பாதத்தைக் காணிக்கைப் பெட்டியாக்கிய சபையார் வித்யா’வின் பார்வை

Share this page with friends

காணிக்கைப்
பெட்டியில்லாத சபை

எனவே, அந்த சபையார்
அப்போஸ்தலருடைய
பாதத்தையே 
காணிக்கைப்
பெட்டியாக்கிவிட்டார்கள்

பாதம் ஒன்றே போதும்!

விழுந்து வணங்குவதற்கல்ல
விற்றத்தைக் கொண்டுவந்து
பாதத்தில் வைத்துவிடுவதற்கு!

(அப்போஸ்தலர் 4:35,37 / 5:3)

இன்றைய
காணிக்கைகளும்
தசமபாகங்களும்  
சில இடங்களில்
பதிவேடுகளில்
இடம்பிடிக்கின்றன

இன்னும் சில
காணிக்கைகள்
வங்கிகளில் வட்டிக்காக
வரிசையில் காத்துக்கிடக்கின்றன

அன்றைக்கு,

அக்கவுண்ட் நோட்டு இல்லை
காணிக்கை,  கைவீசிக்கொண்டு
வங்கி வாசலுக்குச்
செல்லவில்லை 
காசுக்காரர் வசம்
சிக்கிக்கொள்ளவுமில்லை
 

கால் சிக்கிக்கொள்ளாதபடி மட்டுமல்ல
காணிக்கையும் சிக்கிக்கொள்ளாதபடி
காத்தார்

அவனவனுக்குத்
தேவையானதற்குத்தக்கதாய்ப்
பகிர்ந்துகொடுக்கப்பட்டது;
(பதுக்கிவைக்கப்படவில்லை)
அவர்களில் ஒருவனுக்கும்
ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.


நீங்கள்
பண ஆசையில்லாதவர்களாய் நடந்து,
உங்களுக்கு இருக்கிறவைகள்
போதுமென்று எண்ணுங்கள்
;

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை,
உன்னைக் கைவிடுவதுமில்லை என்று
அவர் சொல்லியிருக்கிறாரே.

அதினாலே, நாம் தைரியங்கொண்டு:
கர்த்தர் எனக்குச் சகாயர்,
நான் பயப்படேன்,
மனுஷன் எனக்கு என்னசெய்வான்? என்று
சொல்லலாமே (எபிரெயர் 13:5,6)

குறைந்தபட்சம், இந்த மே
மாதத்திலாவது சொல்லலாமே

அக்காலத்தில்
அக்கவுன்டென்ட் இல்லை
ஆடிட்டிங் இல்லை –
ஆனால்
அற்புதங்களுக்குப்
பஞ்சமேதுமில்லை

அந்த அலங்கார வாசலில்
நாற்பது ஆண்டுகளாக
ஒரு சப்பாணியை,
அந்த சபையாரும் ரபீ’மாரும்
பிச்சைக்காரனாகவே

வைத்திருந்தார்கள்

அபிஷேகம் பெற்றவர்கள்
நுழைந்ததும்
அவனைப் பார்த்து
எங்களை நோக்கிப்பார்
என்றார்கள்

பிச்சை போடுவதற்கல்ல,
நிவாரணம் கொடுப்பதற்குமல்ல

பிச்சைக்காரனை
பிரதராக்குவதே
அப்போஸ்தலரின் நோக்கம்

(அப்போஸ்தலர் 3)

இப்படியே எழுதி, எழுதி 
விசுவாச விழிப்புணர்வை
உண்டாக்குவதே, இந்த
வித்யா’ வின் நோக்கம்

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள் ,மதுரை -14

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends