சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தை

Share this page with friends

சிறு தியானம்

எபிரெயர்களுடைய ஆண் குழந்தைகளை எல்லாம் கொலை செய்திட வேண்டும் என்கிற சட்டம் “எந்தக் காலத்திலே” பிறப்பிக்கப்பட்டதோ, “அந்தக் காலத்திலேயே” எபிரெயர்களுடைய இரட்சகனாம் மோசேயை பிறந்திடச் செய்தார் நமது தேவன். (அப் 7:19,20)

“எந்த பார்வோனின் அரண்மனையிலிருந்து” எபிரெயர்களுடைய ஆண் குழந்தைகளை எல்லாம் கொன்றிட வேண்டும் என்ற சட்டம் பிறந்ததோ, “அந்த பார்வோனின் அரண்மனைக்குள்ளேயே” மோசேயை வைத்து வளர்த்தார் நமது தேவன். (அப் 7:21)

எகிப்தியரின் அதிகார ஆதிக்கத்தினால் “தண்ணீரிலே” போடப்பட்டான் மோசே. ஆனால் தமது அதிகாரம் நிறைந்த வல்லமையால் இந்த மோசேயைக் கொண்டே, அந்த எகிப்தியரை “தண்ணீரிலே” மூழ்கடித்தார் நமது தேவன்.
(அப் 7:21, சங் 136:15)

பற்றியெரிந்திடும் முட்செடியின் “அற்புதக் காட்சியை” கண்டிட முட்செடியின் அருகே கிட்டிச் சென்ற இந்த மோசேயை, தனக்காக பற்றியெரியும் “அற்புத சாட்சியாக” மாற்றினார் நமது தேவன். (யாத் 3:3, அப் 7:36)

எகிப்தை விட்டு “கலங்கிப்போனவனாக” ஓடிப்போன இந்த மோசேயைக் கொண்டே, எகிப்தைக் “கலங்கடித்தார்” நமது தேவன். (அப் 7:29,34,36)

உன்னை எங்களுக்கு அதிகாரியாக வைத்தவன் யார் என்று இஸ்ரவேலர் “மறுதலித்திருந்த” இந்த மோசேயையே, இஸ்ரவேலருக்கு “மீட்பனாக” அனுப்பினார் நமது தேவன். (அப் 7:27,35)

தேவனாலே எல்லாம் கூடும் (மத் 19:26)

RRG.


Share this page with friends