பற்றிக்கொள்ள வேண்டியவை பத்து

Share this page with friends

அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவ விருட்சம். அதைப்
பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்
(நீதி : 3 : 18).

இந்தக் குறிப்பில் பற்றிக்கொள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி , நாம் பற்றிக்
கொள்ளவேண்டிய பத்து காரியங்களை இதில் கவனிக்கலாம்.

 1. இந்நாள் மட்டும் நீங்கள் செய்தது போல உங்கள்
  தேவனாகிய கர்த்தரைப் பற்றிக் கொண்டிருங்கள்
  (யோசுவா : 23 : 8)
 2. நித்திய ஜீவனைப்பற்றிக்கொள்.
  (1 தீமோ : 6 : 12)
 3. உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு என் முழு இருதயத்
  தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்
  (சங் : 119 : 34)
 4. நமக்கு முன் வைக்கப் பட்ட நம்பிக்கையை பற்றிக்கொள்ளும்படி
  (எபி : 6 : 18)
 5. தீமையை வெறுத்து நன்மையை பற்றிக் கொள்ளுங்கள்.
  (ரோமர் : 12 : 9)
 6. நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்.
  (எபி : 4 : 14)
 7. ஞானத்தைப் பற்றிக்கொள்ளுகிற எவனும்
  பாக்கியவான்
  (நீதி : 3 : 18)
 8. நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் .. உறுதியாய் பற்றிக்கொண்டிருப் போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்
  (எபி : 3 : 6)
 9. தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ள கடவோம்.
  (எபி : 12 : 28)
 10. ஒருவரும் உன் கீரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு (வெளி : 3 : 11).

நாம் பற்றிக்கொள்ள வேண்டிய பத்துக் காரியங்களை இந்தக் குறிப்பில் வேத வசனத்தின் ஆதாரத்தோடு கவனித்தோம். தொடர்ந்து உன் ஆண்டவராகிய இயேசுவை உறுதியாய்
பற்றிக்கொள்ளுங்கள்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends