நம் மேல் விழுந்த கடமை

Share this page with friends

ஜான் பனியன் – நம் மேல் விழுந்த கடமை சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. – (1கொரிந்தியர் 9:16)..மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனை எழுதியவர் ஜான் பனியன் என்பவர் ஆவார். வேத புத்தகத்திறகு அடுத்தபடியாக 130க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் இதுவே ஆகும். அவர் அப்புத்தகத்தை எப்படி எங்கு எவ்வாறு எழுதினார் என்ற தகவலை அறிந்தோமானால், ஆச்சரியமாக இருக்கும். அவரது வாழ்க்கை குறிப்புகள் நம் கிறிஸ்தவ வாழ்விற்கும் அதிக பிரயோஜனமாயிருககும்..இங்கிலாந்தில் கிறிஸ்தவரல்லாத குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயதிலிருந்தே தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களை பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையால் பள்ளிப்படிப்பை கூட பாதியிலேயே விட வேண்டியதாயிற்று. இளம் பிரயாத்தில் தீய மனிதனாக வாழ்ந்தார். நிம்மதியற்ற பனியன் 16 வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். ஒரு முறை அரசின் ஆணைப்படி போருக்கு செல்ல உத்தரவிடப்பட்டார்; ஆனால் கடைசி நேரத்தில் இவருக்கு பதிலாக வேறொருவர் அனுப்பப்பட்டார். அந்த நபர் போரின் முதல நாளிலேயே போரில் மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி இவரை சித்திக்க வைத்தது. மயிரிழையில் தன் உயிர் தப்பினது ஏனோ? என்று யோசித்து நல்லவனாக வாழ விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் வீடும் திரும்பினார்..19 வயதில் ஒரு கிறிஸ்தவ பெண்ணை மணமுடித்தார். மனைவி அடிக்கடி கிறிஸ்துவை பற்றி கூறியும் அவர் ஆண்டவரை ஏற்க மனமற்றவராகவே இருந்தார். இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரம் ரிப்பேர் செய்யும் மூன்று பெண்கள் இயேசுவை பற்றி கூறி கொண்டிருப்பதை கேட்டு தன்னை முற்றிலும் கிறிஸ்துவுக்கு ஒப்பு கொடுத்தார். ஆண்டவரை ஏற்று கொண்ட கொஞ்ச நாட்களிலேயே அவரது மனைவி இறந்து போனார். தனது வாழ்வை முற்றிலும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவருக்காக தன்னால் இயன்றதை செய்ய முன் வந்தார். பாத்திரங்களை ரிப்பேர் பார்க்கும் வீடுகளில் தனது தொழிலை செய்து கொண்டே இயேசுவைப் பற்றி அறிவிக்க ஆரம்பித்தார்..

அக்காலத்தில் இங்கிலாந்தில் போதகர் தவிர யாரும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் வேதத்திலுள்ள ‘நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்’ என்ற வசனத்திற்கு கீழ்ப்படிவதே உத்தமம் என உணர்ந்து, சுவிசேஷத்தை தைரியமாய் பிரசங்கித்தார். ஆகவே சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். ‘இனி சுவிசேஷம் அறிவிக்கமாட்டேன் என கூறினால் விடுதலை’ என்றார் நீதிபதி. அப்படி உறுதியளிக்க பனியன் முன்வரவில்லை. உடனே நீதிபதி மூன்று மாதம் சிறை தண்டனை என அறிவித்தார். பனியனோ, மறு நிமிடமே ‘இன்று நான் விடுவிக்கப்படாமல் தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன்’ என்றார். அதனால் மூன்று மாத சிறை தண்டனை பன்னிரண்டு வருடங்களாக நீடித்தது..அதிக அழுக்கு நிறைந்த சிறிய அறையில் 50 பேருடன் தங்க வேண்யதாயிருந்தது. மங்கலான் வெளிச்சம், துஷ்டர்கள், சுகாதாரமற்ற நிலை இந்த நிலையில் தான் மோடச பிரயாணம் புத்தகத்தை எழுதினார். சற்று யோசித்து பாருங்கள், சிறிய அறைக்குள், 50 பேரின் பேச்சு, சத்தம் தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்லி அடிக்க வரும் துஷ்டர்கள் மத்தியில் ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் பிறப்பிலே கிறிஸ்தவரல்ல, படித்தவரல்ல, அவருக்கு தெரிந்தது ஓட்டை விழுந்த பாத்திரத்தை ஈயம் கொண்டு அடைப்பது மட்டுமே. *தேவன் இவரது சாமர்த்தியத்தை பார்க்கவில்லை, அர்ப்பணத்தை பார்த்தார்.* நாற்மெடுக்கும் அறையில் உலகிற்கே மண்ம் வீசும் மோட்ச பிரயாணத்தை எழுதினார்..தேவன் உங்களுக்கு கொடுத்து சிறிய பொறுப்பை நிறைவேற்ற இன்று உங்களுக்கு எத்தனை சௌகரியங்கள் உண்டு? அத்தனை பாடுகள் அசௌகரியங்கள் மத்தியிலும் உலகமே போற்றத்தக்கதான ஒரு புத்தகத்தை, ஒரு ஜான் பனியனால் எழுத முடியும் என்றால், உங்களால் எத்தனை காரியங்களை தேவனுக்காக செய்ய முடியும்! உங்கள் இருதயத்தில் கர்த்தருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற வாஞ்சை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தால், எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அவருக்காக எதையும் செய்ய முடியும் என்பதற்கு அவரே சான்றாக இருக்கிறார். நம்மால் இயன்றதை கர்த்தருடைய நாம மகிமைக்காக செய்வோமா? சுவிசேஷத்தை பிரசங்கிப்பது நம்மேல் விழுந்த கடமை என்று பவுல் அப்போஸ்தலன் சொல்கிறாரே, அதை நம் கடமையாக எடுத்து ஏதாவது ஒரு வகையில் நாம் கர்த்தருக்காக காரியங்களை செய்வோமா?

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று சொன்னவர் சீக்கிரம் வருகிறார். அவர் வருகைக்குள் நம்மால் இயன்றதை செய்து, அவருடைய கரத்தினால் நல்ல பலனை பெறுவோமா?

ஆமென் அல்லேலூயா!.

இருள் சூழும் காலம் இனி வருதேஅருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்திறவுண்ட வாசல் அடைபடுமுன்நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?.

திறவுண்ட வாசல் அடைபடுமுன்நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?நாட்கள் கொடியதாய் மாறிடுதேகாலத்தை ஆதாயம் செய்திடுவோம்

மக்கள் அதிகம் வாசித்தவை:

சாதாரண மனிதர்களின் பாராட்டை எதிர்பார்த்து சோர்ந்து போகாதே
Beware - Christian Quotes
ஆணும் பெண்ணும் சமம் தானா? ஒரு உளவியல் பார்வை
பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கைதா..? சட்டம் தன் கடமையை செய்யுமா..??
விசில் அடித்தால் சபை வளரும்! டான்ஸ் ஆடினால் பணம் வரும்! நூதன உபதேசத்திற்கு எச்சரிக்கையாயிருங்கள்
நம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.
இயேசுவின் அறிவியல் பூர்வமான மரணம் ! 60 விநாடிகள் ஒதுக்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்
கிறிஸ்துமஸ் பல்சுவை துணுக்குகள்
பாவம் என்றால் என்ன ?
இந்த கரங்கள் எனக்குரியதும் அல்ல!என்னுடையதும் அல்ல!எனக்கு சொந்தமானதும் அல்ல!யாருக்குறியதுதெரியமா?

Share this page with friends