தேவனுக்கு நன்றி சொல்ல 100 அருமையான காரணங்கள்

Share this page with friends

Rev. Dr. Jerry Daniel

I. நீங்கள் பிறந்த இடம், காலம் இவைகளுக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்.

 1. உங்கள் தாயின் கருவில் நீங்கள் உண்டானதற்காக.
 2. உங்கள் தாயின் கருவில் தேவன் உங்களை உருவேற்படுத்தியதற்காக
 3. உங்கள் தாயின் கர்ப்பத்தில் நீங்கள் பாதுகாக்கப்பட்டதற்காக
 4. நீங்கள் பிறக்கும் தருணத்தில் காப்பாற்றப்பட்டதற்காக
 5. நீங்கள் சுதந்திரமான தேசத்தில் பிறந்ததற்காக
 6. உங்களை நேசிக்கும், பராமரிக்கும் பெற்றோருக்காக
 7. உங்கள் உடன்பிறந்தவர்கள், தாத்தா, பாட்டி மற்றும் உங்கள் அனைத்து உற்றார் உறவினர்களுக்காக

II. உங்கள் குழந்தை பருவநாட்களுக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்.

 1. உங்களை கட்டியணைத்து அன்பை தந்தவர்களுக்காக
 2. நடு இரவில் நீங்கள் பசியால் அழுதபோது உங்கள் பசியை போக்கியவர்களுக்காக
 3. நீங்கள் உடல்நலமின்றி இருந்த போது உங்களை கவனித்து கொண்டவர்களுக்காக
 4. உங்களுக்கு கதைகள் சொல்லி, உங்களுடன் அன்பாக விளையாடியவர்களுக்காக
 5. உங்களுக்கு நடக்கவும், ஓடவும், சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தந்தவர்களுக்காக

III. பாதுகாப்பிற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. காயம் மற்றும் மரணத்தினின்று காப்பாற்றப்பட்டிருப்பீர்களெனில்
 2. வாகன விபத்துக்குள்ளாகி, அதிலிருந்து மீண்டு வந்திருப்பீர்களெனில்
 3. மரணத்திற்கேதுவாக நோய்வாய்ப்பட்ட நிலையில் ஜீவனுடன் காக்கப்பட்டிருப்பீர்களெனில்
 4. உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியவர்களுக்காக
 5. பூமியதிர்ச்சி, புயல், வெள்ளம் போன்ற கடும் இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு/மீண்டு வந்திருப்பீர்கள் என்றால்
 6. எந்த விதமான ஒரு அடிமைத்தனத்திற்கும் உட்படாமல் காக்கப்பட்டிருந்தால்
 7. ஏதாவது அடிமைத்தனத்தை மேற்கொண்டு இருப்பீர்களெனில்
 8. நீங்கள் அறியாமலே பாதுகாக்கப்பட்ட அனைத்து தருணங்களுக்காகவும், அப்படி உங்களை பாதுகாக்க தேவன் நியமித்த தேவதூதர்களுக்காகவும்.

IV. ஆரோக்கியத்திற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. உங்களை இதுவரை நோயின்றி காத்த தயவிற்காக
 2. உங்களுக்கு நேரிட்ட உடல் நலக்குறைவுகள், நோய்களிலிருந்து சுகம் பெற்றதற்காக
 3. நீங்கள் இதுவரை ஆம்புலன்ஸ் பயன்படுத்தும் அவசியம் ஏற்படவில்லையெனில்
 4. இதுவரை உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லையெனில்
 5. இன்று வரை நீங்கள் மனநிலை பிரச்சனைக்கு ஆளாகவில்லையெனில்
 6. உங்கள் ஐம்புலன்களும் சிறப்பாக இயங்குகிறது எனில்
 7. உங்களால் நடக்க, ஓட, ஏற, குதிக்க முடிகிறது எனில்
 8. உங்கள் உடலின் ஒவ்வொரு செயல்பாடு மற்றும் இயக்கத்திற்காக
 9. நீங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்த நாட்களைக் கணக்கிட்டு நன்றிகூறுங்கள் (உதாரணமாக 20 வருடங்கள் = 7300 நாட்கள்)

