கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி

Share this page with friends

பழைய ஏற்பாட்டு காலத்தில் மகா பரிசுத்த மானதாகவும், மகிமை நிறைந்ததாகவும், உடன்படிக்கை பெட்டி கருதப்பட்டு வந்தது. இது கர்த்தர் வாசம் பண்ணும் ஆசாரிப்பு கூடாரத்திலுள்ள முக்கியப் பொருளாகும். இதை பரிசுத்த சமூகம் என்றும் சொல்லமுடியும் இவ்வுடன்படிக்கைப் பெட்டி கர்த்தரால் ஏற்ப்படுத்தப்பட்டு தேவ சமூகமும், மகிமையும் அதில் காணப்பட்டதால் தேவ ஆசீர்வாதத்திற்குத் தகுதியுள்ளவர்களுக்கெல்லாம் பெருத்த ஆசீர்வாதத்தை அளித்து வந்தது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்துக்கொண்டருக்கிற நாம் இத்தகைய உடன்படிக்கைபெட்டி எழுத்தின்படியே இராவிடினும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுடன்படிக்கைப்பெட்டிக்கு அடையாளமாயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் உடன்படிக்கை பெட்டியினால் கரத்துருடைய ஜனங்கள் பெற்ற நன்மைகளையும் விரிவாக கவனிக்கலாம் உடன்படிக்கைப் பெட்டி எப்படிப்பட்ட உடன்படிக்கையின் பெட்டி என்பதை சிந்திக்கலாம்.

  1. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி ஆசீர்வாதத்தின் பெட்டி: கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்தோமையும் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்தோமையும் அவர் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். ( 2 சாமு : 6 : 11 )
  1. கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி வழிநடத்தும் பெட்டி: அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள். மூன்று நாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தை தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன் சென்றது ( எண் 10 : 33 )
  1. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி இளைப்பாறுதல் அளிக்கும் பெட்டி: சகல ஜனங்களுக்கும் யோர்தானைக்கடந்து தீருமளவும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவில் தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது இஸ்ரவேலெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள் ( யோசுவா 3 : 17 ) ( ஏசா 28 : 11 , 12 )
  1. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அற்புதங்களை காட்டும் பெட்டி: யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள் மட்டும் நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள். உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்பட வேண்டாம். ஆர்பரியுங்கள் என்று நான் உங்களுக்கு சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டு இருந்தான் ( யோசுவா 6 : 10 )
  1. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி கூடாரத்தில் தங்கும் பெட்டி: அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து… ( 1 நாளாக 16 : 1 )
  1. கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி நியாயந்தீர்க்கும் பெட்டி: இஸ்ரவேலர் எல்லோரும் அவர்களுடைய மூப்பரும் அதிபதிகளும் நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்த வர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி யைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக பெட்டிக்கு இருபுறத்திலும் ….( யோசு 8 : 33 : 34 )

கர்த்தருடைய உடன் படிக்கைப் பெட்டியினால் வரும் ஆசீர்வாதங்களை கவனித்தோம்.இது தேவனுடைய பரிசுத்த சமூகம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends