Behind a Church

துதி, ஸ்தோத்திரம் என்பதற்கு மிக தெளிவான விளக்கம்

Share this page with friends

Behind a Church
  1. துதி என்றால் என்ன?
  2. ஸ்தோத்திரம் என்றால் என்ன?
  3. அல்லேலூயா என்றால் என்ன?
  4. துதி என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது.

ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் நன்றி என்று பொருள்.அல்லேலூயா என்ற என்ற எபிரேய வார்த்தைக்கு தமிழில் தேவ நாமம் மகிமைப்படுவதாக என்று அர்த்தம்

விரிவாக:

1.துதி என்றால் என்ன?

துதி என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது. தமிழ் வேதாகமத்தில் : துதி/துதியுங்கள்/துதிப்பேன்/துதித்து போன்றவை மொத்தம் 252 முறை வருகிறது. ஆனால் – அவை மூல பாஷையில் வரும் போது வேறு சில வார்த்தைகளை கொண்டு கொஞ்சம் ஆழமாக உணர்த்தப்பட்டுள்ளது. துதி என்று தமிழ் வேதாகமத்தில் வரும் இடங்களில் ஆங்கிலத்தில் Glory (க்ளோரி) ; Praising (ப்ரைசிங்) ; Bless (ப்ளஸ்) ; Pray (ப்ரே) என்றும் Thanks (த்தேங்ஸ்) என்றும் அர்த்த வித்தியாசங்களுடன் காணப்படுகிறது. உதாரணத்திற்கு:

1-ஆதி 29:35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்று போயிற்று. இந்த வசனம் ஆங்கிலத்தில் Praise அல்லது Thanks என்றும் எபிரேயத்தில் யாதாவ் என்றும் இருக்கிறது. யாதாவ் என்றால் – கரங்களை நேராக ஈட்டியைப்போல நீட்டி பயத்தோடு பக்தியோடு நன்றி அல்லது துதியை சொல்வது.

2– யாத் 15:11 கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? இந்த வசனம் ஆங்கிலத்தில் Glory என்றும் எபிரேயத்தில் தெஹில்லாஹ் என்றும் இருக்கிறது. தெஹில்லாஹ் என்றால் – சப்தமான பாடல்களாக மகத்துவங்களை எடுத்துரைப்பது.

3– லேவி 19:24 பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும். இந்த வசனம் ஆங்கிலத்தில் Praise என்று வந்தாலும் எபிரேயத்தில் ஹில்லூல் என்றும் இருக்கிறது. ஹில்லூல் என்றால் – விளைச்சலை கொடுத்த தேவனுக்கு நன்றி என்று எடுத்துரைப்பது.

4. 1சாமு 2:10 கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள். இந்த வசனம் ஆங்கிலத்தில் Prayed (1Sam2:1) என்று வந்தாலும் எபிரேயத்தில் பாவ்லால் என்றும் இருக்கிறது. பாவ்லால் என்றால் – நீதிக்காய் முறையிட்டு பெற்றுக்கொண்டவற்றிற்கான விண்ணப்பம் அல்லது துதி அல்லது முறையீடு என்று பொருள்.

5.2சாமு 22:50 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். இந்த வசனம் ஆங்கிலத்தில் Prayed (1Sam2:1) என்று வந்தாலும் எபிரேயத்தில் பாவ்லால் என்றும் இருக்கிறது. பாவ்லால் என்றால் – நீதிக்காய் முறையிட்டு பெற்றுக்கொண்டவற்றிற்கான விண்ணப்பம் அல்லது துதி அல்லது முறையீடு என்று பொருள்.

2.ஸ்தோத்திரம் என்றால் என்ன?

ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் நன்றி என்று பொருள். இந்த ஸ்தோத்திரம் என்ற வார்த்தை தமிழ் வேதாகமத்தில் 106 முறை காணமுடியும். ஆங்கிலத்தில் blessed (பிளஸட்) / Praise (ப்ரைஸ்) எபிரேயத்தில் பாராக் என்றும் இருக்கிறது. பாராக் என்றால் முழங்கால்படியிட்டு நன்மை செய்த தேவனுக்கு நன்றி சொல்லுதல்!!

உதாரணம் :

1. ஆதி 24:27 என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; And he said, Blessed be the LORD God of my master Abraham;

2. 1நாளா 16:34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. O give praise to the Lord, for he is good: for his mercy is unchanging for ever.

3.அல்லேலூயா என்றால் என்ன?
அல்லேலூயா என்ற என்ற எபிரேய வார்த்தைக்கு தமிழில் தேவ நாமம் மகிமைப்படுவதாக என்று அர்த்தம் மிக ஆச்சரியமாக இந்த வார்த்தை முதன் முதலில் சங்கீதம் 104:35ல் காண்கிறோம். நான் அறிந்து இந்த வார்த்தை தமிழ் வேதாகமத்தில் 17 முறை தான் வருகிறது !! சங் 104:35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா. இந்த வார்த்தையை தமிழ்லில் இருப்பது போல அப்படியே விட்டுவிடாமல் மொழிபெயர்த்து Praise to the Lord என்று வருகிறது. சில நவீன மொழி பெயர்ப்புகளில் அல்லேலூயா என்றே உபயோகித்திருக்கிறார்கள். Let sinners be cut off from the earth, and let all evil-doers come to an end. Give praise to the Lord, O my soul. Give praise to the Lord. அர்த்தங்களை புரிந்தவர்கள் இனியாவது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று அர்த்தம் புரியாமல் வெறுமனே ஏலம் விடாதபடிக்கு தேவன் செய்த மகத்துவங்களை சொல்லி சொல்லி அல்லேலூயா என்றும் ஸ்தோத்திரம் என்றும் சொல்லி அவரை துதிக்கும் போது அர்த்தமுள்ளதாக தேவனை மகிமைபடுத்துவதில் இருக்கும்.

Eddy Joel Silsbee


Share this page with friends