V. உணவிற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. ஒரு நாளில் மூன்று முறை சாப்பிட உணவு கிடைக்கிறதென்றால்
 2. பசியுடன் தூங்க செல்லும் நிலை நேரவில்லையென்றால்
 3. உணவால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருந்ததற்காக
 4. உங்களுக்கு உணவு ஒவ்வாமை (Food allergy) இல்லையென்றால்
 5. பல வகையான உணவுகளை உண்டு சுவைக்க வாய்ப்பிருந்தால்
 6. உங்களுக்கு விருந்து உண்ணும் வாய்ப்புகள் கிடைத்திருந்தால்

VI. ஆவிக்குரிய ஆசிர்வாதங்களுகாக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. உங்கள் இரட்சிப்பிற்காக
 2. நல்ல ஆவிக்குரிய சபையில் அங்கத்தினராய் இருப்பதற்காக
 3. விசுவாசம், கிருபை, சந்தோஷம், நம்பிக்கை, ஞானம், கீழ்படிதல் இவற்றில் நீங்கள் தேறி வருகிறதற்காக
 4. விசுவாசிகளின் ஐக்கியத்திற்காக
 5. பரிசுத்த வேதத்திற்காக, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்காக
 6. நீங்கள் கிரமமாக ஜெபிப்பதும், அந்தரங்கமாக உபவாசிப்பதும் உண்டெனில்
 7. நீங்கள் பாவத்தில் விழாமல் காப்பாற்றப்பட்டதற்காக மற்றும் பாவத்தினின்று மனந்திரும்ப கிடைத்த தருணங்களுக்காக
 8. உங்களுக்காக ஜெபிக்கும் மற்றவர்களுக்காக

VII. சமாதானத்திற்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. நீங்கள் போர் பதற்றம் நிறைந்த சூழலில் வாழவில்லை என்றால்
 2. உயிரை காப்பாற்றிக்கொள்ள மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை உங்களுக்கு இல்லையென்றால்
 3. உங்களுக்காக பரிந்து பேசி, உங்கள் உரிமைகளை பெற்றுத்தர போராடுபவர்களுக்காக
 4. போரில் உங்கள் அன்புக்குரியவர்களை நீங்கள் இழக்கவில்லையென்றால்

VIII. வசதிகளுக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. குடிநீர் வசதிக்காக
 2. சுத்தமான, சுகாதாரமான நீர் கிடைப்பதற்காக
 3. நல்ல வீடு வசதிக்காக
 4. நல்ல உடைகள், வாகனம் போன்ற வசதிகளுக்காக
 5. மின்சாரம் மற்றும் சாலைகள் போக்குவரத்து வசதிகளுக்காக
 6. நல்ல தூய்மையான காற்றுக்காக
 7. வீட்டு உபயோகப் பொருட்களுக்காக (மின்விசிறி, ஏர்கண்டிஷனர், மிக்ஸி, கிரைண்டர், குளிர்சாதன பெட்டி, Gas stove, Cooker, Blankets, Sweaters கட்டில், மெத்தை, etc)
 8. நம் வீடுகள் வீதிகளிலிருந்து குப்பைகள்/கழிவுகள் அகற்றப்படும் வசதிக்காக
 9. நமக்கு கடிதங்கள், பார்சல்கள் கொண்டு வரும் தபால் மற்றும் கூரியர் வசதிகளுக்காக

IX. கல்விக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. உங்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்காக
 2. உங்கள் நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்காக
 3. உங்கள் கல்லூரி ஆசிரியர்களுக்கும் உங்களை உருவாக்கிய ஆசான்களுக்காக
 4. ஒவ்வொரு முறையும் உங்கள் பள்ளி கல்லூரித் தேர்வுகளில் பெற்ற வெற்றிக்காகவும், நீங்கள் பெற்ற பட்டங்களுக்காகவும்
 5. விளையாட்டு, பாட்டு, இசை, தலைமைத்துவம் போன்ற நீங்கள் பெற்றிருக்கும் தாலந்துகளுக்காக
 6. நீங்கள் படித்த புத்தகங்கள் வாயிலாக நீங்கள் கற்று அறிந்தவைகளுக்காக

