பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்

Share this page with friends

சென்னை; 30, அக் 2022

தீர்க்கதரிசி ஊழியத்தினை மகிமையாக நிறைவேற்றிய பாஸ்டர். S. ஜான் முத்து அவர்கள் தனது முதுமையின் காரணமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார்.

கடந்த இரு தினங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளையில் இரத்த உறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் 30, அக்டோபர் (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

திருமணம் செய்துகொள்ளாமல் அண்ணகர் என்ற நிலையில் தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றி வந்தவர் போதகர் எஸ். ஜான் முத்து.

திருவணாமலை மாவட்டத்தினை சேர்ந்த இவர் மருதோன்றி பூங்கொத்து என்ற இவரது நிகழ்ச்சி ஆறுதல் எஃபம் மூலம் பிரசித்திப்பெற்றவை. இவர் தனது வாழ்நாளில் நூற்றுக்கணக்கான மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ளார். விதவைகள் மற்றும் ஆதரவற்றோர்களின் நல்வாழ்விற்கு ஆதரவளித்து பராமரித்துள்ளார்.

பாஸ்டர் ஜான் முத்து அவர்களின் நல்லடக்க ஆராதனை 31, அக்டோபர் 2022 (செவ்வாய் கிழமை) அன்று பிற்பகல் 2.30 மணிக்கு போதகரின் சொந்த ஊரான திருவணாமலை மாவட்டத்திலுள்ள இளங்குன்னி கிராமத்தில் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

போதகரை இழந்து வாடும் சபையார், குடும்பத்தார், உடன் மற்றும் உதவி ஊழியர்களின் ஆறுதலுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி


Share this page with friends