தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

Share this page with friends

Most people think domestic violence involves an adult abusing an intimate partner or a child, but children can also threaten, bully and attack family members. Some abused parents are speaking out.

தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும்

வேதத்தில் உள்ள ஒவ்வொரு பரிசுத்தவான்களும் தேவனால் சாட்சிப் பெற்றவர்களாக இருந்தாலும் தங்கள் வாழ்வின் பெலவீனங்களால் தேவனுடைய கடிந்து கொள்ளுதலையும் தண்டனையையும் பெற்று இருக்கிறார்கள். வேதத்தில் தேவன் ஒருவரை விசேஷமாக தெரிந்து கொண்டு இருந்தாலும், அவர்களிடம் விசேஷமான பரிசுத்தம், நீதி, விசுவாசம், உண்மை, கீழ்படிதல், தாழ்மை மற்றும் உத்தமம் போன்ற குணநலன்கள் இருந்தாலும், அவர்கள் இடறிப் போன காரியங்களையும் தெள்ளத் தெளிவாக எழுதி இருப்பதை பார்க்கும் போது இதை எழுதியவர் பரிசுத்த ஆவியானவர் என்பது புலனாகிறது. ஏனெனில் கர்த்தரிடம் படசபாதம் இல்லை.

இப்படிபட்ட காரியங்களை நாம் வாசிக்கும் போது நாமும் எத்தனை அபிசேகம், பரிசுத்தம், நீதி, உண்மை, உத்தமம் என்று கத்தினாலும் நாம் இந்த பெலவீன சரீரத்தில் இருப்பதால் அவர் கிருபையால் தான் நிலைநிற்க முடியும் என்கிற சத்தியத்தை புரிந்து வெகு மனத்தாழ்மையோடு வாழ உணர்வு கிடைக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆபிரகாம் விசுவாசத்தின் வீரனாக இருந்தும் ஆகாரின் விசயத்தில் உத்தமத்தை காத்துக் கொள்ளாததினால் கிட்டத்தட்ட 13 வருடம் தேவ உறவில் விரிசல் ஏற்பட்டதும், மோசே தேவனோடு முக முகமாக பேசும் அனுபவம் பெற்று சாந்தம் குணமுடையவன் என்கிற சாட்சி பெற்று இருந்தும் தனது கோப சுபாவத்தால் கானான் போக முடியாததும், யோசுவா கானனை சுதந்தரிந்து பங்கிட்டு கொடுத்தும் நானும் என் குடும்பமும் என்கிற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து தனது குடும்பத்தால் கூட அடுத்த தலைமுறையை வழிநடத்த முடியாததும், தான் தேவனுக்கு பயந்து நடந்தாலும், உண்மை உள்ளவன் என்றாலும், தன் நீதி தன் உத்தமத்தில் மேன்மை பாராட்டி அதினால் யோபு பெற்ற சோதனையும், நோவா தான் தேவ கண்களின் கிருபையை பெற்று இருந்தும் மதுபானத்தினால் தன் நிர்வாணம் வெளிப்பட வாழ்ந்ததும் சில உதாரணங்களே…இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கலாம். அவ்வாறு தாவீதின் வாழ்வும் விதி விலக்கு அல்லவே! தொடர்ந்து அதன் தாக்கங்களை குறித்து கவனிப்போம்.

A. தாவீதின் விழுகை தனது தனிப்பட்ட வாழ்வை பாதித்தது

தான் உணர்த்தப் பட்ட போது தன்னை அருவருப்பாக பார்க்கின்றார். தேவ சமூகத்தை இழந்து விட்டதாக உணருகின்றார். உற்சாகம் இழந்ததாக கதருகிறார். சந்தோசமற்ற வாழ்வை உணருகிறார். தன் உணர்வு, இருதயம் கெட்டுப் போய் விட்டதாக உணருகிரார். தான் கழுவப் பட வேண்டும் என்று மனஸ்தாபம் கொள்ளுகிரார். குற்ற உணர்ச்சி, வெட்கம், அருக்களிப்பு என்று தன்னை ஒடுக்குகிறார். உடனடி தண்டனையாக பிள்ளை இறந்து போனது. சவுல் தேவ ஆவியை இழந்த போது அடைந்த கலக்கம் தாவீதின் மனதில் வந்து போய் இருக்கலாம்.

B. தனது குடும்பத்தில் வந்த தாக்கம்.

தனது பிள்ளைகளை கட்டுப் படுத்த முடிய வில்லை. இஸ்ரவேலில் நடக்கக்கூடாத காரியம் அம்மோன் தாமார் விடயத்தில் நடந்தது. அந்த விடயத்தில் அப்சலோம் தன் சகோதரனை பகைக்கிறான். பின்னர் பழிவாங்கி கொலையும் செய்கின்றான். அதே பாவம் பிற்காலத்தில் சலோமனையும் விட்டு வைக்க வில்லை. ஏற்கனவே வேசியாக இருந்த தாமாரிடத்தில் யூதா செய்த பாவத்தோடு தாவீதின் குடும்பத்தாரின் பாவமும் இந்த கோத்திரத்தில் ஜென்ம பூர்வீக பாவமாக தொடர்ந்தது. பின்னர் அதோனியா சுனேமத்தியாளுக்காக சாலமோனிடம் demand செய்ததும் வசனத்தில் உள்ளது. பாவம் வாசற்படியில் மட்டுமல்ல குடும்பத்திலும் பின் தொடருகிறது. அது பின்னர் அதே கோத்திரத்தில் பிறந்த கிறிஸ்துவின் சிலுவையில் அவரது இரத்தத்தால் வெற்றிக் கொள்ளப் படுகிறது..

