சீலையை மட்டும் பார்த்த சீஷர்கள் வித்யா’வின் பதிவு

யாருக்காக கல்லறைக்கு வந்தார்கள்?
மரியாளுக்காகத்தான்
கல்லறைக்கு வந்தார்கள்
(யோவான் 20: 1-14)
அவர்கள் தாங்களாகவே
வரவில்லை.
அவர்களுக்குத் தனியாக
இயேசுவைப் பார்க்கவேண்டும் என்ற
நோக்கம் இல்லை.
அதனால்தான் அவர்கள்
வந்தபோது சீலையை மட்டும்
பார்த்தார்கள்
பைபிள் படித்தவர்களுக்கு
மட்டும்தான் புரியும்.
அவர்கள் இருவரும்
வந்து கல்லறைக்குள்
எட்டிப் பார்த்தபோது
சீலையைக் கண்டார்கள்
அவர்களால் வேறு எதையும்
பார்க்கமுடியவில்லை.
ஏனென்றால் அவர்கள் வந்தது
மனிதனைத்
திருப்திப்படுத்துவதற்காகத்தான்
வந்தார்கள்.
சபைக்கு வரும்போது நான்
இயேசுவைப் பார்க்கவேண்டும்
என்று வந்தால்,
நீங்கள் அவருடைய
மகிமையைப் பார்ப்பீர்கள்.
‘’நான் அவரைப் பார்க்கவேண்டும்
நான் அவரிடத்திலிருந்து
பெற்றுக்கொள்ள சபைக்கு
வருகிறேன்’’ என்று சொல்லுவதை
ஆண்டவர் விரும்புகிறார்.
இன்றைக்கு நிறையபேர்
யாரையோ பார்க்க வருகிறார்கள்
யாரோ ஒருவர் வந்தால் இவர்கள்
வருவார்கள்
ஆண்டவர் சொல்லுகிறார்
பேதுருவே, யோவானே
நீங்கள் மரியாளுக்காக வந்து
எட்டிப்பார்த்ததினாலே
சீலையை மட்டும் பார்க்கமுடிந்தது
ஆனால்
இயேசுவுக்காக வந்தவள்
தூதர்களையும் பார்த்தாள்
இயேசுவையும் பார்த்தாள்…..
நம்மைவிட மிகவும் பின்னால்
வந்தவள் போய்விட்டாளே
நாம் சீனியர்
நாம் போகவில்லையென்றால்
கேவலமாகிவிடுமே
என்றுதான் போனார்கள்.
அதனால் தான் அவர்களால்
சீலையை மட்டும் பார்க்க முடிந்தது.
(இந்தச் செய்தி
எதை சம்பாதிக்கிறாய்
எதைப் பெற்றுக்கொள்கிறாய் என்ற
புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.)
(87 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை
வாசிக்க விரும்பினால் எனக்கு
எழுதுங்கள் அல்லது அலைபேசியில்
அழையுங்கள் 91-77080 73718)
புத்தகத்தின் ஆசிரியர்:

சகோ. ஞானேஷ் M.E.,
தீர்க்கதரிசன சுவிசேஷகர்
(நாகர்கோயில்)
புத்தகத் தொகுப்பு:
பாஸ்டர் இஸ்ரேல் வித்ய பிரகாஷ்B.Com.,
Director, Literture Dept. tcnmedia.in
Radio Speaker, Aaruthal fm (Daily)