மோசேயின் கோபமும் / சாந்தமும்- வித்யா’வின் விண்பார்வை!

Share this page with friends

சிங்கமாய் சீறிப்பாய்ந்தவன்
ஆட்டுக்குட்டியைப் போல
மாறியது எப்போது?

பெருந்தலைவன் மோசே,
பொன் கன்றுக்குட்டி விஷயத்தில்
தேவனுடைய மகிமை பாதிக்கப்பட்டபோது
சிங்கமாய் சீறினான்

ஆனால்,

எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயை
மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால்
மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்
பாண்ணின எத்தியோப்பியா தேசத்து
ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு
விரோதமாய் பேசி,

கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம்
பேசினாரே, எங்களைக்கொண்டும்
அவர் பேசினதில்லையோ என்றார்கள்.


கர்த்தர் அதைக் கேட்டார்

(எண்ணாகமம் 12:1,2)

தம்பியின் மனைவி மீது
ஆத்திரத்தில் ஆரோனும்
நாத்தனார் மேலே கோபம்
கொண்ட மிரியாமும்

இணைந்து
எல்லை மீறி செயல்பட்டு
பேசிய வார்த்தைகளைக்
கர்த்தர் கேட்டார்.

இவள் தம்புரு எடுத்து
நடனத்தோடு பாடியவள்தான்
Worship Leader- தான்

மிரியாம் இந்த இடத்தில்
மீறிப் பேசி
தேவன் அனுமதித்த காரியத்தை
கிளறிவிடுகிறாள்

தனது சொந்த மதிப்பு
தனது சொந்த உடன்பிறப்புகளால்
பாதிக்கப்பட்டபோது
மோசே ஆட்டுக்குட்டியைப் போல
மிகவும் சாந்தமாய் இருந்தான்.

தேவனுடைய மகிமை
பாதிக்கப்பட்ட போதோ
கொதித்தெழுந்தவன்

தனது சொந்த மதிப்பு
பாதிக்கப்பட்டபோது
சாந்தசீலனாய் அமைதி காத்தான்

ஆனால்
தேவனாகிய கர்த்தர்
தாமாகவே முன்வந்து
இந்த வழக்கை விசாரித்து
தீர்ப்பு வழங்கினார்

தீர்ப்பின் முழு விபரத்தையும்
அறிந்துகொள்ள எண்ணாகமம் 12 -ம்
அதிகாரத்திற்குள் நடந்து சென்று
அறிந்துகொள்ளுங்கள்.

தேவ மகிமை பாதிக்கப்படும்போது
கோபப்படுவது நியாயம்
சொந்த மகிமை பாதிக்கப்படும்போது
அமைதி காப்பது நல்லது.


பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
மதுரை 625 0014


Share this page with friends

Leave a Reply

Your email address will not be published.