100 நாடுகளில் படமாகும் இயேசுவின் 12 சீடர்கள்

Share this page with friends

உலகில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மொழிகளில் கிறிஸ்துவ வரலாற்று படங்கள் வெளிவந்திருக்கிறது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயேசுவின் 12 சீடர்கள் என்ற வரலாற்று படம் தயாராகிறது. இதனை மீடியா டைம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்டாப் முகமது தயாரிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் இயேசுவின் 12 சீடர்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்களும், ஆச்சர்யங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த படத்தை என்னுடைய மீடியா டைம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறேன். 100 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ் தவிர மற்ற மொழிகள் அனைத்திலும் உருவாக்க உள்ளோம். இயேசுவின் 12 சீடர்கள் பற்றி அறிந்து கொள்ளும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும் .

நான் ஏற்கனவே காதல் கிறுக்கன், கிரிவலம், ரோஜா ஐ.பி.எஸ் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறேன். தமிழ், ஆங்கிலம். இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 300க்கும் அதிகமான படங்களை இந்தியா வெங்கும் வினியோகம் செய்துள்ளேன். இந்தப் படம் தமிழ் திரை உலகின் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

அர்ஜுன், மம்முட்டி இருவரும் சேர்ந்து நடித்து வந்தே மாதரம் படத்தை இயக்கிய நாகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜனவரி 1ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.


Share this page with friends