சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும் : வேதாகம பிரசங்க குறிப்புகள்

சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும்
சவுல் இஸ்ரவேலின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்ரவேலின் ராஜா. தாவீது கர்த்தரின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப் பட்ட ராஜா. சவுலின் ஆரம்பம் நன்றாக தான் இருந்தது. பென்யமீன் கோத்திரத்தில் மிகவும் சிறியவன் என்கிற மன்பான்மை கொண்டவன். அதுவே பிற்பாடு inferiority complex ஆகவும் மாறினது. தன்னை அற்பமாக பேலியாளின் மக்கள் பார்த்தப் போதும் அவர்கள் வார்த்தைக்கு செவிக்கொடுக்காமல் செயலில் காட்டினவன். ஆனாலும் வீழ்ந்துப் போனான். ஏன்? தொடர்ந்து கவனிப்போம்
A. சவுலின் பொறுமையின்மை (1. சாமு 13 மற்றும் 14 ஆம் அதிகாரம்) அவசரப்புத்தி
பெலிஸ்தியர்கள் தனக்கு விரோதமாக தனது ஆட்சியின் இரண்டாவது வருடத்தில் முப்பதாயிரம் வீரர்களோடு எதிர்த்து வருகையில் அவன் கையில் 1000 மற்றும் அவன் மகன் யோனத்தான் கையில் ஆயிரம் வீர்களை ஆங்காங்கு அதாவது காத் மற்றும் கிலேயாத்தில் நிறுத்தி விட்டு இவன் கில்காலில் சாமுவேல் வர காத்து இருந்தான். சாமுவேல் வர தாமதம் ஆகிறது. ஜனங்கள் பயந்துக் கொண்டு இருந்தார்கள். சிலர் சிதறிப் போனார்கள். இவனோ துணிந்து ஜனங்களை தக்க வைக்க அவசரப் பட்டு சாமுவேல் செய்ய வேண்டிய பலிகளை, விண்ணப்பங்களை அவன் நிறைவேற்றினான்.
👉🏿சாமுவேல் வரக் காத்து இருக்க வேண்டியவன்.
👉🏿தான் ராஜாவாக இருக்க ஆசாரிய பணியை துணிந்து செய்தான்.
👉🏿அவசரப்பட்டு கர்த்தரின் ஆசாரியத்துவத்தில் கையை வைத்தான்.
👉🏿ஜனங்கள் பெயரை சொல்லி தான் தப்ப பார்த்தான்.
அது மதியீனமாக மாறியது. அவசரப்பட வைத்தது. நிதானத்தை இழக்க செய்தது. புத்தியீனன் என்கிற பெயரைக் கொடுத்தது. யார் எந்த சூழலில் இருந்தாலும், ஜனமே நம்மை விட்டுப் போனாலும் தேவ விதிமுறைகளை மீறக் கூடாது அப்படி விதிமீறல் செய்வதே புத்தியீனம். ஆனால் அவன் சுதாரிக்கவில்லை ஜனங்களை சாக்காகக் கருதி தப்பப் பார்த்தான். பின்னர் கர்த்தர் யோனத்தான் அவன் ஆயுத தாரிக் கொண்டு வெற்றிக் கொடுக்கிறார். அந்த வெற்றிக் கிடைக்கும் வரை யாரும் சாப்பிடக் கூடாது என்று தவறான அவசரப்புத்தியின் தீர்மானம் மக்கள் முன்பாக ஆனால் யோனத்தானுக்கு தெரியாமல் எடுக்கின்றான். முடிவில் இது தெரியாத யோனத்தான் தேன் சாப்பிட அவன் ஜனங்களால் காப்பாற்றப் படுகிறான்.
B. பிரமாணம் மீறி கீழ்ப்படியாமல் போகின்றான்
(I சாமு 15 ஆம் அதிகாரம்)
அமலேக்கியர்கள் கர்த்தருக்கு பயப்படாமல் ரேவிதீமில் இஸ்ரவேலருக்கு எதிராக யுத்தம் செய்ததால் அவர்களை அழ்த்துப் போட வேண்டும் என்பது பிரமாணம். அதை நிறைவேற்றும் வாய்ப்பை கர்த்தர் சவுலின் கையில் கொடுத்தார். அப்படியே யுத்தம் செய்து அதன் ராஜாவாகிய ஆகாகை உயிரோடு பிடித்து, பலிகளுக்கு என்று முதல் தரம் இரண்டாம் தரம் என்று விசேசமானவைகளை எடுத்துக் கொண்டு அற்பமானவைகளை அழித்துப் போட்டான். இது சாமுவேலை விசனப்படித்தி பலியை விட கீழ்படிதல் தான் முக்கியம் என்று சவுலை கடிந்துக் கொண்டார். பிரமாணத்தை மீறுதல் தான் பாவம். அது தான் கீழ்ப்படியாமை.
