாஸ்டர்
ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் சபை
மதுரை -14
91-77080 73718


Share this page with friends