மாமியை அனல் மூட்டிய மருமகள்! வித்யா’வின் விண் பார்வை

Share this page with friends

மோவாபின் தீ
ஓர்பாளை வாரிக்
கொண்டது


பாழாய்ப் போன
பத்தாம் வருஷத்தின்
முடிவில்

பரிசுத்தரைப் பற்றிய நெருப்பு  
ரூத்தைப் பற்றிக்கொண்டு
பற்றியெரியத் துவங்கியது


உள்ளத்தில் நல்ல உள்ளம்
நெருப்புள்ள உள்ளம்
பொறுப்புள்ள உள்ளம்
அதுவே ரூத்தின் உள்ளம்

சாபம் நிறைந்த
வீட்டிலிருந்து  
மோசம்போக்கும்
மோவாபிலிருந்து

ரூத் என்ற நெருப்பு
சரித்திரம் படைக்க
புயலென
புறப்பட்டுவிட்டது


அந்த நெருப்பு
கசப்பு என்று தன்னை
அழைத்துக்கொண்ட
மாமி நகோமியை  
பற்றிப் பிடித்து
கசப்பைச் சுட்டெரித்து
சாம்பலாக்கிவிட்டது

ரூத்தின் உள்ளத்தில்
பற்றியெரிந்த நெருப்பு
வீசும் காற்றில்
அணைந்துபோவதற்கு
முள்ளில் பற்றின
நெருப்பு அல்ல


உள்ளத்தில் பற்றின
நெருப்பு  


தரித்திரத்தை சுட்டெரித்து  
சரித்திரம் படைக்க
புறப்பட்ட நெருப்பு

நகோமி என்ற
பெயரை மாற்றி
மாரா என்று
கூப்பிடுங்கள் என்றவளை
மாற்றிய நெருப்பு  

போவாஸ் என்ற
பணமும் குணமும்
படைத்த மனிதனை
பரிசுத்த வேதாகமத்தில்
இடம்பிடிக்க செய்த ரூத்


உண்மையாகவே
பற்றியெரியும்
நெருப்புத்தான்.


உங்கள் உள்ளத்தில்
சர்வ வல்லவரைப் பற்றிய
நெருப்பு பற்றியெரிகிறதா?


Pastor J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director – Literature Dept. Tamil Christian Network
Radio Speaker – Aaruthal FM
NALLAASAAN (International Award ) Malaysia 2021
91-77080 73718 (WhatsApp)


Share this page with friends