C. தனக்கென்று ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டினான். சுயத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்தான் (I சாமு 15: 12- 35)
தான் செய்த பாவத்திற்க்கு ஏற்ற மனஸ்தாபம் வரவில்லை. ஒப்பனைக்கு சாமுவேலிடம் தான் பாவம் செய்ததாக கூறினாலும் ஜனங்கள் மத்தியில் முப்பர்கள் மத்தியில் வந்து என்னை கனம் பண்ணும் என்று சொல்வதில் குறியாக இருந்தான். அப்படியே சாமுவேலை வற்புறுத்தவே அவன் வஸ்திரம் இரண்டாக கிழிந்தது அப்படியே உன் ராஜியமும் இருக்கும் என்று சொல்லி அவனை விட்டு கடந்து போனார் அதன் பின்னர் சவுலை சாமுவேல் சந்திக்கவே இல்லை. வேதத்தில் ஆபிரகாம் கிதியோன், மோசே, யாக்கோபு, ஈசாக்கு, தாவீது போன்ற பரிசுத்தவான்கள் பெரிய வெற்றிகள் கர்த்தரால் கிடைத்து என்று கருதி கர்த்தருக்கு பலிபீடம் கட்டினார்கள். இவனோ தன் சுயத்தை ஸ்தாபிக்க தனக்கு ஒரு ஜெய்ஸ்தம்பம் கட்டினான். எந்த இடத்தில் கர்த்தரை விட்டு விட்டு நமது திறமைகள், நமது நுணுக்கங்கள், நமது ஜெபங்கள், நமது அபிசேசகம், நமது வரங்கள் முன்னே நிற்கிறதோ அங்கு நாம் நமக்கு சுயஸ்தம்பம் கட்டுகிறோம் என்று அர்த்தம். கர்த்தரை கனம் பண்ணினால் அவர் நிச்சயம் நம்மை கனப்படுதுவார். இன்று தேவ மகிமை திருடப்டுகிறது. ஒரு புரோகிராம் நடந்தால் கூட நமது திறமையை/status ஐ வெளிப்படுத்தும் platform ஆகத்தான் அதை பார்க்கிறோமேயன்றி கர்த்தருக்கு மகிமையைப் கொடுக்கும் இடமாக அதை நாம் பார்ப்பதில்லை. அப்படி யாராவது தேவனை மகிமைப்படுத்தினால் கூட அது நமக்கு அவமானமாக இருந்தால் நாமும் நமக்கு ஏதோ ஜெயஸ்தம்பம் கட்டுகிறோம். இதன் முடிவில் தாவீது அபிசேகம் செய்யப் படுகின்றார். சவுலின் மேல் பொல்லாத ஆவி வருகின்றது.
D. Split ஆளத்துவம் கொண்டவனாக உணர்ச்சி வசப்பட்டு ஈகோ வில் சிக்கிக் கொள்கிறான் (I சாமு 16, 17, 18 ஆம் அதிகாரங்கள்)
பொல்லாத ஆவி அவனுக்குள் அவனை கொடுமைப் படுத்தியது. கலங்கடித்தது. சுரமண்டலம் வாசிக்கும் போது ஒரு நிலையும் மற்ற நேரங்களில் ஒரு நிலையுமாக காணப்பட்டான். சிலர் சபைக்குள் ஒன்றாகவும் சபைக்கு வெளியே ஒன்றாகவும், சிலர் பதவி கிடைத்த பொழுது ஒன்றாகவும், அதற்கு முன் அல்லது பின்னர் ஒன்றாகவும் இருப்பதை நாம் கவனிக்கும் போது இந்த இரட்டை ஆழத்துவத்தில் ஒன்றுத்தான் என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
இந்த ஆழத்துவத்தின் அடையாளயங்கள் சவுல் வாழ்வில் தொடர்ந்து பிடித்து அவனை அழித்தே விட்டது! அவைகள் என்ன அடையாளங்கள் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
- அதிகமாக பயப்படுகிறான். சவுல் கோலியாத்திற்கு விரோதமாக யுத்தம் செய்யாமல் தன்னை ஒளித்துக் கொண்டு பதில் நபரை அதாவது substitute தேடுகிறான். நாற்பது நாட்கள் கோலியாத் வீர வசனம் பேசுகின்றான். சவுல் வெளியே வரவில்லை. தாவீதோடு கர்த்தர் இருக்கிறார் என்பதை அறிந்து பயப்படுகிறான். முடிவில் அதுவே அவனை பெலவீனப்டுத்தியது. தன்னை ஒரு shell க்குள் அடைத்துக் கொண்டு inferiority complex க்குள் அடைத்துக் கொள்கிறான்.
- பிறர் மேன்மையை சகித்துக் கொள்ள முடியாமை பிறர் மேன்மைப் படும் போது அல்லது புகழப் படும் போது எரிச்சல், பொறாமை, விசனம் கொள்ளல். தாவீது கொன்றது பதினாயிரம் என்று சொன்ன போது அவனால் சகிக்க முடியவில்லை. காய் முகாரமாக பார்த்தானான். சும்மா யாராவது நம்மை முறத்துக் கொண்டே இருந்தால் அது தான் காரணம். சும்மா நமக்கு பிறர் மேல் எரிச்சல் வந்தாலும் அது தான் காரணம்.
