கர்த்தருடைய அருங்குணங்களின் ஆசீர்வாதங்கள்

ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தை துதிப்பேன்.
கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழபடத்தக்கவருமாயிருக்கிறார். அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங் : 145 : 1 – 3)
இந்தக் குறிப்பில் கர்த்தருடைய ஏழு அருங்குணங்களை குறித்து சிந்திக்கலாம். இந்த சங்கீதத்தில் கர்த்தர் என்ற வார்த்தை ஏழு முறை வருகிறது. கர்த்தரது அருங்குணங்கள் நமக்கு ஆசீர்வாதத்தை தருகிறது.
வேத பாடம் 145 சங்கீதம்.
- சிறந்தவரும் பெரிய வருமாக விளங்கும் கர்த்தர். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழபடத்தக்க வரும்மாயிருக்கிறார் அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. (சங் : 145 : 3) (ஏசாயா : 6 : 1)
- மன உருக்கமும் நிறைந்த கர்த்தர். கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். (சங் : 145 : 8) (மத் : 14 : 14)
- இரட்சகரும் நல்லவருமாக விளங்கும்கர்த்தர். கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர் அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுள்ளது. (சங் : 145 : 9) (லூக்கா : 18 : 18)
- தூக்கி நிலைநிறுத்தும் கர்த்தர் கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கி விடுகிறார் (சங் : 145 : 14)
- நீதியை நிலைநாட்டும் கர்த்தர். கர்த்தர் தமது வழிகளெல்லாம் நீதியுள்ளவரும் தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவராய் இருக்கிறார். (சங் : 145 : 17)
- சமீபமாய் இருந்து பதிலளிக்கும் கர்த்தர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார் (சங் : 145 : 18) (2 நாளாக : 34 : 27)
- நமக்கு பயந்தவர்களைக் காப்பற்றுகிற கர்த்தர். கர்த்தர் தம்மில் அன்பு கூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். (சங் : 145 : 20)
இதுவரை கர்த்தரின் அருங்குணங்களைக் குறித்து சிந்தித்தோம். இந்த சங்கீதத்தில் கர்த்தர் என்ற வார்த்தை ஏழு முறை வருவது நமக்கு அது ஆச்சிரிய மாகவும், ஆசீர்வாத மாகவும் இருக்கிறது. கர்த்தர் பெரியவரும், கிருபையுள்ளவராகவும் நல்லவராகவும், தூக்கி விடுகிறராகவும், நீதியுள்ளவராகவும் சமீபமாயிருந்து பதலளிக்கிறவராகவும் காப்பாற்றுவராகவும் விளங்கி நம்மை ஆதரிக்கிறார் ஆசீர்வதிக்கிறார்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur