சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் மர்ம நபர் பயங்கர தாக்குதல்… சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Share this page with friends

சென்னை: சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் பட்டா கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கணினி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு இன்று மாலை சுமார் 6.45 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே வந்துள்ளார். அலுவலகத்திற்குள் வந்ததும் தனது guitar bagஇல் மறைந்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து அலுவலகத்தில் இருந்தவர்களை மிரட்டியுள்ளார்.

மேலும், அங்கிருந்த அலுவலக கண்ணாடி, கணினி, டேபிள் உள்ளிட்டவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடித்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அந்த நபரை வீடியோ எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் காதில் கேட்க முடியாத ஆபாச சொற்களால் அவர்களைத் திட்டினார்,

மேலும், “நல்ல வீடியோ எடுங்கள்.. நாளைக்கு இது எல்லாம் முக்கிய செய்திகள்ல வரனும்” என்றும் அவர் ஆவேசமாகக் கத்துகிறார். இந்த வீடியோக்களும் ட்விட்டரில் தற்போது வைரலாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார், எதற்காக இப்படித் தாக்குதல் நடத்தினார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

தலைநகர் சென்னையில், அதுவும் ஊடக நிறுவனம் மீதே இதுபோன்ற வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்தவ மக்களின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற இந்த பிரபல ஊடகத்திற்காக நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும். மேலும் முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்கள், ஊகவியலாளர்கள் என அனைவருக்கும் தேவவையான பாதுகாப்பிற்காகவும் நாம் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஜெபம் ஜெயத்தை தரும்

மக்கள் அதிகம் வாசித்தவை:

சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள்
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
சபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
கனத்திற்குரிய சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்களுக்கான சில ஆலோசனைகள்!
குடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா? கண்ணீர் வரவழைக...
அருள் மாரி எங்குமாக - பாடல் பிறந்த கதை
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள்...
மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல்
டெல்லியில் அனல் பறந்த சிறப்புரை | தலைவர்களுக்கு நற்செய்தி
ஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்

Share this page with friends