- தன் கடமையை உணராமல் பொறுப்பை தட்டிக்களிக்கின்றான். தாவீதை தனக்குப் பின் உருவாக்க வேண்டியவன் அவனை துரத்துவதில் அதீத கவனம் செலுத்துகிறான். இவன் செய்ய வேண்டிய யுத்தத்தை தாவீதும் பெரும்பாலும் யோனத்தானும் செய்கின்றார்கள்.
- தனக்கு எதிராளியாக இல்லாத ஒருவரை எதிராளியை போன்று பாவித்து அதில் நேரத்தை விரயம் செய்கின்றான். இந்த தாவீதை தனக்கு போட்டி போன்று கருதி, அவனை எதிர்ப்பதில் அதிக நேரத்தை, பணத்தை, எனர்ஜியை, செலவிடுகிறான். அவனை ஈட்டியை கொண்டு கொல்லப் பார்க்கின்றான். தனது எதிராளி கையினால் கொல்லப் பார்க்கின்றான். தனது மகள் மற்றும் மகன் கையில் கொல்லப் பார்க்கின்றான். தனது சேவகரை கொண்டுக் கொல்லப் பார்க்கின்றான்.
தனது போட்டியாளர்களுக்கு உதவி செய்கின்றவர்கள் களையும் வேரறுக்கப் பகையை வளர்க்கின்றான். தாவீதுக்கு உதவி செய்கின்றார்கள் என்று ஆசாரியர்கள் 85 பேரைக் கொன்று போட்டான். தன் சொந்த மகனையே சபிக்கின்றான். பராக்கிரமசாலிகளை தன் பக்கம் சேர்த்துக் கொண்டு காரணமற்ற நபரை கொல்லப் பார்க்கின்றான். - திடீர் திடீர் என்று தன் சுபாவத்தை மாற்றிக் கொள்கிறான். திடீர் என்று அழுகிறான். திடீர் என்று தீர்க்கதரிசனம் உரைக்கின்றான். திடீரென்று தாவீதை என் மகனே என்கிறான். தன் சுபாவத்தில் ஸ்திரத் தன்மையற்றவனாக இருக்கின்றான்.
- தான் அழித்துப் போட்ட தான் வேண்டாம் என்று விட்ட அஞ்சனம் குறி சொல்கிறவர்களை தேடுகிறான். மொத்தத்தில் தான் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கை மற்றும் வழியை விட்டு விலகுகிறான். சாமுவேல் மற்றும் பரிசுத்தவான்களின் தொடர்பை துண்டிக்கின்றான். அதினால் இன்னும் பெலவீனப்படுகின்றான்.
- முடிவில் வெட்கம் மற்றும் தோல்வியின் எண்ணம் மேற்கொள்ள தற்கொலை செய்கின்றான்.
ஆனால் தாவீதோ!
👉🏿 சிறுவயதில் இருந்தே கர்த்தரை நம்புகிறான்
👉🏿 வாசிக்கிறதில் தேறுகிறான்.
👉🏿 பராக்கிரமசாலியாக மாருகின்றான். சவுல் செய்ய வேண்டிய யுத்தங்களை கூட முன்னின்று நடத்துகின்றான்.
👉🏿 காரிய சமர்த்தன் என்கிற பேர் பெற்று புத்திமானாக நடக்கின்றான். சகல இஸ்ரவேலரால் நேசிக்கப் படுகிறான்.
👉🏿 அபிசேகம் பண்ணப் பட்டவர் மேல் கைப்போட கூடாது என்பதில் உறுதியாக இருங்கின்றான். அது தன்னை எதிற்க்கிறவராக இருந்தாலும் ஆசீர்வாதமாக மாறுகின்றான். அப்படிப் பட்டவர்களை நேரடியாக எதிர்க்காமல் அவர்களுக்கு விலகி ஓடுகின்றான்.
👉🏿 தான் செய்த தவறை உணர்த்திய போது அதை ஏற்றுக் கொண்டு கதறி அழுது மனம் திரும்புகின்றான்.
👉🏿 கர்த்தருடைய காரியங்கள் மேல் வாஞ்சை தாகம் கொண்டு, கர்த்தருடைய நாமத்தை துதித்து, மகிமைப் படுத்தி பலிபீடம் கட்டி ஆலயம் கட்ட பொருட்களை சவதரிக்கின்றான். துதிக்க ஆசாரியர்கள் லேவியற்களை ஏற்படுத்துகின்றான்.
👉🏿 கடைசியாக தன் ஸ்தானத்தில் தன் மகனை ராஜாவாக அபிசேசகம் செய்து, நல்ல ஆலோசனை கொடுத்து, சிங்காசனத்தை கொடுத்து கிறிஸ்துவின் முன்னோடியாக விளங்குகின்றான்.
கர்த்தர் தாமே தாவீதுக்கு அருளின கிருபைகளை நமக்கு தந்து, சவுலின் ஆவிகளை வெற்றிக் கொள்ள உதவி செய்வாராக!
செலின்