நம்மை கட்டுப்படுத்தும் நான்கு பிரமாணங்கள்

Share this page with friends

  1. மாம்சப் பிரமாணம்

இந்த பிரமாணத்தின் கிரியை வெளியரங்கமாக இருக்கிறது. பகை, பொறாமை, சண்டை, இச்சை etc போன்றவை. இவைகளால் தூண்டப்பட்டு இந்த கிரியைகள் பெலன் கொண்டு மரணத்தை பிறப்பிக்கும்.

  1. நியாயப் பிரமாணம்

இது யார் நல்லவன், யார் நீதி உள்ளவன், யார், யாரை விட உயர்ந்தவர், என்கிற அடிப்படையில் செயல்படும். தனக்கு எதிராக ஒருவர் தீது செய்தால், அந்த தீதை செய்தவர் திரும்பி அனுபவிக்க வேண்டும் என்று சொல்லும் பிரமாணம். பிரமானத்தின் அடிப்படையில் தங்களை நீதிமான் என்று சொல்லி கிருபை, இரக்கம், தயவு போன்றவற்றை விட்டு விடும் நிலை. இந்த பிரமாணம் சுய நீதி, மாயம், பரிசேயம் போன்றவற்றை பிறப்பிக்கும்.

  1. கிறிஸ்துவின் பிரமாணம்

பாவம் செய்ய பெலன் இல்லாமல், சிலுவையில் தன்னை அறைய விட்டு கொடுத்து, சிலுவையோடு தன்னை அடையாளப் படுத்தி அவமானங்கள், எதிர்மறையான காரியங்கள் நேரிடும் போதும் அவைகளுக்கு ரியாக்ட் reaction செய்யாமல், ஏற்றுக் கொள்ளும் பிரதிப்பலிப்பின் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட பிரமாணம். இந்த பிரமாணம் அன்பு, சந்தோசம், கிருபை சமாதானம், பொறுமை etc போன்றவற்றை பிறப்பிக்கும்.

  1. பரிசுத்த ஆவியின் பிரமாணம்

இவ்விதமாக கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றும் போது ஆவியின் கனிகள், மற்றும் வரங்களால் செயல்படும் பிரமாணம். இந்த பிரமாணத்தில் செயல்பட்டால், பெலன், வல்லமை, அதிகாரம், வரங்கள், கனிகள் மற்றும் பின்வரும் நன்மைகளை தருகிறது.

ஆக்கினை தீர்ப்பு இல்லை.

அவிக்குரிய ஜீவனின் சிந்தை உருவாகும்

சாவுக்கேதுவான சாரீரம் உயிர்பிக்கப்படும்.

அப்பா பிதாவே என்று கூப்பிடத் தக்க புத்திர சுவிகார தன்மை.

பிதாவின் புத்திரரும் சுதந்திரரும் ஆக அழைக்கப்படுகிரோம். தெரிந்து கொள்ளப்படுகிரோம்.

மகிமைப்படுத்தப் படுகிறோம். கனப்படுத்தப் படுகிறோம்.

கிறிஸ்துவில் அதிகம் அன்பு கூர உந்தப்படுகிறோம். அதினால் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.

நமது பலவீனத்தில் ஆவியானவர் வேண்டுதல் செய்கின்றார். கிறிஸ்துவும் விண்ணப்பம் செய்து நமக்கு உதவி செய்கிறார்.

கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றும் போதும் ஆவியின் பிரமாணம் தானாக செயல்படுகிறது. எனவே இரவும் பகலும் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்து இருந்தால் ஆவியானவர் நமக்குள் வாசம் செய்து, அவரால் நிறைந்த ஒரு வாழ்வை பெற கர்த்தர் உதவி செய்வாராக!

செலின்


Share this page with friends