குடியரசு விழாவில் காந்தியை அவமானப்படுத்திய பிஜேபி அரசு

Share this page with friends

By Smnk admin Last updated Jan 24, 2022

காந்தியை அவமானப்படுத்த, அவர் விரும்பிய Abide With Me கிறிஸ்தவ மதப் பாடல் என்பதற்காகவும் குடியரசு நாளில் இசைக்கப்பட்ட இந்த பாடலை தடை செய்த மதவாத பிஜேபி அரசுக்கு சிறுபான்மை மக்கள் நல கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது

காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த Abide With Me பாடல் 1950 லிருந்து குடியரசு தின விழாவின் நிறைவு பாடலாகவும் இசைக்கப்பட்ட இப்பாடல் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது.

காந்தியை அவமானப்படுத்த, அவர் விரும்பிய கிறிஸ்தவ மதப் பாடல் என்பதற்காகவும் குடியரசு நாளில் இசைக்கப்பட்ட இந்த Abide With Me பாடலை தடை செய்த மதவாத பிஜேபி அரசுக்கு சிறுபான்மை மக்கள் நல கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது

மிழ் கிறிஸ்தவ பாமாலையில் இடம் பெறும் என்னோடிரும் என் நேச கர்த்தரே என்ற பாடலாகும். இந்த பாடல் ஆலயத்தில் இரவு வழிபாடுகளின் நிறைவு பாடலாக இன்றைக்கும் பாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாலை நேரத்தில் ஆழமடையும் இருளில் பரவிவரும் மங்கிய பொழுதில் கடவுளே என்னுடன் தங்கும் என்ற பற்றுறுதியை பறைசாற்றும் பாடல் இது.

இங்கிலாந்து திருச்சபையின் போதகர் ஹென்றி என்பவர் காசநோயால் பாதிக்கப்பட்டு தன் போதக பணியை ராஜினாமா செய்வதற்கு முன் கடைசி அருளுரை யின் போது சிறப்பு ஜெபத்தை இயேசுவிடம் ஏறெடுத்தார். தன் வாழ்கை முடிவுறும் தறுவாயில் இருப்பதால் மாலை நேரத்தில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து எம்மாவூர் சீடர்களுடன் தங்கினது போல் என்னுடன் தங்கும் இயேசுவே என்று ஜெபித்தார். அந்த ஜெபம் தான் Abide With Me

பாடலாக பின்னர் இசைக்கப்பட்டது. மாறிவரும் சூழல்கள், மங்கும் மனித உறவுகள், நிலையற்ற மனித வார்த்தைகளில் மாறாத இறைவா என்னுடன் தங்கும். நானும் உன்னில் நிலைத்திருப்பேன் என்று பாடி விசுவாசத்துடன் தன் மரணத்தை எவ்வாறு அணுகினார் என்பதை எழுதி  பாடலைத்தான் மகாத்மா காந்தி மிகவும் விரும்பி அநேக முறை கேட்டார். அவர் அநேக முறை விரும்பிக் கேட்ட இந்த பாடலைத்தான் கடந்த 50 வருட காலமாக இசைகக்ப்படுகிறது ஆனால் இந்த மதவாத பிஜேபி அரசு காந்தியின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் வண்ணமாய் செயல்பட்டு இதை தடுத்து நிறுத்தி இருக்கிறது.

இதை சிறுபான்மை மக்கள் நல கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சிறுபான்மை கிறிஸ்துவர்க்கு விரோதமாய் விரோதமாக செயல்படும் இந்த அரசு விரைவில் தூக்கி எறிய ஜெபிப்போம்

Thanks: SMNK News


Share this page with friends

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662