வேதாகமத்தில் ஆயுசு நாட்கள் பூமியில் வாழ்ந்த மனிதர்கள் உயிரோடிருந்த வருடங்கள்

Share this page with friends

வேதாகமத்தில் ஆயுசு நாட்கள்
பூமியில் வாழ்ந்த மனிதர்கள் உயிரோடிருந்த வருடங்கள்:

ஆதாம்                     930
சேத்                           912
ஏனோஸ்                 905
கேனான்                    910
மகலாலெயேல்         895
யாரேத்                          962
ஏனோக்கு                 365
ஏனோக்கு – எலியா  தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனார்கள்.       தேவன் அவர்ளை எடுத்துக் கொண்டார்.
மெத்தூசலா                 969
லாமேக்கு                     777
நோவா                         950
சேம்                             500
அர்பக்சாத்                 403
சாலா                           403
ஏபேர்                           430
பேலேகு                       280
ரெகூ                             207
செரூகு                         200
நாகோர்                         119
தேராகு                           205 
ஆபிரகாம்                     175
ஈசாக்கு                         180
சாராள்                           127
இஸ்மவேல்                 137
யோசேப்பு                     110
யாக்கோபு                     147 
மோசே                           120
யோசுவா                       110
மெத்துசாலா ஒருவர் மட்டுமே 969 வருசங்கள் வாழ்ந்தவர். அது அப்படியே குறைந்து கடைசியாக யோசுவா 110 வருசங்கள் வாழ்ந்தார். இன்றைய காலகட்டத்தில் 60, 70, 80,  வயதில் இறந்துவிடுகிறார்கள். இந்த வாழ்க்கை மாயை என்று வேதம் சொல்லுகிறது.  இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது. நம்முடைய நித்ய வாழ்க்கையோ பரலோகத்தில். நம்முடைய பாஸ்போர்ட் பரலோகமே. 

ஆக இந்த வாழ்க்கை எதற்க்கு? பூமியிலே நீதியாக பரிசுத்தமாக வாழ்ந்து பூமியிலே சொத்துக்களை சேர்க்காமல் பரலோகத்திலே சொத்துக்கள் சேர்ப்பது. சாலமோன் தன் பிந்நாட்களில் பூமியிலே இன்பமாக தன் வாழ்வை கழித்தான். புசிப்பும் குடிப்புமாக இருந்தான். அவனுக்கு முன் காலத்தில் யாரும் முன்னோடி இல்லை. வழிதப்பி நடந்தனர். ஆனால் நமக்கு சாலமோன்,  மோசே போன்ற முன்னோடிகள் இருக்கிறார்கள். அதனால் ப. ஏ ஒரு உதாரணமாக இருக்கிறது என்று புவுல் சொல்லுகிறார். இந்த மாயையான வாழ்வை நாம் பரலோக பாதையாக வைத்துக்கொள்வோம். பாதைகளில் குழிகள் இருக்குமென்பதை முன்னோடிகள் உணர்த்தியதால் ஜாக்கிரதையாக கடக்க முடியும். அது இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் வீட்டிற்க்கு வரும். இந்த இரட்சிப்பை நாம் அறிவிக்கும் கடமை நம்மேல் விழுந்திருக்கிறது. சுவிஷேசத்தை அறிவிப்போம்.
நம் வாழ்க்கையின் ஆயுசு நாட்களுக்கு வேதம் என்ன சொல்லுகிறது? 
உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.       (யாத்திராகமம் 20: 12)

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. (எபேசியர் 6: 2)
இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர், என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது, எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்.
( நம் ஆயுசு நாட்கள் தேவனுக்கு மிக மிக குறைந்த அளவு. நாலு விரல் கட்டை அளவு. சொல்லப்போனால் ஒன்றுமேயில்லை.) (Is as nothing – That is, it is so short that it seems to be nothing at all.)
(சங்கீதம் 39 :5)

எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே , அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.           (சங்கீதம் 90 :10 

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்: துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். (நீதிமொழிகள் 10 :27)

அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும். தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான். (யோபு 33 :25)

நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது. (சங்கீதம் 103 :5)

வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது. 
தாயைப் போகவிட்டு, குஞ்சுகளைமாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.  (உபாகமம் 22 : 6-7)


Share this page with friends