X. உறவுகளுக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாய் இருந்த தருணங்களுக்காக
 2. நீங்கள் அழும்போது அரவணைத்து ஆறுதல்படுத்தியவர்களுக்காக
 3. நீங்கள் தேவையில் இருக்கும்போது உதவி செய்தவர்களுக்காக
 4. உங்களை நேசிக்கிறவர்களுக்காக, அதை உங்களிடம் கூறி வெளிப்படுத்தியவர்களுக்காக
 5. உங்கள் திருமண வாழ்விற்காக, கணவன் மனைவிக்காக
 6. உங்கள் பிள்ளைகளுக்காக
 7. உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும்
 8. உங்கள் உற்றார், உறவினர் மற்றும் சம்பந்தம் செய்த குடும்பத்தினர்; குடும்ப நண்பர்களுக்காக
 9. நீங்கள் அறிந்திராத விட்டாலும் உங்களுக்கு உதவிய மூன்றாம் நபர்களுக்காக
  (Strangers)

XI. வேலைக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. உங்களுக்கு கிடைத்திருக்கும் வேலைக்காக
 2. உங்கள் மேலதிகாரி/முதலாளிக்காக
 3. உங்கள் ஓய்வு ஊதியத்திற்காக
 4. உங்கள் வேலை மூலமாக பயன் அடைகிறவர்களுக்காக
 5. நீங்கள் பெற்ற பதவி உயர்வு மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றுக்காக
 6. நீங்கள் பெற்ற பயணத்தொகை சலுகைகளுக்காக
 7. உங்களின் வாழ்நாள் சம்பாத்தியம் மற்றும் சேமிப்புக்காக
 8. தன்னார்வமாக செய்யக்கூடிய வேலை வாய்ப்புகளுக்காக
 9. பணத்தை நிர்வாகம் செய்ய தேவன் உங்களுக்கு தந்திருக்கும் ஞானத்திற்காக

XII. ஓய்வு நேரத்திற்காக பொழுதுபோக்குக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

 1. உங்களுக்கு பிடித்த புத்தகங்கள், பாடல்கள், இசைக்கருவிகளுக்காக
 2. நீங்கள் கண்டு களித்த மிருகக்காட்சிசாலை, பறவைகள் சரணாலயம், இன்னிசை நிகழ்ச்சிகளுக்காக
 3. வார இறுதி நாட்களின் விடுமுறைக்காக
 4. சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்காக
 5. உங்களுடைய செல்லப் பிராணிகளுக்காக
 6. நல்ல கட்டில், மெத்தை, படுக்கையறைகளுக்காக
 7. உங்கள் ஊரில் இருக்கும் இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்காக
 8. உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களுக்காக
 9. உங்களுக்கு தெரிந்த பயனுள்ள பொழுதுபோக்கு வேலைகள் மற்றும் விளையாட்டுக்களுக்காக
 10. உங்கள் ஓய்வு நேரத்தை உங்களுடன் மகிழ்ச்சியாக செலவிட கிடைத்த நட்புகளுக்காக

XIII. சோதனை மற்றும் பாடுகளுக்காக நன்றி கூறுங்கள்

 1. உங்கள் சோதனை நேரங்களை நீங்கள் நம்பிக்கையுடன் மேற்கொள்ள தேவன் அருளிய கிருபைக்காக
 2. உங்கள் கடினமான சூழலை உங்களுக்கு நன்மையாக மாற்றிய தேவ தயவிற்காக
 3. உங்கள் துக்கத்தில் நீங்கள் அமிழ்ந்து விடாமல் உங்களை காத்த தேவனுக்கு,
 4. உங்கள் இழப்புகள், வேதனைகள், ஏமாற்றங்களின் மத்தியிலும் தேவனை ஆராதிக்கும்படி அவர் தந்த கிருபைக்காக
 5. நீண்ட நாட்களாக நீங்கள் பெற்றுக்கொள்ள காத்திருக்கும் காரியங்களுக்காக
 6. உங்கள் வாழ்வில் வேதனைகளை அனுமதித்த கர்த்தரின் நோக்கங்களுக்காக
 7. தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கும் என்ற தேவனின் வாக்குதத்தத்திற்காக
 8. சகல பாடுகளும், சோதனைகளும், உபத்திரவங்களும் தற்காலிகமானவை; எனவே
 9. எல்லா நேரத்திலும் கர்த்தருடைய கிருபை போதுமானதாய் இருப்பதற்காக
 10. தேவன் நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிற வாசஸ்தலத்துக்காக, நம்மை அழைத்துச் செல்ல அவர் மறுபடியும் வருவார் என்ற மகிமையின் நம்பிக்கைக்காக தேவனுக்கு நன்றி கூறுங்கள்

City Revival AG Church


Share this page with friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *