தெரசா மதமாற்றம் செய்கின்றார் அவரை நாட்டை விட்டு வெளியேற்று? ஏன்? நடந்தது என்ன ?

Share this page with friends

Apr 5, 2021

ஒரு முறை நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த தெரசா மதமாற்றம் செய்கின்றார், அவரை நாட்டை விட்டு வெளியேற்று எனபிரச்சனை செய்தார்கள் .

நேரு அமைதியாக சொன்னார், “வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பிவிடுவோம்” என சொல்லிவிட்டு கல்கத்தா விரைந்தார்..

காவி கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, செல்வோம் அங்கே அந்தம்மா ஞானஸ்நானம் கொடுத்துகொண்டிருக்கும், இன்றே தூக்கிவிடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்..

நேரு அவர்கள் உள்ளே நுழைய அக்கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அங்கே தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுகொண்டிருந்தனர், சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர், சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டிருந்தனர்..

சீழ்பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக்காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்துகொண்டிருந்தார்கள்.

ஜெபமாலையும், கர்த்தராகிய இயேசு வாழ்க, அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி..

நேரு கேட்டார் “இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்.

காவிகள் சொன்னது “நம் நாட்டுக்காரர்கள்”

“அந்த பெண் யார்?”

“அயல்நாட்டுக்காரி”

நேரு சற்று கோபத்துடன் சொன்னார், இந்நாட்டு நோயாளிகளை அந்நிய நாட்டு பெண் வந்து பராமரிக்கின்றார். உங்கள் வீட்டு பெண்கள் இந்த சேவைக்கு வர தயார் என்றால் இப்பொழுதே தெரசாவினை அனுப்பிவிடுகின்றேன்.

அதன் பின் காவி அட்டகாசம் தெரசா சபைக்கு இல்லை..! இன்றும் இப்படித்தான் பல உதவாத காவி கோமாளிகள் பொய் சொல்லி திரிகிறார்கள்.


Share this page with friends