திருச்சியை சேர்ந்த போதகர் ஒருவரின் தலையை தாக்கியதால் கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு

Share this page with friends

திருச்சியை சேர்ந்த போதகர் ஒருவரின் தலையை தாக்கியதால் கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு

திருச்சி 04, அக்டோபர் 2021

திருச்சி மாவட்டம் வரகனேரி  பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜி திருச்சபையின் போதகராக பணியாற்றி வருபவர் பாஸ்டர். அடைக்கலராஜ். இவர் கடந்த 3.10.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பகுதியில் ஜெபநடை சென்றுள்ளார். வழியில் தற்செயலாக சந்தித்த ஒருவருக்கு இயேசுவைக் குறித்து அறிவித்துள்ளார். இதனை கண்ட பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த சிலர் கடும் கோபத்துடன் போதகர் அடைக்கலராஜ்யை  கண்டித்தவாறே அவரது தலை பகுதியில் கட்டையினால் தாக்கியுள்ளனர்.

பலத்த காயத்துடன் தலையில் இரத்தம் வழிந்த நிலையில் இருந்த போதகர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து வந்த போலீசார் தாக்கியவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவமானது திருச்சி மாவட்ட கிறிஸ்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல்வேறு கிறிஸ்தவ அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத் 25 ன் படி தனது மத நம்பிக்கைகளை எங்கும் யாருக்கும் பரப்பலாம் என்ற சட்ட ஒழுங்கின்படி போதகர் செய்துள்ள நிலையில் தாக்குதல் நடந்திருப்பது இந்தியாவின் மத சார்பின்பையை ஊனப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற மதவெறி தாக்குதல்கள் தமிழகத்தில் நிறுத்தப்படவும், தமிழக அரசும், காவல்துறையில் இதுபோன்ற நிகழ்வுகளில் நேரடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மேல் பாரபட்சம் பாராது விசாரணை மேற்கொள்ளவும் நாம் பாரத்துடன் ஜெபிப்போம். ஜெபத்திற்காக இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

New Testament teaching on giving can be summarized with seven P principles!
இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை
நாடு முழுவதும் 20,674 கிருஸ்தவ என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி
கேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை
மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
ஈஸ்டர் வாழ்த்து சொல்லலாமா?
அப்பம்
சிலுவையில் இருந்து கற்றுக்கொள்ளும் ஞானம்
சென்னை எழும்பூரில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் 200-வது ஆண்டு விழா - பெருமிதத்துடன் கொண்டாடப்பட...
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பண...

Share this page with friends