கிறிஸ்தவத்தின் மகிமை!

மனிதன் உருவாக்கின கடவுள்களை கொண்டவைகள் பிற மதமாக இருப்பின், கிறிஸ்தவ மார்க்கம் மனிதனை தேவனே அவர் சாயலில் உருவாக்கினார் என்கிற சத்தியத்தை பெற்ற மெய்யான மார்க்கம்.
நெருப்பு மற்றும் யாக அக்கினி கொண்டு பலியிடும் வழக்கங்களை கொண்ட மதங்கள் இருப்பினும், வானத்தில் இருந்து அக்கினியை அனுப்பி பதில் தந்த சரித்திரத்தையும், அதே நெருப்பு அக்கினியில் இறங்கி வந்து அதோடு உலாவி விடுதலை கொடுத்த சரித்திரத்தை கொண்ட உன்னத அக்கினியின் வல்லமை கொண்ட மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவம்.
உலகத்தின் ஆகாரத்தை கொண்டு உணவு கட்டுப்பாடு விதிக்கும் மதங்கள் இருப்பினும், பூமிக்குரிய ஆகாரத்தை காட்டிலும் தூதர்கள் உண்ணும் உணவை கொடுத்து, சாதாரண உணவுகளை, குறைந்த அளவில் உள்ள உணவுகளை அல்லது சரீர உணவு இல்லாமல் கூட ஒருவனை வாழவைக்க ஜீவ அப்பத்தை கொடுக்கும் நல்ல நித்திய வார்த்தை உள்ள மார்க்கம் தான் இந்த கிறிஸ்துவின் மார்க்கம்.
இராணுவ அதிகாரம், காவல்துறை அதிகாரம் மற்றும் அரசாங்க அதிகாரத்தை மையமாக கொண்டு செயல்படும் மதங்களை தாண்டி வான அக்கினி சேனைகளை பணிவிடை தூதர்களை கொண்டு அரசாங்கம் இழுத்து மூடிய சிறைச்சாலைக்குள் அதே தூதர்களை அனுப்பி விடுதலை ஆக்கின சரித்திரம் கொண்ட தூதர்களின் மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவம்.
மனிதனை இரச்சிக்க மனிதனை புரியாத மிருக அவதாரங்கள் கொண்டும், இரத்த பலிமுறைகளை கொண்டும் காப்பாற்றுகிரோம் என்று சொல்லும் மதங்கள் இருப்பினும், அதே மனிதனை மீட்க மனிதத்துவத்தை அறிந்த பாவமற்ற மனிதராக வந்து தன்னையே பலியாக கொடுத்து தன் இரத்தம் சிந்தி அந்த பரிசுத்த இரத்தத்தினால் மனிதனை, அவன் ஆன்மாவை சுத்திகரித்து மீட்கும் பரிசுத்த மீட்பரை கொண்ட பரிசுத்த மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவம்.
கற்களையும் கோபுரங்களையும் எண்ணையாலும்,மற்ற இதர பொருட்களாலும் அபிசேகம் செய்து பொய்யான மோட்ச வாக்கு கொடுக்கும் மற்ற மதங்கள் இருப்பினும், தன்னை விசுவாசிக்கும் மக்களை உள்ளத்தில் சுத்திகரிக்க, அவனை பெலபடுத்த அவன் மேல் அபிசேகம் பொழியும் பரிசுத்த ஆன்மா கொண்ட பராக்கிரம மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவம்.
தன் மத்தத்தை உயர்த்தி காட்ட பிரமதத்தை அவதூறு செய்து, கேலி செய்து, அத்துமீறி, பயமுறுத்தி, மிரட்டி பண்ணிய வைக்கும் அதிகார மோகம் கொண்ட மற்ற மதங்கள் இருப்பினும், தன்னை போல பிறரை நேசி என்றும், ஜீவன் வேண்டுமெனில் அதை இழக்க துண்ணிந்து கொள் என்றும், சிலுவையின் உபதேசம் தான் பெலன் என்றும், வாதத்தை விட அன்பினால் தான் ஒருவன் உலகத்தை ஜெயிக்க முடியும் என்று அன்பை கொடுத்த அன்பின் மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவம்.
செத்த பின்னர் அடித்து ஒரு சாரார் தான் நல்ல பிறவி மற்றவர் எல்லாரும் கீழ் பிறவி என்று ஒதுக்கும் மதங்கள் பல இருப்பினும் நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்று சொல்லி என்னை விசுவாசித்து தால், என்னை போல உயிர்த்தெழுந்து மாறுரூவம் ஆகி என்றும் நித்திய வெளிச்சத்தில் நடப்பீர்கள் என்கிற நித்திய நம்பிக்கை கொடுக்கும் நம்பிக்கை மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவம்.
இன்னும் அதிகம் உண்டு, அடுக்கி கொண்டே போகலாம்! எனவே எங்களிடம் உள்ளதை உங்களுக்கு தருகிறோம், நசேரெயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து ஆவியில் நடக்க நமது மன கண்களை கர்த்தர் பிரகாசிக்க செய்வாராக!
செலின்