C. தனது professional க்கு எதிராக வந்த தாக்கம்

தாவீது யுத்த வீரன். அந்த யுத்தத்தில் பின்னர் யோவாப் வெற்றிக் கொள்கிறான். அந்த யோவாபும் அவன் சகோதரர்களும் தாவீதின் யுத்த காரியங்களில் சில இடங்களில் மிஞ்சி போனார்கள். தாவீதுக்கு நன்மை செய்வது போல தீமை செய்கின்றார்கள். தாவீதோடு சமரசம் செய்து அப்னேரை இரத்தம் வடியத்தக்க கொன்று போட்டான் இந்த யோவாப். பிள்ளையாண்டானை கடினமாக நடத்தக் கூடாது என்று கட்டளை பெற்றும் அப்சலோமை யோவாப் கொன்று போடுறான். அதே அப்சலோமை அரண்மனைக்குள் கொண்டு வந்ததும் இதே யோவாப் தான். தனது யுத்த காரியங்களில் தேவையில்லாத தலையீடு மிஞ்சி போகிற அனுபவங்களை தாவீது சந்திகின்றான்.

D. கடைசியாக தன் ஆளுகைக்கு விரோதமாக ஏற்பட்ட தாக்கம்

தன் சொந்த மகனின் கிளர்ச்சியை கூட தாவீதால் பின்னாட்களில் சமாளிக்க முடிய வில்லை. எல்லாரும் மலைக்கு ஓடி போகிறார்கள். வெறும்காலால் நடக்கிறார்கள். அழுதுக் கொண்டே முகத்தை மூடிக் கொண்டே நடக்கிறார்கள். சிமேயி தூசிக்கின்றான். அகித்தோப்பியல் எதிராக ஆலோசனை சொல்கிறான். ஆனாலும் கித்தியனாகிய ஈத்தாய், வயது சென்ற பர்சிலா போன்றவர்களின் ஆறுதல், அற்கியனாகிய ஊசாயை கொண்டு கர்த்தர் அகித்தோப்பியலின் ஆலோசனையை அவமாக்கி திரும்ப எருசலேமுக்கு கொண்டு வருகிறார். இவைகள் எல்லாம் தாவீதின் விழுகைக்கு பின்னர் நடப்பவைகளே.

ஆனாலும் கர்த்தர் கிருபை உள்ளவர். தாவீது மனகசந்து அழுத போது இரக்கம் பாராட்டி என்றென்றும் தாவீதின் சந்ததியை விட்டு கிருபையை எடுக்கமாட்டேன் என்று உடன்படிக்கை செய்து அவன் சந்ததி கர்த்தரை விட்டு தூரம் போனால் மிலாற்றினால் திரும்ப கொண்டு வருவேன் என்று வாக்குக் கொடுக்கிறார். ஆம் நமது ஆண்டவர் இரக்கமுள்ளவர். நாம் செய்த தவறுக்கு வருந்தி, திரும்ப அந்த தவறை செய்யாமல் அதை விட்டு விட்டால் ஆயிரம் தலைமுறைக்கு இரக்கம் பாராட்டுகிற தேவன் என்பதில் சந்தேகமில்லை.

இவைகள் நம்மை எச்சரித்து பரிசுத்த வாழ்வின் நிறைவான கிறிஸ்துவில் வாழ்ந்து கிறிஸ்துவின் சாயலில் பூரணம் அடைய அவரின் கிருபையின் வழியில் வளர நம்மை வழி நடத்துகிறது. ஏனெனில் கிறிஸ்துவே பூரணர், அவரில் பழுது ஒன்றும் இல்லை. அவரது இரத்தம் இன்னும் நம்மை பூரணப் படுத்துகிறது.

அப்படியென்றால் மேற்கூறப்பட்ட பரிசுத்தவான்களின் விழுகைகளை நாம் சமரச போக்காக எடுத்துக் கொள்ள கூடுமோ? வாக்குத்தத்தம் பெற்ற அவர்கள் கிறிஸ்துவை காணும் வாஞ்சையில் தங்கள் நீதி நிறைவேற தங்கள் பெலவீனத்தில் பாடுபட்டு தேவ நீதியை நிறைவேற்றினார்கள் எனில், வாக்குதத்தமாகிய கிறிஸ்துவை பெற்ற நாம் எத்தனை அதிகமான நீதியை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் போது இவற்றை திருஸ்டாந்தமாக பெற்ற நாம் எத்தனை பயபக்தியோடு தாழ்மையான வாழ்வை வாழ வேண்டும் என்பதை அறிந்துக் கொள்கிறோம் என்பது தான் சத்தியம். கர்த்தர் கிருபை என்றும் நம்மை சூழ்ந்து கொள்வதாக!

செலின்

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends